அவர் தன் வயது மூப்பையும், கொரோனா பெருந்தொற்றையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பிணை கேட்கிறார். இப்படி சொல்லியிருப்பது தேசிய பாதுகாப்பு முகமை.
நினைவு தப்பிப்போனவராக, கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தோழர் வரவர ராவ். குடும்பத்தவர்கள் பார்த்தபோது சிறுநீரில் ஊறிபோயிருந்த படுக்கையில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் 80 வயதை கடந்த முதியவரின் பிணை மனுவுக்கு அரசு ஆற்றிய எதிர்வினை இது.
இதுதான் அரச ஆன்மாவின் முதியோர் மீதான மரியாதை.
இதுதான் அரசு தன் மக்களின் தொற்று குறித்து அச்சத்தை கையாளும் பாணி.
இரக்கம், மனிதாபிமானம் என எல்லாவற்றையும் தொலைத்துவிட்ட அதிகாரவர்க்கம்தான் உங்களை ஆள்கிறது.
இந்த அரசு ஒருவேளை உங்களை தேசபக்தன் என்று சொல்லிவிட்டால் அது எத்தனை மோசமான வசவாக இருக்கும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை