சார். வணக்கம்.....
வணக்கம்ப்பா....எப்ப வரச் சொன்னேன் ....இப்ப வந்து இருக்கீங்க....
உங்ககிட்ட வர்ரதுக்கு புறப்பட்டபோது.. சாமி கும்பிட ஒரு அம்பது பத்திரிக்கை வேனும்முன்னு ஒரு பார்ட்டி வந்துவிட்டார். எல்லாத்தையும் ஓட்டி முடிச்சாச்சு..உள்ளே ஒட்டுவது மட்டும்தான்..வந்த பார்ட்டி வற்புறுத்தியதால்..அம்பது பத்தரிக்கை ஒட்டி முடித்துவிட்டு வருவதற்கு நேரம் ஆகிவிட்டது. சார்.நீங்கள் மேட்டர் எல்லாம் எழுதி வச்சு இருக்கீங்களா சார்.
ஓ...எல்லாம் எழுதி வைத்துவிட்டு.உனக்காகத்தான் காத்திருக்கிறேன்ப்பா..
கொண்டாங்க..ஒரு தடவை உங்கள் முன் படித்து காட்டுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்..
சரி..படிப்பா......
அன்புடையீர் நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு2048 , வைகாசி...
சார், எல்லாரும் ஸ்ரீஹேவிளம்பி வருசம்ன்னுதான் எழுதித் தருவாங்க..நீங்க மட்டும் திருவள்ளுவர் ஆண்டு 2048ன்னு எழுதியிருக்கீங்களே..சார்......
அது என் மகன் சொன்னது ப்பா....இந்தா அவனிடமே கேட்டுக் கொள். தம்பி அவரிடம் அமைப்பிதழ் அடிக்க வருவரங்க எல்லாம் ஹேவிளம்பிதான் அடிக்கிறாங்களாம்...நாம மட்டும் திருவள்ளுவர் ஆண்டு 2048ன்னு போட்டுஎழுதி தந்ததில் இந்த பிரிண்டிங் தம்பிக்கு சந்தேகம் வந்திருச்சுாம் அது என்னான்னு அவருக்கு சொல்லுப்பா....
அண்ணே.... உங்களுக்கு தெரியாததா..எனக்கு தெரியப் போகுது....
தெரிஞ்சு என்ன செய்ய..அப்பப்ப ஞாபத்துக்கு வரனுமே...அப்படி வருவது கிடையாது நீங்க சொல்லுங்க சார். தெரிஞ்சுக்கிறேன்..
தமிழனா இருப்பவன் அழைப்பிதழ் அடிக்கும்போது கண்டிப்பா திருவள்ளுவர் ஆண்டுன்னு பொட்டுத்தான அடிக்கனும் ஆனா..அப்படி யாரும் அடிப்பதில்லைண்ணே... நமக்கு தமிழ் மொழிப் பற்று இருப்பதால் மஙக்காமல் அய்யன் ஆண்டை தொடருகிறோம்ண்ணே..... ஆமண்ணே..உங்களுக்கு இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறந்த கதை தெரியுமாண்ணே......
தெரியாது சார்,தெரியாமல்தானே உங்களச் சொல்லச் சொல்கிறேன்..
இரத்தின சுருக்கமா சொல்றேன்ணே...
சரி, சொல்லுங்க... நேரங்கிடைக்கும்போது நெட்டுல தேடி படிச்சுருக்கிறேன் சொல்லுங்க ..
ரெண்டு ஆண்களுக்கு பிறந்த 60வது குழந்தைகளில் 31 வதுதாக பிறந்த குழந்தைதாண்ணே இந்த ஹேவிளம்பி..இது ஆரிய புத்தாண்டுண்ணே....ஆரிய புத்தாண்டைத்தான் பல,சில்லு வண்டுகள்..புத்தாண்டா ஆக்கி விட்டு..அதையும் காலண்டருல அடிச்சுட்டாங்களா.....பாவி மக்க அதப்பாத்துதான் எல்லாரும் ஹேவிளம்பி வருடம்ன்னு எழுதுதுகண்ணே
அப்படியா......
ஆமண்ணே.....
சரி..அந்த ரெண்டு அம்பள யாரு சார்......
அது கிருஸ்ணனும் நாரதருமுண்ணே....
ஹா......ஹா......ஹா.....ஹேவிளம்பி வருட பிறந்த கதை இப்படித்தானா.... சொன்னதுக்கு நன்றி!! சார், ரெண்டு மூன்று நாள்ல புருப்ப தந்துடுறேன் சார்... வரட்டுங்களா...
சரி..வாங்கண்ணே....
ஆஹா இப்படித்தான் பிறந்துச்சா ?
பதிலளிநீக்குவள்ளுவர் ஆண்டு இருக்க
பதிலளிநீக்குவடமொழி வழி வந்த ஆண்டுகளை
பாவிப்பது தமிழுக்கு இழுக்கு!
தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் திருவள்ளுவர்ஆண்டைத்தான் பயன்படுத்த வேண்டும் நண்பரே
பதிலளிநீக்குஓ... அப்படியா ஜி...?
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஹேவிளம்பி பற்றி சரியாக சொன்ன உண்மைவிளம்பிக்கு வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்கு