பக்கங்கள்

காவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 25 2024

அவரின் "அடையாள"த்தைத் (Identity) தவிர வேறு ஏதேனும் உண்டா?


#IndiasDaughter மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய சில விஷயங்கள் :
1. பில்கிஸ் பானுவைத் தாக்கிய ஆண்கள் அனைவரும் சிறுவயதில் இருந்தே அவருக்கு நேரடியாகத் தெரிந்தவர்களே. அவருடைய வீட்டிலிருந்து பால் வாங்கிச் சென்றவர்கள், அவரால் "சாச்சா" என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட முதிவர்கள் தொடங்கி, பில்கீசின் தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வரை அக்கூட்டத்தில் இருந்தனர். பில்கிஸின் கையில் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி தரையில் அடித்துக் கொலை செய்தவர்களும் இவர்களே.

2. சுயநினைவு திரும்பி திடுக்கிட்டு விழித்தபோது, ஒரு பிணக்குவியலுக்கு நடுவில் நிர்வாணக்கோலத்தில் கிடந்த பில்கீஸ் பானுவுக்கு ஆடையை வழங்கியவர் ஒரு ஆதிவாசிப் பெண் ஆவார். பின்னர், அவர் தனியாகவே காவல் நிலையம் சென்று தன்னை தாக்கியவர்களின் பெயர்களைச் சொல்லி புகார் அளித்தார். ஆனால், "சோமாபாய் கோரி" என்ற போலீஸ்காரர் புகாரை ஏற்க மறுத்து அவரை அங்கிருந்து விரட்டி அடித்தார். (பின்னர் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்) 3. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களைப் போல் அல்லாமல், பில்கிஸ் தனது முகத்தை கூட மறைக்காமல் ஊடகங்கள் முன் காட்சியளித்து வருகிறார். இன்றுவரை அவர் மேற்கொண்டு வரும் அணைத்து சட்டப் போராட்டங்களுக்கும் பக்கத் துணையாக இருந்து எல்லா உதவிகளையும் கணவர் யாகூப் ரசூல்தான் செய்துவருகிறார். 4. தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் கடந்த ஆண்டு விடுதலையாகி வெளியே வந்தபோது, அவர்களுக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் கூட்டமாகச் சென்று வரவேற்றனர். அவர்களில் பெண்களும் இருந்தனர். கூடவே "அவர்கள் பிராமணர்கள் என்பதால், குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை" என்று பாஜக எம்.எல்.ஏ.வின் அறிக்கையும் வெளியானது. 5. உயிரைப் பணயம் வைத்து, அணைத்து நெருக்கடிகளையும் அழுத்தத்திலிருந்தும் தப்பிப் பிழைத்து நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் பில்கீஸ் பானு "இந்தியாவின் மகள்" என்று அழைக்கப்படுவதில்லையே ஏன்? பிரதான பெண்ணியக் கதையாடல்களில் கூட அவ்வாறு அவர் குறிப்பிடப்படுவதில்லையே ஏன்? இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி வருபவர்களில் பில்கீஸ் பானுவைப்போல் எத்தனை உள்ளனர்? மைய நீரோட்டத்தில் அவரை கொண்டாடுவதை தடுக்கும் அம்சம் அவரின் "அடையாள"த்தைத் (Identity) தவிர வேறு ஏதேனும் உண்டா? 
படம்

ஞாயிறு 06 2019

நினைவலைகள்-42.

ராஜராஜனின்  பொற்காலம் பற்றி பேசுபவர்கள்..........

ராஜராஜன் வரலாறு க்கான பட முடிவு




ராஜராஜன் 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில்  சூடு போட்டு தேவரடியார்களாக மாற்றினான். இப் பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாக பிணைக்கப்பட்டனர். இறைவன் பெயரால்  விபச்சாரத்தை புனிதமாக்கி தஞ்சையில் தனிச் சேரியை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள். அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசாரிகள், பெரும்நிலவுடமையாளர்களின் காம வெறிக்கு பலி கொடுக்கப்பட்ட தேவரடியார் குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகால கொடுமையை 1929-ல் சுயமரியாதை இயக்கமும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தனர்.

தமிழ்மறை மீட்டான் என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன். தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால் தருவோம் என தில்லை தீட்சிர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கிய சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்கு தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச் சேரிப் பெண்டீர் மீது சூடு போட்ட வீரத்தை தீட்சிதரிடம் காட்டவில்லை.

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுகளில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ாஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில்தான் ஊருக்கு வெளியே  தீண்டாச்சேரியும், பறைச்சேரியும் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும்,பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றி பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையால்  ,சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதில்லை.. காவிகளுடன் சேர்ந்து இவர்களும் ராஜராஜனை கட்டி அழுகிறார்கள்


---நன்றி வினவு























அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...