தமிழ் இலக்கணத்தில் வஞ்சப்புகழ்ச்சி அணி என்று இலக்கணம் உள்ளது.
அதில் .இகழ்வதுபோல் புகழ்வதுதான் வஞ்சப்புகழ்ச்சி. அந்தத வஞ்சப் புகழ்ச்சி போலவே, ஐ.நா. மனித உரிமைக்கமிஷனின் தலைவரான நவநீதம் பிள்ளை,
கொலைகார ராஜபட்சேவின் அரசை இகழ்வது போல் இழித்து கடைசியில் அவன் அரசை புகழ்ந்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களை அழித்தொழித்த போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஆராய்வதற்க்காக கடந்த ஒரு வாரமாக சுற்றுப்பயணம் செய்து வரும் பிள்ளை.
பயணத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
உள்நாட்டில் நடந்த போரால் சீர்குழைந்த நாட்டை சீரமைக்க கிடைத்த பயன்படுத்திக் கொள்ளாமல்.சர்வாதிகாரபோக்கை நோக்கி இலங்கை அரசு நடைபோடுகிறது. இதனால் போர் முடிந்த பின்னரும் பாதிப்புகள் குறையவில்லை.
பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தபோது.அவர்கள் கொடுமைக்கு ஆளானாதும்,கட்டாயங்களுக்கு ஆளானதும் தெரியவந்தது.
எனினும்,இலங்கை அரசின் மறு குடியமர்த்தல் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாடு பணிகள் திருப்தி அளிக்கிறது என்றார்.
ஒரு பொதுக்கூட்ட மேடையொன்றில்,போலீஸ் செய்யும் கொடுமைகளை விலாவாரியாக பேசிவிட்டு, கூட்டமுடிவில் கூறப்படும்.நன்றியுரையில் போலீசுக்கு நன்றி!‘ என்று கூறப்படுவதுபோல்தான். நவநீதம் பிள்ளையின் அறிக்கையும்.......
