ஞாயிறு 15 2015

தரம் தாழ்ந்து போன வாக்காளர்கள் நிறைந்த தமிழகம்...

படம்- ஓட்டுக்கு பணம் வாங்கும்காட்சி.

பெங்களுரு சிறப்பு நீதி மன்றத்தில் 18 ஆண்டுகளாக ஜெ.-கும்பலால் இழுத்தடிக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில், நீதிபதி டி.குன்ஹா நன்கு ஆராய்ந்து எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல், எந்த ஆசை குழிகளுக்கும் விழாமல் பணத்துக்காக சோரம் போகாமல் துணிவுடன் ஒரு ரூபா சம்பளத்தில் உழைக்க வந்ததாக பீத்திக் கொண்டு  66கோடியே  65 இலட்சம் சம்பாரித்த  கிரிமினல் கும்பலை  சட்டத்தின்படியே நேர்மையாக தண்டித்து தீர்பளித்தார்.

ஆனால் சிறீரங்கம் வாக்காளர்களோ....  ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி பதவியிழந்த முதலாவது முதல்வர் என்ற சிறப்பு தகுதியை அடைந்ததன் விளைவாக நடந்த இடைத்தேர்தலில் இந்தக் கிரிமினல் கும்பல் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராகவோ அல்லது இந்த இடைத் தேர்தலை புறக்கணித்தோ  ஜெ கும்பலின் முகத்தில் கரியை பூச ஒரு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், எவ்வித அறநெறியுமின்றி, மனம் உறுத்தாமல்  வாக்காளர் என்ற தகுதியில் எந்தவித ஒரு பொதுச் சிந்தனை இல்லமால்.. ஊழல் கும்பல்கள் கொடுத்த  ரூ5000-க்கும் ரூ2000-க்கும் எந்தவித உறுத்தல் இல்லாமல் தன்மானமின்றி தரம் தாழ்ந்து பணத்துக்காக தரம் தாழ்ந்து  விலை போனார்கள்.

ஓட்டுக்கு பணம் கொடுத்து பெற்ற சிறீரங்கம் தேர்தல் வெற்றியானது  இந்தக் கொள்ளைக் கும்பலுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக ஆகிவிட்டது. தமிழ் சமுதாயத்தை அடிமைகளாகவும், தன்மனம் இழந்த இழிபிறவிகளாகவும். கை யேந்திகளாகவும்  சீரழித்த  ஜெ கும்பலின் சிறீரங்கம் இடைத்தேர்தல் வெற்றியானது. இதுவரை இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்து போன வாக்காளர்கள் நிறைந்த ஆபத்தான தமிழகமாக மாற்றிவிட்டது.

10 கருத்துகள்:

  1. ஏ தாழ்ந்த தமிழகமே ..நீ சிந்திப்பதுதான் எப்போது ?

    பதிலளிநீக்கு
  2. மானக்கேடு இவங்கெளெல்லாம் சோத்தைத்தான் திங்கிறாங்களா ?
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்கள் அல்லவா...சோற்றைத்தான் தின்கிறார்கள்...

      நீக்கு
  3. மிகவும் சரியாகவே தமிழ் சமுதாய சீரழிவை சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. சீரழிவு எப்போதோ ஆரம்பித்து விட்டது...

    பதிலளிநீக்கு
  5. ஓட்டுக்கு பணம் என்பது எல்லோரும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள், நாம் ஏன் வாங்க வேண்டும், நாம் வாங்கவில்லை என்பது யார் கண்டது? மாற வேண்டியது நாம் தான். அனால் எப்போ, தாங்கள் சொன்னது எங்தளவுக்கு? நாம் தரம் தாழ்ந்து போய்விட்டோம் இப்ப அல்ல, எப்போவோ, என்று இலவசங்களுக்கு வரிசையில் நின்றோமோ அன்றே, தேர்தல் நேர வாக்குறிதிகளைப் பாருங்கள், யார் எவ்வளவு இலவசம் தருகிறார்கள் என்று, ஏதேனும் சரியான பயணுள்ள வாக்குறுதிகள் உண்டா? சீர் தூக்கிப் பார்க்கும் தூலா கோல் நாம். ஆனால் கோமாளிகளாக,,,,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...