பக்கங்கள்

Monday, October 01, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-96

அது வேற வாய்......


Related imageகடந்த இரண்டு மாதங்களாக வேலை வேலைன்னு ஒரே அலுப்பு ... கூடவே எரிச்சல்........ சோர்வையும் எரிச்சலையும் போக்குவதற்கு என்ன செய்யலாம்..எங்கு போகலாம் என்று யோசித்த போது  தோழர் ஒருவர் அரங்க கூட்டத்திற்கு அழைத்த அழைப்பு நிணைவுக்கு வந்தது. நேரத்தை பார்த்தால் கூட்டம் தொடங்கும் நேரம் சற்று கடந்திருந்தது.

உடனே, கை கால் முகத்தை கழுவிக்கொண்டு தலையை கைகளால் வாரிவிட்டுக் கொண்டு அரங்கக் கூட்டம் நடக்கும் அரங்கத்தை நோக்கி கிளம்பினேன். அரைமணி நேர இடைவெளியில் அரங்கத்தை அடைந்த போது இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்க்கான இடத்தை தேடினேன்.. இடம் கிடைக்கவில்லை.. அரங்கத்திற்கு வெளியே ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு அரங்கிற்குள் நுழைந்தபோது அரங்கு நிறைந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக தெரிந்தது. விடுமுறை நாளில் இவ்வளவு கூட்டம் கூடுகிறதே! என்று...நான் காலதாமதமாக வந்ததால் முன் நிகழ்ச்சிகள் முடிந்து சிறப்பு பேச்சாளர்  பேசிக்கொண்டிருந்தார். 

இரண்டாவது முறையாக விபத்தொன்றில் காதில் அடிபட்ட காரணத்தால் கேட்புத்திறன் மோசமாகிவிட்டது. அதனால்....ஒலி பெருக்கியான ஸ்பீக்கர் அருகில் இருந்து கேட்டால்தான் ஓரளவு சிறப்பு பேச்சாளரின் பேச்சை கேட்க முடியும் என்பதால் ஒலி பெருக்கி ஸ்பீக்கர் பக்கத்தில் இடம் கிடைக்குமா? என்று ஸ்பீக்கர் பார்வையை ஓட விட்டேன். கூட்டத்தில் தெரிந்த தோழர்கள் மற்றும் நண்பர்களை பார்த்தபோது புன்னகையுடன் வண்க்கம் செய்துவிட்டு, உட்காருவதற்கு இடம் தேடினேன்.

ஸ்பீக்கர் பக்கம் அமர்திருந்தவர் எனது மனவோட்டத்தை அறிந்தவர் போல் தான் உட்கார்திருந்த சேரில் எழுந்து சென்றார் . அவருக்கு வணக்கம் சொல்லி இருக்கையில் அமர்ந்த பின்  சிறப்பு பேச்சாளரின் சிறப்புரையை கேட்கலானேன்.


சிறப்பு பேச்சாளர் பேச்சை கேட்க கேட்க  என் அனுபவமும் சேர்ந்து  ஆளும் மத்திய அரசு ஆட்சியாளரின் மீது கோபமும் வெறுப்பும்தான் எனக்கு ஏற்பட்டது.

எனக்கு ஏற்பட்ட கோபமும் வெறுப்பும் சரியா?  தவறா என்று  சிறப்பு பேச்சாளரின் பேச்சை படித்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

டீசல் விலை திடுக்கிட  வைக்கிறது!
பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது!
 கேஸ் விலை கவலைப்பட வைக்கிறது!
மண்ணெணணெய் விலையோ மரண அடி கொடுக்கிறது!
சாதரண மக்கள் எப்படி வாழ முடியும்???

இது காங்கிரஸ் ஆட்சியின் போது பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிலிசை பேசியது.ஆனால் இன்று “இன்று பெட்ரோல் விலை உயர்வை தடுக்க முடியாது, அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை ” என்கிறார் மத்திய அமைச்சர். கர்நாடக தேர்தலக்காக 20 நாட்களாக பெட்ரோல் விலை உயர்வில்லையே, ஏன்??

கேஸ் சிலிண்டர் விலையும் சுங்க வரியும் காப்பீட்டுக் கட்டணமும் உயர்ந்து கொண்டே போகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. பெரும்பாண்மை மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை தடுத்து நிறுத்த முடியதென்றால் இவர்கள் எதற்க்காக ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும்.

