- கோகுல்ராஜ் ஆணவப்படுகொலையில் யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!!
- ஆணவம் அழிவைத்தரும் யுவராஜ் !
- ஒரு பொறியியல் பட்டதாரியை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு எவ்வளவு திமிராக காலரை உயர்த்திவிட்டு பேசினாய்..சாதியும் ,பணமும்,செல்வாக்கும் காப்பாற்றும் என்ற ஆணவம்தானே,?
- வருங்கால யுவராஜ்களின் எண்ணங்களின் மீது சம்மட்டி அடியாக இறங்கிய தீர்ப்பு. கோகுல்ராஜ்,டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் ஆன்மா சற்று இளைப்பாறுதல் கொள்ளட்டும் !
- சுவாதி பிறழ்ந்தபோதும் நீதி பிறழவில்லை. கடவுளைப்போல கண்காணித்து சாட்சியம் அளித்த அறிவியலின் பிள்ளை சிசிடிவி காமிரா தனது கண்களுக்குள் உண்மையை சேமித்து வைத்திருக்கிறது.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் தோழர் ப பா மோகனின் அறிவார்ந்த சட்டப்போராட்டம் இதை சாதித்திருக்கிறது. கண்ணகி - முருகேசன், உடுமலை சங்கர் போன்ற ஆணவ கொலை வழக்கினை தொடர்ந்து இதிலும் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ப பா மோகன் போல இரத்தினம் போல பலநூறு வழக்கறிஞர்கள் இந்த சமூகத்திற்கு வேண்டும். தமிழக அரசு ஆணவப்படுகொலைகளை தடுக்க உறுதியான சட்டங்களை உடனே இயற்றவேண்டும்
- ஆணவம் அழியட்டும் அன்பு தழைத்தோங்கட்டும் !
ஞாயிறு 06 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...72
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...
-
அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றபடி பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் க...
-
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
போராடிப் பெற்ற உரிமை...........
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை