புதன் 11 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -76.....

 



ஒரு துக்க நிகழ்வு போல மத்திய அமைச்சர்கள் அர்னப் கோஸ்வாமியின் கைது குறித்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள். ‘இந்தக் கைது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது’ என்று ரிபப்ளிக் டிவி சொல்கிறது.. அவர்கள் அப்படி சொல்வதில் கூட ஆச்சரியமில்லை, நாட்டின் உள்துறை அமைச்சரும் அமித்ஷாவுமே அப்படித் தான் சொல்கிறார்.

அம்மா மற்றும் மகன் என இருவரின் தற்கொலைகளுக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறார் என்பது அர்னபின் மேல் தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கு. இந்த வழக்கு கடந்த சில மாதங்களாகவே அர்னபின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது. மத்திய அரசு தனக்கு இதில் எப்படி உதவ முடியும் என்று தெரிந்ததாலேயே வழக்கத்துக்கும் மீறிய கூச்சல்களை விசுவாசத்துடன் சமீபகாலங்களாக அர்னப் கூட்டியிருந்தார். ஆனால் கைது நடந்துவிட்டது. இதற்கு மத்திய அமைச்சர்கள் துக்கம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?

சித்தார்த் வரதராஜன் ‘தி வயர்’ ஆசிரியர். லாக் டவுன் நேரத்தில் ராம நவமி பண்டிகையை கொண்டாட அரசு முனைப்பு காட்டுகிறது என்று சொன்னதற்காக இரண்டு எப்ஐஆர்க்கள் அவர் மீது உள்ளன.
சுப்ரியா ஷர்மா ‘தி ஸ்க்ரால்’ பத்திரிகையின் தலைமை எடிட்டர். தொடர்ந்து பழங்குடி மக்களின் பிரச்சனைகளை எழுதி வருபவர். லாக் டவுன் காலகட்டத்தில் பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அடித்தட்டு மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் செய்தி கட்டுரையாக்கியிருந்தார். உடனடியாக அவர் மேல் வழக்கு போடப்பட்டது.

ஹத்ராஸ் சம்பவத்தை பதிவு செய்ய சென்றிருந்த கேரளா மாநில பத்திரிகையாளர் சித்திக் கப்பான் என்பவரை யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் கைது செய்தது உ.பி அரசு.

HW செய்திப்பிரிவின் ஆசிரியர் வினோத் துவா லாக்டவுன் காலத்தில் நரேந்திர மோடி அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று சொன்னார் என்பதற்காக ‘தேசத்துரோக’ வழக்கு அவர் மீது போடப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தில் வாதாடுகிறபோது, “பத்திரிகையாளரும் மற்றவர்களைப் போல குடிமகன்களே” என்றிருந்தது அரசு தரப்பு.

பாஜகவையும், மோடியையும் விமர்சித்த காரணத்தாலேயே டிவி சேனல்களில் இருந்து வெளியேற்றபப்ட்ட செய்தி ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டில் தொடங்கி தேசம் முழுவதும் இருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, சமூக வலைதளங்களில் அரசை விமர்சித்து எழுதுகிற பதிவர்களை குறிப்பாய் பெண்களை பாஜக அரசியல்வாதிகள் எப்படி கீழ்த்தரமாக கையாளுகின்றனர் என்பதற்கு நூற்றுகணக்கான எடுத்துகாட்டுகள் உண்டு.

இவை எதுவும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாக தோன்றாமல், தற்கொலைக்குத் தூண்டியதற்காக அர்னப் கைது செய்யப்பட்டிருப்பது மத்திய அரசுக்கு கவலையளித்திருக்கிறது.
"
மக்களாட்சிக்கு எதிரான நடவடிக்கை” என்கிறார்கள்.
கோஸ்வாமிகளும், பாண்டேக்களும் இப்படித்தான் விதைக்கப்படுகிறார்கள்.
- Deepa Janakiraman

ஒரு கொசுறு கேள்வி,... நானோ...நீங்களோ... அல்லது நாம் அறிந்தவர்களோ!! ஜாமீன் கோரி மனு செய்தால் உடனே உச்ச நீதிமன்றம் விசாரிக்குமா..??? அர்னாப் கோசுவாமியின் மனுவை உடனே விசாரிக்கிறது...

2 கருத்துகள்:

கதையும் காரணமும்..

ஒன்று-  அன்புள்ள உறுப்பினர்களே! இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால்  தள்ளி வைக்கப்படுகிறது. இரண்டு- அன்பிற்கினிய உறுப்ப...