படம்- |
சொக்கனின் மனைவியான சொக்கியும், சொக்கியின் கனவனான சொக்கனும் கடைத் தெருவுக்கு சென்று வீட்டுக்கு தேவையான சில சில்லரை சாமான்களை வாங்கி, ஆளுக்கொரு சுமையாக சுமந்து கொண்டு வீதி வழியாக உலா வந்து கொண்டு இருந்தனர்.
அப்படி வீதி வழியாக வந்து கொண்டு இருந்த பொழுது ரோட்டு ஓரமா இருந்த சனியை ..அதாவது அரசு சாராயக்கடையைப் பார்த்தும் சொக்கனுக்கு கைகால் படபடத்தது. உடன் சொக்கி வந்து கொண்டு இருந்ததால்... அந்தப் படபடப்பை கஷடப்பட்டு அடக்கிக் கொண்டு. கவனமில்லாமல் பறிகொடுத்தவன். போல ஏக்கத்துடன் கடையை பார்த்தவாறே நடந்து வந்து கொண்டு இருந்தான்
தன் பேச்சுக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்த தன் கனவன் திடிரென்று பதில் சொல்லாமல் வருவதைக் கண்டு சொக்கனை பார்த்த சொக்கி.. சொக்கனின் பார்வையை செல்வதைக் கண்டு . சொக்கனின் பார்வையை தன் பக்கம் திருப்பினாள்...
வீதியில் போவோர் சொக்கியை உற்றுப்பார்த்த வண்ணம் சென்றதை கவனித்த சொக்கன்.. சொக்கியை கவனித்தான். சொக்கியின் மாறாபபு ஒரு பக்கமாய் விலகி இருப்பதைத்க்கண்டு. சனியின் மேல் உள்ள பார்வையை விலக்கிவிட்டு, முன்னால் சென்று கொண்டு இருந்த சொக்கியை நெருங்கிச் சென்று சொக்கியிடம் மாறாப்பை சரி செய்யச் சொன்னான்.
சொக்கி புன்னகை புரிந்தவளாக..... நீ அங்க பார்வையைச் செலுத்தியதால்தான் ரோட்டுல போறவன் இங்க பார்வையை செலுத்துறான். என்றான்.
சொக்கியின் மாறாப்பு சரியா இரருப்பதைக் கண்ட சொக்கன் சரி..சரி... சீக்கிரமா... வீட்டுக்குப் போகலாம் என்று எட்டு வைத்தான். இரண்டு மூன்று சாராயக் கடையை கடந்து வந்தபோது.... சொக்கி கேட்டாள்.
ஏ..மச்சான். அடுத்த வருசம் சாராயக் கடையை எல்லாம் அடச்சிடுவாங்களே!!
அப்போ..இந்தக் குடிகாரன்க... எல்லாம் குடியை விட்டு விடுவாங்களா. மச்சான்.
சொக்கி கேட்ட இந்த கேள்விக்கு சொக்கனால் பதில் சொல்லமுடியவில்லை.. தீவிரமாக யோசித்துக் கொண்டே வந்தான்.
என்ன..மச்சான்.. நாங்.... கேட்டதுக்கு பதிலையே காணோம்..என்றாள்
நா..ஒரு கேள்வி கேக்றன்.. நீ பதிலச் சொல்லு.. அதிலே..நீ கேட்ட கேள்விக்கும் பதில் இருக்கும் என்றான் சொக்கன்..
அப்படியா......!! கேளு... பதிலச் சொல்றேன் என்றாள் சொக்கி.
சன் டீவிய மூடப்போறாங்களாம்.... அப்படி சன் டீவிய மூடிட்டா....சன் டீவி சேனல்ல வர்ர தொடர விடாம பாத்து வர்ர நீ... என்ன பன்னுவ.... என்று கேட்டான்.சொக்கன்
சொக்கி தாமதிக்காமல் பதில் சொன்னாள் “மூடிட்டா. அதுக்கென்ன பன்றது. அடுத்த சேனல்ல வர்ர தொடர பார்ப்பேன் என்றாள்.
சொக்கன் இப்போது சிரித்தான்.
சொக்கன் சிரித்ததை புரிந்து கொணடால் சொக்கி.
நீ சேனல மாத்திக்கிற மாதிரி , குடிமகனகளும் வேறு வழிய மாத்தி குடியை தொடருவாங்கே...டீ....என்றான். சொக்கன்.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடுமெனப் பூனை பயப்படுகிறது.
பதிலளிநீக்குசொக்கினேன்.
நன்றி
அந்தப் பூனைக்கு மட்டும்தான் உலகம் இரண்டுவிட்டது. எல்லாருக்குமா..அப்படி..... சொக்கியதுக்கு நன்றி!
நீக்குஆக, எப்படியும் திருந்த மாட்டார்கள்!
பதிலளிநீக்குதிருந்துவோர் திருந்துவார். மற்றவரெல்லாம் திருந்தமாட்டார்.
நீக்குHa Ha Super
பதிலளிநீக்குநன்றி!!!
நீக்குஆக எதுவுமே தொடரும்...!
பதிலளிநீக்குதொடரட்டும் எப்படியும் ஒரு முடிவு இல்லாமாலா..போகும்...
நீக்குஹஹஹஹஹ் அதானே! செம கேள்வி பதில்!!
பதிலளிநீக்குசொக்கியும் சொக்கனுமே இப்படி என்றால்... மற்றவர்கள்...இதுக்கு மேல்தான் அய்யா...
நீக்குமறுபடியும் பாண்டிச்சேரி படையெடுப்பு தொடருமா :)
பதிலளிநீக்குஎதுக்கு படையெடுப்பு... பண்டிச்சேரியே இங்கு வந்துவிட்டுச் செல்லும்..வலைப்பின்னல் இருக்கும்போது....
நீக்குஎதார்த்தமான பார்வையில் ஒரு புனைகதை. உண்மை நிலவரம் இதுதான். பானை தயாரிப்புகளுக்கு மவுசு வரும்.
பதிலளிநீக்குTha.ma.2
(நான் எழுதிய இந்த கருத்துரை ஏனோ வெளியாகவில்லை. ஆகவே மீண்டும் அனுப்பியுள்ளேன்)
தங்களின் கருத்துரை இப்பொழுதான் வந்துள்ளது அய்யா... நன்றி!அய்யா..
நீக்குசிறந்த பதிவு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/
நன்றி! அய்யா... இப்போழுதே சொடுக்கி எனது கருத்துரையை பதிவிடுகிறேன் அய்யா...
நீக்கு