வியாழன் 01 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --56...

 





மாலை நேரம் வேலை முடிந்தது. இனி வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கலாம் என்று நிணைத்தபடி இரு சக்கர வாகனத்தில் வந்தவர்..டிராபிக் சிக்னலில் அருகில் வந்ததும் வண்டியை நிறுத்தினார்.

அந்த சிக்னல் ஓரத்தில் நின்றிருந்த டிராபிக் போலீஸ் இவரை பார்த்து தன் அருகில் வரு்ம்படி சைகை செய்தார்... இவரும் தனக்கு தெரிந்த போலீசாக இருக்கும் என்ற நிணைப்பில் வாகணத்தை ஓட்டியபடி அவர் அருகில் சென்றார்.

அருகில் சென்றவுடன் என்ன சார்,  கூப்பிட்டிங்க என்றபடி வண்டியைவிட்டு அருகில் சென்றார். சற்று தள்ளி நின்ற போலீசை காட்டி அவரிடம் செல் என்றார்.. ஒன்றும் புரியாமல் சுட்டிகாட்டிய போலீசிடம் சென்றார். அந்த போலீஸ் இவரின் ஒட்டுனர் உரிமத்தை கேட்டார்.  மேலும் ஒன்னும் புரியாமல் ஓட்டுனர் உரிமத்தை கொடுத்தார்....

சிறிது நேரத்தில் நீளமான துண்டு காகித்தை கொடுத்து நூறு ரூபாய் பைன்  ஆன்லைனில் கட்டு என்றார்... கொஞ்சம் விழிப்பு வந்து எதுக்கு  அபதாரம் என்றார்....

சைகை காட்டி அழைத்த போலீசை காட்டி அவரிடம் கேள் என்றார்.

 சீட்டை வாங்கி கையில் பிடித்தபடி ...எதுக்கு சார் ..அபதாரம் என்று வினவியபோது.தான்  அவருக்கு தெரிந்தது..... அட..கொடுமைக்காரா..இதுக்காக தெரிந்தவர்போல் என்னை அழைத்த படுபாவி..நீ வயிறு வெடித்து சாக வேண்டும்டா என்று மனதுக்குள் திட்டினார்....

அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்தான் டிராபிக் போலிசின் வசூல் வேட்டை கடந்த மூன்று நாட்களாக நடந்து கொண்டு இருப்பது இவரது மண்டையோட்டிற்குள் இலேசாக உறைத்தது..

stop line violation  என்ற  போக்குவரத்து விதி மீறலுக்காக (sec 110 u/s 177) ன்படி  fine 100  தன்னுடைய ஏமாளித்தனத்தையும் வசூல் வேட்டை நாயாகர்களின் தனித்திறமையையும் வலிப்போக்கனின் கோவியட்-19, கரோனா வைரசை விட பயங்கரமானவர்களாக இருப்பதை அனுபவத்தில் கண்டதால் ....தன்னைத்தானே மண்டையில் அடித்தபடி.. அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்....

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...