எண்ணப்பா...வீரா ! ஹெல்.மெட் வாங்கிவிட்டாயா... அவகாசம் இன்று முடிவடைகிறதப்பா...என்று ஏரியா..அண்ணன் . கேட்க...
“இவிங்க நிணச்சு நிணச்சு சொல்லுவாங்கேன்னுதாண்ணே..வண்டி வாங்கும்போதே ஹெல்மெட்டையும் சேர்த்து வாங்கிட்டேண்ணே...அத இனி பயன்படுத்திக்க வேண்டியதுதாண்ணே..” பதிலுரைத்தான்.
“ நீ...தப்பிச்சிட்டேடா” என்றார் அண்ணன்..
அடுத்தவரை கேட்டபோது , அவர் சொன்னார்.
“ காசு கையில இல்லாததால மாசக் கடைசியில வாங்கலாம்னு போயி விலய கேட்டா”...650 ரூபாய்க்கு வித்தத...2500ரூபான்னு சொன்னாங்கண்ணே... அதனால வாங்கம வந்திட்டேண்ணே...”
“ நீ தப்பாம..தண்டம் கட்டியே ஆவணும்டா” என்றார் அண்ணன்.
எக்ஸல் ஹெவ்வி டூட்டியில போயி கடை கடைக்கு சரக்கு போடும் ஈஸ்வரனை கேட்டபோது....... தன் கோபத்தை பழைய பாடலை தனக்கேற்றார்போல் வார்த்தைகளை சேர்த்து பாடலாகவே பாடி விட்டார்.
பிறக்க வேண்டும்
அவன் தன் தலையில்
ஹெல்மெட்டை அணிந்து
டூ வீலர் ஓட்ட
வேண்டும் ரோடென்றால்
என்னவென்று புரிய
வேண்டும், பாவி
அவன் அந்த
வேதனையை பட
வேண்டும்......”
அண்ணனைத் தவிர அந்தப் பாடலைக் கேட்டு சிரித்தார்கள்.
அண்ணன் சொன்னார். சத்தியமா கடவுள் மனிதனாக பிறக்க மாட்டாருப்பா..... உன் பாடல்படி ஹெல்மெட் எல்லாம் அணிந்து ஓட்டமாட்டாருப்பா..... அவரு ரேஞ்சே தனிப்பா.....
எல்லோரையும் கேட்ட , அந்த அண்ணனைப் பார்த்து வண்டியே இல்லாத ஒருத்தன் கேட்டான். அண்ணே..நீங்க.. ஹெல்மெட்” டு வாங்கிட்டீங்களா....???
நீ இப்படி கேட்பேன்னு எனக்கு தெரியுமடா.... என்ற அண்ணன் பாட்டாலே பதில் சொன்னார்.
“சட்ட திட்டம் எதுவும்
எனக்கு சரியில்ல- இந்த
சண்டாளப் பய நாட்டுலே
நான் டூ வீலர் ஓட்ட
வழியில்ல.......
சட்ட திட்டம் எதுவும்
எனக்கு சரியில்ல...”
-பெட்ரோலும் நாளுக்கு நாளு ஏறுது... தண்டமும் கூடுது.-அதனால நான் வாங்கிய டூவிலர வித்துட்டேன்..டா..... ”முடிந்த வரைக்கும் நடை ராஜா.. ” முடியாவிட்டால் சேர் ஆட்டோ” டா.. அதுவும் முடியவிட்டால் அரசு போக்கவரத்து 50 ரூபா பயணச்சீட்டுடா என்று சொன்ன அண்ணன் ஒரு கருத்தையும் சொன்னார்.
| படம்- |
| படம்- |
கஞ்சா இழுத்தவன், தண்ணி அடித்தவன்கள் ,எப்படி அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவனாக இருக்கிறானோ.அதேபோல..டூ வீலர் ஓட்டி பழகியவனும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாது.. அதுபோல வழிபறி தண்டம் வசூலிப்பவனும் விடமுடியாது..தண்டம் அழகாமல் தப்பித்து விடவும் முடியாது. ஆகு தண்டம் அழுக விரும்பாதவர்கள் எல்லாம் வாய் பொத்தி மெய் வருத்தி, தண்டத்தை(ஹெல்மெட்)தலையில் மாட்டித்தான் அவதிப்படனும் என்றார்.