#IndiasDaughter
மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய சில விஷயங்கள் :
1. பில்கிஸ் பானுவைத் தாக்கிய ஆண்கள் அனைவரும் சிறுவயதில் இருந்தே அவருக்கு நேரடியாகத் தெரிந்தவர்களே. அவருடைய வீட்டிலிருந்து பால் வாங்கிச் சென்றவர்கள், அவரால் "சாச்சா" என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட முதிவர்கள் தொடங்கி, பில்கீசின் தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வரை அக்கூட்டத்தில் இருந்தனர். பில்கிஸின் கையில் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி தரையில் அடித்துக் கொலை செய்தவர்களும் இவர்களே.
2. சுயநினைவு திரும்பி திடுக்கிட்டு விழித்தபோது, ஒரு பிணக்குவியலுக்கு நடுவில் நிர்வாணக்கோலத்தில் கிடந்த பில்கீஸ் பானுவுக்கு ஆடையை வழங்கியவர் ஒரு ஆதிவாசிப் பெண் ஆவார். பின்னர், அவர் தனியாகவே காவல் நிலையம் சென்று தன்னை தாக்கியவர்களின் பெயர்களைச் சொல்லி புகார் அளித்தார். ஆனால், "சோமாபாய் கோரி" என்ற போலீஸ்காரர் புகாரை ஏற்க மறுத்து அவரை அங்கிருந்து விரட்டி அடித்தார். (பின்னர் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்)
3. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களைப் போல் அல்லாமல், பில்கிஸ் தனது முகத்தை கூட மறைக்காமல் ஊடகங்கள் முன் காட்சியளித்து வருகிறார். இன்றுவரை அவர் மேற்கொண்டு வரும் அணைத்து சட்டப் போராட்டங்களுக்கும் பக்கத் துணையாக இருந்து எல்லா உதவிகளையும் கணவர் யாகூப் ரசூல்தான் செய்துவருகிறார்.
4. தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் கடந்த ஆண்டு விடுதலையாகி வெளியே வந்தபோது, அவர்களுக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் கூட்டமாகச் சென்று வரவேற்றனர். அவர்களில் பெண்களும் இருந்தனர். கூடவே "அவர்கள் பிராமணர்கள் என்பதால், குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை" என்று பாஜக எம்.எல்.ஏ.வின் அறிக்கையும் வெளியானது.
5. உயிரைப் பணயம் வைத்து, அணைத்து நெருக்கடிகளையும் அழுத்தத்திலிருந்தும் தப்பிப் பிழைத்து நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் பில்கீஸ் பானு "இந்தியாவின் மகள்" என்று அழைக்கப்படுவதில்லையே ஏன்? பிரதான பெண்ணியக் கதையாடல்களில் கூட அவ்வாறு அவர் குறிப்பிடப்படுவதில்லையே ஏன்? இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி வருபவர்களில் பில்கீஸ் பானுவைப்போல் எத்தனை உள்ளனர்?
மைய நீரோட்டத்தில் அவரை கொண்டாடுவதை தடுக்கும் அம்சம் அவரின் "அடையாள"த்தைத் (Identity) தவிர வேறு ஏதேனும் உண்டா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை