நாமம் , காந்தி கணக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமால் இருக்காது. அதிலும் மொட்டையும் போட்டு நாமம் போடுவது எப்படி என்று சேது- பாலாவிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.
தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பின்னனியாக வைத்து சைக்கோ பாலா புதிய படத்தை இயக்கப்போகிறாராம்.இந்தப் படத்திற்க்காக 200 துனைநடிகைகளை தேர்ந்தெடுத்து அனைவரையும் மொட்டையடிக்கச் சொல்லி படம் முடியும்வரை மொட்டைத்தலையுடன்தான் இருக்க வேண்டும் என்றாராம்
(தேயிலை தோட்ட முதலாளிகள் தொழிளாலர்களுக்கு நாமம் போட்ட மாதிரி)
எற்கனவே. பாலா.பல நடிகர்களுக்கு மொட்டைபோடாமல் நாமம் போட்ட கதையை தெரிந்து கொண்ட 200 துனை நடிகைகள்,ஆகா.......நமக்கு மொட்டையும் போட்டு நாமம் இல்ல போடப்போறாரு என்று சுதாரித்துக் கொண்ட துனை நடிகைகள்.
மூன்று படங்களுக்கான. சம்பளத்தை மொத்தமாக தந்து விடுங்கள். படம் முடியும்வரை நாங்கள் மொட்டையுடன் இருக்கிறோம் என்று துனை நடிகைகள் சங்கத்தின் மூலமாக கேட்டுள்ளனர்.
பாலாவும் வழியில்லாமல் மொட்டையுடன் நாமம் போடுவதற்கு வேறு வழியில் யோசித்துக் கொண்டு இருக்கிறாராம்.