செவ்வாய், அக்டோபர் 02, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-97.

 ராஜாவுடன் பேசிய குடிமகன்

Image result for டாஸ்மாக் குடிமகன்


அக்கு..டோபர் இரண்டு
விடுமுறை நாள்
தள்ளாடி தள்ளாடி
நடந்து வந்த
டாஸ்மாக் குடிகனை
கண்டதும் குரைத்தது
அந்த நாய்

குடி மகன்
அருகில் வந்ததும்
குறைப்பதை நிறுத்திவிட்டு
வாலை  வாலை
ஆட்டிய படி
அந்த குடிமகனை
உர்ரென்று பார்த்த
வண்ணம் காதுகளை
தூக்கி நிறுத்தியது.

குடி மகன்
பேசினான் ஏன்
ராஜா குரைப்பதை
நிறுத்தி விட்டாய்
குரை ராஜா
குரை நல்லா
குரை  ஸ்டெர்லைட்
திறக்கப்படுமுனு குரை
ராஜா.. மீத்தேன்
 ஹைட்ரோ கார்பன்
எடுக்கப்படுமுனு சத்தம்
போட்டு குரை
ராஜா.நீ
குரைக்கிறாயா  ஊளை
இடுகிறாயான்னு குடி
மகன்கள் தலை
முடியை பிச்சிகிட்டு
ஓடட்டும் ராஜா
நீ குரை ரா.....ஜா....

டாஸ்மாக் குடிமகன்
பொத்தென்று விழுந்தவுடன்
கேட்டுக் கொண்டிருந்த
ராஜா தலை
தெறிக்க ஓடியது......

1 கருத்து: