பக்கங்கள்

இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி 30 2026

என்னாது காந்தி செத்திட்டாரா...????

1.சுடப்பட்டு செத்தவர்.2. தூக்கில் கொல்லப்பட்டவன்.




“ அண்ணே! அண்ணே!! காந்தி செத்திட்டாருண்ணே...”


“ எந்த காந்தி..டா..”


“இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரு..ல்ல  , அவருன்ணே...”


“ எப்படிடா செத்தாரு... சுட்டுடாங்கண்ணே..”


“ என்னாது சுட்டுடாங்களா.... யாருடா.... போலீசா...??”


“ போலீசும்  இல்லண்ணே.!” இராணுவமும் இல்லேண்ணே..”


“ அப்ப..யாருடா..சுட்டது..”


“நாத்துராம்கோட்சே என்ற செத்தவரு சாதிகாருணே”


“அந்தாளுக்கும் இந்தாளுக்கும்  வாய்க்கா வரப்பு சண்டையாடா..?”


“ அப்படி தெரியலண்ணே.... இனிமே தான் தெரியும்ணே”


“ சரி விடு,  செத்தாளு பிரிட்டிஸ் அரசுக்கு நெருக்கமானவாரு, சுட்டவனும் பின்னாளில் சாவான்...  சுட்டாளும்சரி, செத்தாளும் சரி..ரெண்டுஆளும் நமக்கு நல்லவங்க  இல்ல.. பாடு படும் மக்களுக்கு  எந்த பலனுமில்ல....ரெண்டு ஆட்களை சேர்ந்தவங்க மாறி மாறி ஆட்சி செய்து நம்மள கொல்லுவானுங்க..”


“ என்னண்ணே இப்படி சொல்றிங்க....”

“ உண்மையைத்தாண்டா சொல்றேன். அம்பேத்தார் எழுதிய புத்தகத்தை படி செத்தளோட வன்மம் புரியும்.. சுட்டவனும் செத்தாளவிட பயங்காரமானவன். அவனப்பற்றி தெரியுனும்னா கம்யுனிஸ் காரங்க புத்தகத்தைப்படி விவரமா புரியும்.டா.”.


“ கண்டிப்பாண்ணே ரெண்டு பேரு வரலாற தெரிந்து கொள்கிறேன்.”


“ அவுக ரெண்டு பேரும் பங்காளிகள்.. வெளிப்பார்வைக்கு பகையாளிகள் போல் காட்டிக் கொள்வார்கள்..இவர்களை நம்பிட சாவது நம்ம மக்கள்தான்






திங்கள் 04 2021

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -99....

 புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளது-யுனிசெஃப் நிறுவனம்



நீங்க லாக்டவுன் போட்டப்பவே தெரியும்

ஞாயிறு 02 2011

ஆகாயத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஒரு கைக்கூலியும் ,அதற்கு வாழ்த்து தெரிவித்த முப்பது எழுத்துக்கூலிகளும்

மாவீரன் பகத்சிங் பிறந்தது பஞ்சாப்தான். உலகத்தின்
உன்னதமான ஒரு கைக்கூலி பிறந்ததும் அதே பஞ்சாப்
தான். இதைத்தான் அவர்கள் மொழியில் வேற்றுமை
யில் ஒற்றுமை, ஒற்றுமையில் வேற்றுமை என்பார்கள்.

இந்த அமெரிக்க கைக்கூலி யின் 79 வது பிறந்தநாள்
விழாவை “அமெரிக்காவின் நலன்களுக்கு ஓய்வு ஒழிச்
சலின்றி உழைத்து வருவதால் புமியில் கொண்டாட
வாய்ப்பில்லாமல் நான்கு முறை விமானத்திலே
கொண்டாடினாராம். இந்த கைக்கூலிக்கு பிறந்த நாள்
பரிசாக உடன் வந்த முப்பது எழுத்துக்கூலிகளும்
ஒன்று சேர்ந்து கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை
பரிசாக கொடுத்தார்களாம்.

முப்பது எழுத்து கூலிகள் வழங்கிய வாழ்த்து அட்டையில்
உற்சாகமடைந்த இந்தக்கைக்கூலி. தனக்கிருந்த கூச்சத்தை
விட்டு கேட்டாராம் கேக் எங்கே? என்று கைக்கூலியிடம்
கைகுலுக்கிய தினமணிவாத்தியாரின் தினமணி புள
காங்கிதம் அடைந்து எழுதி யுள்ளது.

இந்தியாவின் தலைநகரம் வாஷிங்டன்னாக இருந்தாலும்
அந்த தலைநகரத்தின் இன்னொரு நகரமான நியுயார்க்
பயணத்தின் போது கேள்விக்கனைகளால் துளைத்து எடுத்து
ஓடடை போட்ட எழுத்துக்கூலிகள், கைக்கூலியின் பிறந்த
நாளின்போது. பேனாக்களை மூடி வைத்துவிட்டு கைக்
குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்களாம்.

மானமுள்ள,ஈரமுள்ள தமிழனாகிய,இந்திய குடிமகனாகிய
(டாஸ்மாக் குடிமகன் இல்லீங்கோ) என்னுடைய,இந்தக் கைக்
கூலிக்கு சாரிங்க,இந்திய பிரதமருக்கு பிறந்த நாளு
வாழ்த்துக்கள்

பிரதமர் அவர்களே!
உங்களின் வம்ச பிதா காந்தி மகான்வழியிலே
உங்கள் சேவை பன்னாட்டு முதலைகளுக்கு குறிப்பாக
அமெரிக்க முதலாளிகளுக்கு தேவை. இந்திய நாட்டின்
புல்புண்டு உள்பட எல்லா வளங்களையும் உங்க
முன்னால் எஜமானர்களுக்கு வாரிவழங்கி உலகிலேயே
ஒப்பற்ற முதல்கைக்கூலியாக பேரும்புகழும் பெற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.உங்கள் அடிச்சுவட்டில்
மற்ற கைக்கூலிகள் வளர வாழ்த்துகிறேன்.

வெள்ளி 15 2011

கேட்பவன் கேனையனாக இருந்தால்...........கேப்பையில் நெய் வடியும்!

மேற்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக,இந்தியாவில்  வறுமை
வேகமாக குறைந்து வருகிறதாம்.சர்வதேச அளவில் வறுமையில்
இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு
இந்தியாவும். சீனாவும் முக்கிய காரணமாம்.

மக்கள் தொகை அதிகமுள்ள இரு நாடுகளில்  வறுமையில்
இருப்பவர்கள் ஏராளாமாக உள்ளதால் ,இங்கு வறுமையில்
இருப்பவர்கள் எண்ணிக்கை குறைவதால்  சர்வதேச அளவிலும்
குறைந்து வருகிறதாம்.

1990லிருந்து  2005ஆம் ஆண்டுகளில் இடைப்பட்ட ஆண்டில்
வறுமையிலிருந்து 45 கோடிபேர் மீண்டுள்ளனராம். 2015ல்
32 கோடி மக்கள் வருமையின் பிடியிருந்து முன்னேறுவார்களாம்.

பசி,பட்டினி,குழந்தைகள் இறப்புவகிதம்,ஊட்டச்சத்து பற்றாக்குறை
ஆகியவை இந்தியாவில் குறைந்து வருகிறதாம். வறுமை ஒழிந்து
வளர்ச்சி ஏற்பட்டு வரும்நிலையில் ஏராளமான மரங்கள் வெட்டப்
பட்டு காடுகள் அழிக்கப்படுகின்றதாம்.

சுகாதாரப்பிரச்சினையில் இந்தியா பின்தங்கியுள்ளனவாம்.காச
நோயால் பாதிக்கப்படுபவர்கள 35 சதவீதமாம்.- இப்படியாக
அய்ய்......நா.....என்ற ஊத்தவாயர்கள் நிறைந்த சபை தன்
அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

முதுகெலும்புள்ள  ஊத்தவாயர்கள்  அறிக்கையின்படி இந்தியாவில்
வறுமை எப்படி ஒழிந்து இருக்கும் என்று  கேள்வியெல்லாம்
இருந்தாலும்., இந்தியா உலக பணக்காரர்கள் வரிசையில் 12 வதாக
வந்ததே.வறுமை  குறைந்தற்கு ஒரு அளவுகோலாக இருக்கலாம்.

உண்மையான,நேர்மையான ஆய்வுகள்  குறிஞசி மலர் மாதிரி 12
வருடத்துக்கு ஒருமுறை மலர்ந்தாலும். அதிலும் முழுகபுசனியை
சோற்றில் மறைக்கும் வேலையாகத்தான் வெளிப்படும்..அது மாதிரி
தான் இந்தியாவில் வறுமை ஒழிகிறது  என்ற அறிக்கையும்

இந்த அய்ய்.......நா.......வின் அறிக்கை .தனியார்மயம்-தாராளமயத்தின்
தாசர்களுக்கும்.புகழ்பாடிகளுக்கும். இந்தியாவில் வறுமையில்
இருப்பவர்களை ஒழித்துகட்டும்  முயற்சியில் அயராது பாடு பட்டு
 வரும்ஒட்டுபொருக்கி ஆட்சியாளர்களுக்கும்  அல்வா சாப்பிட்ட
மாதிரி இருக்கும்..




வெள்ளி 27 2011

இந்தீய ஜனநாயகம்

!
!
படத்தை நன்றாக பாருங்கள். ஒரு உண்மை புரியும்.

கார்ப்பரேட் பகற்கொள்ளையை எதிர்க்கும் பினாயக்சென்
உள்ளிட்ட மனிதஉரிமை ஆர்வலர்களை சேதத்துரோக்க்
குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவதும்,

பாம்பும் சகாமல் தடியும் நோகமல் கார்ப்பரேட் பகல்
கொள்ளையர்களுக்கு ஊறு நேராமல் ஊழலுக்கான
தீர்வை வைக்கும் அன்னகஸேரேக்களை வரவேற்க்கபடுவதும்.

 இதுதாங்க இந்தீய ஜனநாயகம்.

நன்றி. புதிய ஜனநாயகம்.

வாசாந்தியும் தேவசாதி படைப்பும்

திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...