அந்த நகரத்து
வழக்கு நீதி
மன்றத்தில்அமர்ந்து
இருக்கும் நீதிபதியின்
இருக்கைக்கு உயரே
அவரின் தலைக்கு
மேல் சுவற்றில்
வழக்கை தலையும்
பொக்கை வாயும்
கண் கண்ணாடி
அணிந்த ஒரு
கிழவனின் படம்
தொங்க விடப்
பட்டு இருக்கும்
நீதி மன்றதுக்கு
சென்று வந்தவர்களுக்கும்
கண்டு கொண்டவர்களுக்கும்
தெரியும் அந்தக்
கிழவன் யார்
என்று? புதிதாய்
நீதி மனறம்
செல்லும் இளையோரே
அந்தக் கிழவனை
இந்திய அரசியல்
சட்டத்தை வடிவ
அமைத்தவர் என்று
தப்பும் தவறுமாய்
நிணைத்து விடாதீர்கள்.
அந்தக் கிழவனின்
அந்தப் படம்
அங்கு இருக்க
வேண்டிய படமல்ல....
தப்பான இடத்தில்
தப்பானவர் படம்
மாட்டப் பட்டியிருக்கிறது.
Thappanavar Panama? Unclear
பதிலளிநீக்குநிறையபேர் தப்பான, ஆபத்தான இடத்தில் இருக்கின்றார்கள் நண்பரே
பதிலளிநீக்குசட்டம் அவருக்கு தெரியாது தான்...
பதிலளிநீக்கு'குமாரசாமி'க்கள் இருக்கும் இடத்தில் அவர் படம் இருந்தால் தப்புதான் :)
பதிலளிநீக்குதங்கள் பதிவு க்கு மிக நன்றி
பதிலளிநீக்குதப்பான இடத்தில்
பதிலளிநீக்குதப்பானவர் படம்
மாட்டப்பட்டிருப்பதை
சூழவுள்ள அறிஞர்கள் கண்ணுக்கு
எட்டவில்லையோ!
பகவான்ஜி சொன்னது போல் காந்தி படம் குமாரசாமிகள் இருக்கும் நீதி மன்றத்தில் இருப்பதை எதிர்க்கலாம்.
பதிலளிநீக்கு//புதிதாய்
நீதி மனறம்
செல்லும் இளையோரே
அந்தக் கிழவனை
இந்திய அரசியல்
சட்டத்தை வடிவ
அமைத்தவர் என்று
தப்பும் தவறுமாய்
நிணைத்து விடாதீர்கள்.//
அரசியல் சட்டத்தை வடிவ அமைத்தவர்கள் சட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கலாம்.
அதற்காக அந்தக் கிழவன் தான் இந்திய அரசியல் சட்டத்தை வடிவ அமைத்தவர் என்று இளையோரே,மாட்டோடு சண்டை போட்டு வீரம் காட்ட போராடிய தன்மான தமிழர்களோ தப்பும் தவறுமாய் நினைக்க வேண்டியதில்லை.