திங்கள் 20 2015

துன்பத்தை.. போக்கியவர்கள்....


படம்-floranjayraj.blogspot.com



நண்பர்களில் ஒருவர் சொன்னார்...சார். அந்தக் காலத்து அரசர்களில் துன்பத்தை போக்கியவர்கள் யாரென்று தெரியுமா  சார்  என்றார்.

அவர் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல்..... தெரியல....சார். உங்களுக்கு தெரியுமா..சார்...? என்று கேட்டேன்.

எனக்கு தெரியலைன்னு தான் உங்ககிட்ட கேட்டேன் சார் என்றார்.

“ பரவாயில்லையே...நமக்கு துணையாக வநது விட்டாரே.. என்று எண்ணிக் கொண்டு. அடுத்து அமர்திருந்த நண்பரிடம்.  சார். உங்களுக்கு தெரியுமா..சார் --கேட்டேன்.

அவர் அதைப்பத்திதான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன், என்றார்.

ரெம்ப சுத்தம் என்று விட்டு, நானே யோசிக்க..ஆரம்பித்தேன். அப்போது  “சிந்தித்தால் சிரிப்பு வரும், மனம் நொந்தால் அழுகை  வரும்” என்ற பாடல்தான் வந்தது.....துன்பத்தை போக்கியவர்களை பற்றி ஒன்றும் வரவில்லை.

கடைசியாக  மூவரும் விடைபெற்றுச் செல்லும்போது, சொன்னேன்.  சார். நாளை கழித்து மறுநாள்  என்னுடைய தளத்தை பாருங்கள். துன்பத்தை  போக்கிய மன்னர்களை கண்டுபிடித்து பதிவிடுகிறேன் என்றேன்.

“  சீக்கிரமாக கண்டு பிடித்து தெரிவியுங்கள். என்று விட்டு,நல்லது.. பார்ப்போம், என்று விடை பெற்றார். இரண்டு நாட்கள் எந்த சிந்தனையும் இல்லாமல் மறந்துவிட்டேன். வேலையில் அவரும் மறந்துவிட்டார். 

 எனது கைப்பேசிக்கு  மிஸ்டு கால் வந்தது. அதில் பேசியபோது சம்பந்தாமில்லாமல் ஒருவர் பேசி என்னைத் திட்டினார். “ ஏய்யா  இப்படி மிஸ்டு கால் வந்ததுன்னு இம்சை கொடுக்குறிங்க...”  என்றார். அவரிடம் வாங்கிய திட்டால் வந்தது  இந்த ஞானம்....

அன்று துன்பத்தை  போக்கிய மன்னர்கள்.

புறாவின் துன்பத்தை போக்கியவர் சிபி மன்னர்.

பசுவின் துயருக்காக தன் மகனை கொன்றவர் மனு நீதிச் சோழர்.

கண்ணகியின் சிலம்பின் மாணிக்கபரல்களை கண்டு தன் வாழ்நாளை முடித்துக் கொண்டவர் பாண்டியமன்னர்.

இன்று துன்பத்தை போக்கிய அரசர்கள்

கள்ளச் சாரயம் குடித்து பொட்டென
போக வேண்டாம். நல்லச் சாராயம்
குடித்து அரசு கல்லாவை நிரப்பி
மற்றவர்களுக்கு இம்சை கொடுத்து 
சாவு என்று நல்லச் சாராயக்கடையை
திறந்து விட்டவர் கொலைஞர்..அரசர்

தீய சக்தியால் சூது கவ்விய போதும்
தீய சக்தி திறந்த சாராயக் கடையான
அமுதசுரபியை மட்டும் மூடாமல்  குடி
மக்களின் குடியை கெடுத்து தன் கல்லாவை
நிரப்பியது புர்ர்ச்ச்சிசி தல்வரின் கொல்லைப்
 புற  வாரிசு புருச்சி தல்வி.....அரசி

நாட்டின் இயற்கை வளங்களான 
ஆற்று மணலை, நிலத்தடி நீரை
கடலோர தாது மணலை கொள்ளை
அடித்தவர்களையும் புருச்சி தல்வியின்
சாராயக் கடைகளையும் பாதுகாப்பது
நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்கள்
நீதி வழங்கும் நிதி பதிகள் ஏவல்
பணி செய்யும் காவல் படைகள்.

-
- மேற்படி அன்றைய மன்னர்களும்  அரசர்களும் இன்றைய அரசிகளும் அந்த அரசின் ஆட்சியாளர்களும்தான்  அன்றும் இன்றும்  துன்பத்தை போக்கியவர்கள்.




17 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஏதொ.. கொஞ்சமும் நஞ்சமுமாய் . எனக்கு தோன்றியது.....

      நீக்கு
  2. வணக்கம் வலிப்போக்கரே,
    நல்ல ஒப்பீடு,,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தோழரே....

    அன்றைய மன்னர்களுக்கும் இன்றைய " அரச அரசிகளுக்கும் " ஒரு ஒற்றுமை புலப்படுவதை கவணித்தீர்களா....

    அவர்கள் புறாவின், பசுவின் துயர் போக்கியதை போலவே இவர்களும் பிராணிகளிடம் கருணை கொண்டவர்கள் தான்... தாங்கள் ஆசையுடன் வளர்க்கும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் அவர்கள் செய்ததைவிடவும் மேலான சேவையை இவர்கள் செய்கிறார்களே !

    ஊழலால் சேர்ந்த தங்களின் வைர வைடூரியங்களுக்கு ஆபத்தென்றால் இவர்களின் உயிரும் அல்லவா பதைக்கிறது ?!!!!

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதை பதைக்கிறதை குறைக்கத்தான் புதிய புதிய வழிகளை கண்டுபிடிக்கிறார்கள் திரு. சாம் அவர்களே!!!

      நீக்கு
  4. சரியாக அடையாளம் காட்டி விட்டீர்கள் ,உங்களுக்கு பரிசாய் ஒரு குவார்ட்டர் அனுப்பட்டுமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமக்கும் குவார்ட்டக்கும் ஜென்ம பகையாச்சே... ... அதற்கு பதிலாக நண்பர் கில்லர்ஜியின் அன்புக்காக ஒட்டலில் சாப்பிட்டது செமிக்கவில்லை... தண்ணியில உப்பு போட்டு விற்ற மாப்பிள்ளை விநாயகர் சொடா ஒன்றை அனுப்புங்களேன்.

      நீக்கு
  5. துன்பம் தீர,கவலை மறக்க வழி காட்டியிருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  6. அட்டகாசமான பதிவு நண்பரே! சூப்பர்...கொலைஞர்...புரிச்சிதல்வி..அஹஹ்ஹஹ் செம நக்கல் வரிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பவுமே டென்சனாக இருக்கக்கூடாதுன்னு சொன்னாங்கய்யா....

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...