பக்கங்கள்

Friday, January 27, 2012

இல்லாத ஒன்றிடம்................!!!

விலைவாசியும் ஏறிப்போச்சு
பஸ்பயணசீட்டும் உயர்ந்து போச்சு
கிடைத்த வேலையும் இல்லாம போச்சு

அநியாயத்தை எதிர்த்து கேட்டவர்களை
விடுவிக்க வக்கலின் பீஸூம் கூடிப்போச்சு
நீதியும் துாரமாய் ஓடிப்போச்சு

வாழவும் வழியில்லை
வளமும் நிலைக்கவில்லை
உயிரைமாய்க்கவும் மனமில்லை
 போராடாவும் வீரமில்லை

கொலை கரார்களின் மனம் மாற
பட்டினியால் வருத்தியும் பயனில்லை

வளமான வாழ்வையும்
மண்டியிடாத வீரத்தையும்
கேட்டு இல்லாத ஒனறிடம்
வேண்டி நிற்கிறோம்.

4 comments :

 1. ஆதங்கமான வரிகள் என்ன செய்வது புலம்புவதை தவிர

  ReplyDelete
 2. தங்கள் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 3. கவிதை நன்றாக இருக்கிறது. சிந்திக்க தூண்டும் படைப்பு

  /உயிரைமாய்க்கவும் மனமில்லை
  போராடாவும் வீரமில்லை//

  இப்படி எந்தவித முயற்சியும் இல்லாத சோம்பேறிகளுக்கு இந்த உலகில் இடமில்லை என்பதுதான் உண்மை.

  வாழ்க்கையில் முயற்சி என்ற போராட்டம் இல்லை என்றால் எதுவும் கிடைக்காது.

  கடவுள் உண்ணும் உணவை தட்டில் வந்து கொடுக்க மாட்டார் ஆனால் அதற்கான விளைநிலங்களையும் பருவஸ் சூழ்நிலையையும் மட்டும் ஏற்படுத்தி கொடுப்பார். அதை நாம் சரியாக பயன்படுத்தி நமக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து உணவை தயார் செய்ய வேண்டும் இதற்கு நமக்கு இயற்கையோடு போராடத்துணிவு வேண்டும். இல்லையென்றால் இப்படி புலம்பி கொண்டுதான் இருக்க வேண்டும்

  ReplyDelete
 4. எந்தவித முயற்சியும் இல்லாத சோம்பேறிகளுக்கு இந்த உலகில் இடமில்லை என்பதுதான் உண்மை.---புரிய வேண்டியவர்களுக்கு புரியமா???

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com