பக்கங்கள்

மெக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மெக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 10 2017

கூடா நட்பு அல்ல...அது...

அந்தச் செய்தியைப்  படித்தவர்களில் பாதிப்பேருக்கு காரை ஏற்றிக் கொன்றவன் மேல் கோபம் வரவில்லை. செத்தவளின் மேல்தான் கோபம் வந்தது. அதுவும் அது நியாயமாக இல்லை. வேறு கோணத்தில்இருந்து 
பேசினார்கள்.

அட. ஆசிரியையா இருந்து  இப்படி கூமுட்டக் கழுதையாகவுல்ல இருந்திருக்கு...என்றுதான் கோபப்பட்டார்கள்.. செய்தி ஏட்டில் வந்த கூடா நட்பு கேடா முடியும் என்ற கருத்திற்கு மாற்றாக இருந்தது அவர்களின் கருத்து.

கட்டிட வேலையில் இருக்கும் சித்தாள்களை உதாரணமாகச் சொன்னார்கள்.கூடவே சினிமா நடிகைகளைப்பற்றியும் உதாரணமாக சொன்னார்கள்....

இன்றைய காலத்தில் வாய்ப்பு இல்லாதவர்கள் கிடைக்காதவர்கள்தான் விதியை நொந்து போக்கிடம் கிடைக்காமல் ஏக்கப்பட்டே கவலையால் பத்சாதினியாய் சாவார்கள், வாய்ப்பு உள்ளவர்கள்  அணைத்தையும் அனுபவித்து சந்தோசமாக சாவார்கள்....சாவில்கூட இதுதான் வித்தியாசம் என்றார்கள்..

அவர்களின் வீட்டருகில், தெருவில் கண்ட பார்த்த தெரிந்த காட்சிகளை தெரிந்த விபரங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு... மறைக்கத் தெரியாமல் செத்துபோனஅந்த ஆசிரியை யை திட்டித்தீர்த்தார்கள்..

அவர்கள் இப்படியும் பேசிக் கொண்டார்கள்.நம்ம தெருவில் எத்தன பேருடா யோக்கியமா இருக்காங்கஆ..அந்த பிள்ளை ரெண்டு மூனு பேருகூட தொடர்பு வச்சு இருக்கிறது..நமக்கு தெரிஞ்ச அளவுக்கு அந்த பிள்ள வீட்டுக்காரனுக்கு தெரியாதுல.....நாலோ அஞ்சோ படிச்சு இருக்கு எப்படி லாவகமா எல்லாப் பயலையும் சமாளித்து ஒரு..ஈ.காக்கா மூச்சுகூட வருதா.... இப்படி அவர்கள் தங்கள் குடியிருக்கும பகுதியில் உள்ளவர்களின் ஒவ்வொருத்தரின் யோக்கியத்தை அக்கு வேறு அணி வேறாக பிரித்து தொங்க விட்டதோடு  பேசிய பேச்சின் ஊடாக படித்தவளுக்கு புத்தி மட்டு என்று தங்களின் குடி மயக்கத்தினால் விளைந்த அறிவை  தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.

தசரதனை கட்டிக் கொண்ட அறுபதாயிரம் மனைவியரை  உதாரனத்துக்கு
இழுத்து பேசினார்கள்... கடைசியாக அவர்களின் முடிவு 

கூடா நட்பால் வந்த சாவு அல்ல அது. பிறர்க்கு தெரிய செய்ததால் வந்த சாவு என்றார்கள் அவர்கள்,


நிம்மதியை தேடிச் சென்ற இலக்கியவாதி

  லியோ டால்ஸ்டாய்  அரண்மனை போன்ற மாளிகை, ஏராளமான நிலங்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள், உலகமே போற்றும் புகழ் என அனைத்தும் கண் முன்னே இருந்தும்...