வெள்ளி, நவம்பர் 08, 2019

இனி தகவல்கள் கேட்டால் மொட்டை கடுதாசி பதில்தான் கிடைக்கும்,


தகவல்அறியும் சட்டத்தால்   ஆங்கிலேயேனின் வழி வந்த குமஸ்தாக்களின் சிவப்பு நாடா  தனம் ஒழியும் என்ற நம்பிக்கையில்  சமூக ஆர்வலர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டே இருக்கிறது. மாவட்ட நிர்வாகம், மற்ற அலுவலங்களில் இல்லாத தகவல்கள் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் இருக்கும் என்பதால்...


தகவல் அறியும் சமூக ஆர்வலர்களின் தகவல் மனுவுக்கு உரிய தகவலை வழங்காமல் மொட்டை கடிதாசியை வழங்கி இருக்கிறது காஞ்சிபுரம் மவட்ட நிர்வாகம்...

அத்திவரதர் மகிமைகள். அத்திவரதரின் வரலாறு குறித்து  கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் நடத்தப்பட்டு பசையுள்ள, பசையில்லாத மக்களை பக்தி போதையில் ஆழ்த்தப்பட்ட நிகழ்வுகளில் சம்பந்தமாக..

அத்தீ வரதர் வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு?  சிறப்பு தரிசன அனுமதிச் சீட்டுகள் விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு?? பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி நகைகள் எவ்வளவு??? என்பன உள்ளிட்ட பல  தகவல்களை  , தகவல் சட்ட சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம்  தகவல்கள் கேட்டுயிருந்தனர்..

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மதிக்காத. மாவட்ட நிர்வாகமோ  தகவல் சட்டப்பிரிவின் ஆவணங்களின் பிரிவான 2(F)யை சுட்டிக்காட்டி சட்டப்பிரிவு 2(F)-ன்படி தகவல் அளிக்க முடியாது என்று சட்டப்பிரிவு 8 மற்றும் விலக்களிப்புகளை கூறாமல் மொட்டை கடிதாசியை போல் கொடுத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்...

இதே போல் கோவில் நிர்வாகம் வாங்கிய பல இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள அங்கவஸ்திரங்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய அங்கவஸ்திரங்கள் குறித்து காஞ்சி புரத்தை சேர்ந்த டில்லி பாபு என்ற தகவல் ஆர்வலர் கேட்ட தகவலுக்கும் தகவல் அளிக்க முடியாத நிலையில் இருப்பதாக  தெரிவித்துள்ளார் வரதராஜப் பெருமாள் கோயில் ஆணையர் தியாகராஜன்...

அத்தீவரதர் தரிசனக் கொள்ளையில் ஆதாரமாக இருந்த அத்திவரதர் ஆழ்ந்த சயனத்துக்கு சென்றுவிட்டார்... இந்தக் கொள்ளையைப்பற்றி அத்திவரதர் படுத்தபடியும் கேட்கப்போவதில்லை எழுந்து நின்று கேட்கப்போவதுமில்லை.
பக்தியின் பெயரால் பக்தர்களும் ஏமாறாமல் இருக்கப் போவதில்லை.. 

 இனி சமூக ஆர்வலர்கள்  1952-ல வெளியான பராசக்தி படத்தில்  இடம் பெற்ற வசனமான   “ கோயிலிலே குழப்பம் விளைவித்தேன், கோயில் கூடாது என்பதற்க்காக அல்ல:   கோயில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்க்காக” என்ற வசனத்தை மேடை போட்டு பேசவேண்டிய  தேவைதான் உள்ளது.


அத்தி வரதர்க்கான பட முடிவுகள்"நன்றி! புதிய ஜனநாயகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக