செவ்வாய் 01 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...60

 







வாய்ப்புள்ளவர்களுக்கு.....!!!!

The Underground Railroad ( web Series , Amazon Prime ) - 10 Episodes
கிட்ட தட்ட ஒன்பது மணி நேரம் , நாற்பத்தைந்து நிமிடங்கள் ....
ஒரு நிமிடம்கூட போர் அடிக்கவில்லை ...
மிக நீண்ட காலத்திற்கு அப்புறம் பார்க்கும் அதி அற்புதமான நீள் படம் ...
அமெரிக்காவின் நீண்ட நெடிய வரலாற்றில் கறுப்பின மக்கள் ( African Americans ) பட்ட வேதனைகளையும் , சோதனைகளையும் , பத்து எபிசொட் மூலம் , மிக அற்புதமான சொல்லும் நீள் படம் ( WEB SERIES ) .. ஒரு சில படம் எப்படா முடியும்னு இருக்கும் .. இந்த நீள் படம் , ஒவ்வொரு நிமிடமும் நம்ம மனச கொத்திகிட்டு போகுது .....
1700 களின் இறுதியிலும் , 1800 களிலும் , Slavery ( அடிமைத்தனம் ) , அமெரிக்காவில் அதிகாரபூர்வமாக இருந்த காலம் ... முக்கியமா கருப்பு இன மக்களை அடிமைப்படுத்தி செல்வத்தில் கொழித்த தெற்கு மாநிலங்கள் , எந்த அளவுக்கு கீழே இறங்கினார்கள் என்பதை சொன்ன படம் ...
அதி அற்புதமான ஒளிப்பதிவு , மற்றும் ஒலிப்பதிவு ....
பராசக்தி படத்துல வரும் வசனம் ஒண்ணு வருமே .. ஓடினாள் , ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடினாள் என்று ... அது மாதிரி இந்த படத்தில் Cora Randall என்னும் பெண் அமெரிக்காவின் georgia மாநிலத்தில் இருந்து , ஒரு வெள்ளையனை தற்காப்புக்காக கொன்ற காரணத்துக்காக , குற்றத்துக்காக தப்பித்து ஓடுகிறாள் .... ( South Carolena , North Carolena , Tennessee , Indiana போன்ற மாநிலங்களில் ஓடி ஒளிகிறாள் ... அவளை Arnold Ridgeway , என்னும் அடிமை பிடிப்பவன் (Slave catcher) கடைசி வரை துரத்துகிறான் , பிடிக்கிறான் ..துன்புறுத்துகிறான் .... ... நம்ம ஊர்ல புள்ள பிடிக்கிறவன் என்று சொல்வார்களில்லையையா .. அந்த மாதிரி .... இந்த நபருக்கு உதவி பண்றதுக்கு ஒரு விசித்திர குள்ளன் ... Homer என்னும் பைய்யன் ( சிறுவன் ) .. ஆகா என்ன அருமையான நடிப்பு .. அசந்து போனேன் ....
இந்த படத்தின் தலைப்பில் வருவது மாதிரி பூமிக்கு கீழ ரயில் ஓடியதாக ஆதாரம் இல்லை .. இதை fiction ( கற்பனை) என்று சொல்லலாம் ... ஆனா அந்த காலத்துல , இந்த மாதிரி , அடிமைத்தனத்தில் பாதிக்கப்பட்டு ஒரு மாநிலம் விட்டு அடுத்த மாநிலத்திற்கு போவதற்கு பலர் உதவி இருக்கிறார்கள் ... இந்த set up ""Underground Railroad"" என்று அழைக்க பட்டதாக எடுத்துக்கொள்ளலாம் ... ஆனா இந்த படத்துல உண்மையா ரயிலை காட்டுகிறார்கள் .. அது சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை ....
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கதை ...பல பல பாத்திரங்கள் .. எல்லா கதா பாத்திரங்களும் மனதில் நிற்கிறார்கள் ...
கண்டிப்பா பார்க்க வேண்டிய Web Series ....

1 கருத்து:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...