படம்
ஈழத்தாய் யாரென்று கேட்டால் பட்டென்று சொல்வார்கள் அவர்தான் என்று ஒரு குட்டியையும் ஈனாத தாய் எப்படி ஈழத்தாயாக முடியும் என்று கேட்டால் அடிமைகளிடமிருந்து வசவும், அடியாட்களிமிருந்து மிரட்டலும் வரும் இது தமிழ்நாட்டின் சாபக்கேடு மானக்கேடும்கூட...........
சரி,பாரதத்தாய் யாரென்று தெரியுமா? என்றால் பலருக்கு தெரியவில்லை எ சிலருக்கு அவரா? இவரா என்று என்னைக் கேட்கிறார்கள். ஆனால் உண்மையிலே பாரதத்தாய் யாரென்று தெரிந்தவர்கள் வினவுத் தோழர்களும் அதன் வாசகர்களுகமே.. அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும்.
இருந்தாலும் தெரியாதவர்களும் இருப்பவர்கள் அல்லவா? அவர்களுக்காக !!!!
ஒரு குட்டியையும் ஈனாத தாய் எப்படி ஈழத்தாயாக இருக்க முடியும் என்பது மாதிரியான கேள்விக்கே இடமில்லை.
ஏனென்றால் ஒரு தங்கக் குட்டியை ஈன்றவள் இந்த பாரதத்தாய்.. அந்த தங்கக் குட்டியை பெறறெடுக்க போன மருத்துவ மனையின் ஒருநாள் வாடகை ரூ20,000, மருத்துவ செலவு ஃபோர்டிஸே்லாஃபெம்மே மருத்துவமனையில் தங்கக் குழந்தைப்பேருக்கான பேக்கேஜ் மட்டும் ரூ 4 லட்சத்திலிருந்து ரூ 5 லட்சத்துக்கு மேல் இருக்கும்.
இந்த பாரத்தாய் ஒரு தங்கக்குட்டியை பெற்றெடுக்க இவ்வளவு செலவு செய்ததை பார்த்தாவது பாரதநாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது. என்று மெய்சிலிர்க்காதவர்கள் இருக்க முடியுமா???இவ்வளவு செலவா என்று வாயப் பொளந்தால் அவர்கள் தேசத்துரோகிகள் ஆவார்கள்.
இந்தியாவின் பாரதத்தாய் தற்போது தொலைக்காட்சியின் “கல்யான் நகைக்கடை விளம்பரத்தில் வலம் வருகிறார்கள் பார்த்துக் கொள்ளவும்