வள்ளுவரால் கிடைத்த தர்ம அடி....
பார்ப்பதற்கு அவர் வள்ளுவரை போல இருந்தார். டேய்... அவரு வள்ளுவர்தாண்டா என்று என் மண்டையில் கொட்டி சொன்னார்என் அம்ம நான் இவரு வள்ளுவர்தான்னு படிக்காத உனக்கு எப்படியம்மா தெரியும் என்று கேட்டபோது..
என் அம்மாவுடன் வேலை செய்த அம்மா என் அம்மாவிடம் சொன்னார்..தான் வேலை பார்க்கிற வீட்டில் பெரிய போட்டாவ..சுவத்தில மாட்டி இருந்தாங்கடா...அந்த எஜமானோட முன்னோர்களா என்று நான் கேட்டதுக்கு இல்ல... தெய்வப்புலவர் திருவள்ளுவர்ன்னு சொன்னாங்கடா..அந்த படத்த பார்த்துதாண்டா சொல்றேன் இவரு திருவள்ளுவருன்னு-இந்த அம்மா சொல்றத கேளுடா முட்டாப் பயலே என்று என் - மீண்டும்என் தலையில் கொட்டினார்.
போம்மா போ... அவரு செத்து பல நூறு வருசமாச்சு இப்ப வந்து இவருதான் திருவள்ளுவருன்னு....சொல்லிகிட்டு..நா..பத்தாவதுல பத்து வருசமா படிச்சிருக்கேன் வள்ளுவரப்பத்தி எனக்கு தெரியாத போம்மா சும்மா... என்று
விட்டு கையில் புடித்திருந்த புத்தகத்தில்.... இருந்த வள்ளுவரின் கவிதை படித்தென்...
கடா அக்களிற்றின் மேல்
கட்டுபடாம் மாதர்
படாா முலை மேல் துகில்.....
படித்து முடித்த சிறுது நேரத்தில் மடார் மடரென்று அடி விழுந்தது. .. அய்யோ அம்மா... ஒனக்கு என்ன ஆச்சு அந்த அம்மா பேச்ச கேட்டு இப்படி அடிக்கிற என்று தடா புடா என்று எழுந்திருக்க முயன்று கண்ணை திறந்தால் டேபில் மேல் வைத்திருந்த சின்ன பலகை தலையில் விழுந்து அடிபட்டது...எப்படி என்தலையில் விழுந்தது என்று பார்த்தால் பூனை ஒன்று ஓடியது தெரிந்து..
என் அம்மா இறந்து மூன்று வருசமாச்சு..என் அம்மாமேல் இருக்கும் பயம் இன்னும் போகல...
ம்.. ம்.. தொடரட்டும்.
பதிலளிநீக்கு100 எண்ணிக்கை வரை தொடருகிறேன் நண்பரே!
நீக்குசிறப்பு
பதிலளிநீக்குதொடருங்கள்
நன்றி! தொடருகிறேன் நண்பரே!..
நீக்குதொடருங்கள் நண்பரே
பதிலளிநீக்குநன்றி! தொடருகிறேன் நண்பரே!....
நீக்குஅருமை
பதிலளிநீக்கு