2014-ல் 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று 86 ரூபாய்.300 ரூபாயாக இருந்த கேஸ. சிலிண்டர் இன்று 900 ரூபாய்.இதுவரை  ஒன்பது முறை கலால் வரியை இருக்கிறது அரசு. கச்சா எண்ணெணையை சுத்திகரிப்பு செய்து ஒரு லிட்டர் ரூ 37.90 க்கு எண்ணெய் நிறுவணங்கள் கொடுக்கின்றன. அதுவே நமக்கு வரி மேல் வரி போடப்பட்டு 86 ரூபாயாக வந்து நிற்கிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாக்கிஸ்தானில் ரூ.51,பூட்டானில் ரூ.57, ஆப்கானில் ரூ.46, வாய்ச்சவடால் அடிக்கும் ஊர்சுற்றி மோடியால் ஏன்? பெட்ரோல் விலையை குறைக்க முடியாது???

கார்ப்பரேட்டு முதலாளிகளக்கு  வாராக்கடனோ  12 லட்சம் கோடி ரூபாய, அவர்களுக்கு வரி தள்ளுபடியோ 10 லட்சம் கோடி ரூபாய்,  வங்கியில் மினிமம் பேலண்ஸ் இல்லை என்று சொல்லி மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட தொகை 12 அயிரம் கோடி ரூபாய்,  இதில் பெட்ரோல் விலையை குறைத்தால் என்ன கேடு??? 

பணமதிப்பிழப்பின் பொது பேங்க் வாசலில் நின்ற லட்சக்கணக்கான மக்கள் அன்றே எதிர்த்துப் போராடியிருந்தால்  100 பேருக்கு மேல் செத்துப் போயிருப்பாங்களா???? லட்சக்கணக்கான  தொழில்கள்தான் அழிந்து போயிருக்குமா..?? கோடிக்கணக்கான மக்கள்தான் வேலை இழந்து நிற்பார்களா??

இன்று ஆளும் பா.ஜ.க மோடி அரசு பெரும்பாண்மை மக்களுக்கு எதிரானது. இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. சமூகநீதி அழிக்கப்படுகிறது. உயர்கல்வியே கார்ப்பரேட்டுக்கு தாரைவாரக்கப்படுகிறது.  இயற்கை வளங்கள்  வரைமமுறையின்றி அழிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

“ விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பை வழங்குவேன். கருப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்” என்றெல்லாம் பொய் பித்தலாட்டம் பேசியும் அள்ளி வீசியும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அனைத்திலும்  படுதோல்வி அடைந்திருக்கிறது.. இதனால் வரும் தேர்தலில் படுதோல்வி அடைவோம் என்ற பயபீதியில் பாசிசத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்போர், மாற்று கருத்து உடையவர்கள் கருப்பு சட்டங்களால் சிறை வைக்கப்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. கும்பல் நூற்றுக்கணக்கான சங்பரிவார் அமைப்புகளை உருவாக்கி சாதிவெறி, மதவெறி கலவரங்களை ஏற்ப்படுத்துகின்றனர். தலித்துகள், சிறுபாண்மையினர் எழுத்தாளர்கள்’ கொலை செய்கின்றது. இவர்கள் இந்த நாட்டின் எந்தவொரு சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படமாட்டார்கள். அதிகாரத்தை கைப்பற்றவும். தக்கவைப்பதற்கும் எந்த ஒரு படுபாதகத்திற்கும் அஞ்சமாட்டார்கள். 

இதை இனியும் சகித்துக் கொண்டு போனால்  நாயினும் கீழான வாழ்க்கைக்கு தள்ளப்படுவோம். பெயரளவிலான ஜனநாயக உரிமைகளும், வாழ்வுரிமைகளும் பறிக்கப்படும். ஒரு நொடியும் தாமதமின்றி மோடியின் பாசிச காட்டுதர்பாருக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்... நன்றி! என்று சிறப்பு பேச்சாளார் பல்வேறு நடைமுறை நிகழ்வுகளை விளக்கி தன் சிறப்புரையை முடித்தார்.


கூட்டம் சலசலப்பு எதுவும் இல்லாமல் அமைதியாக களைந்தது.

No comments :

Post a Comment

.........