பக்கங்கள்

Sunday, November 04, 2012

ஆளும் அதிகார வர்க்கத்தின் இன்னுமோர் மிரட்டல்


உங்களைப்பற்றி-உங்கள்
இருப்பிடத்தைப் பற்றி-குடும்ப
உறுப்பினர்களைப்பற்றி- அறிய
ஆளும் அரசியல் கட்சியின்
இலவச பிச்சைகளை பெற
அடையாள அட்டை- அது
குடும்ப அட்டை   

மந்திரி நாற்காலில் அமரவும்
அரசியல் தொழில் வளரவும்
ஊழல் கட்சிகள் வாழவும்-
அய்ந்து வருடத்திற்கொரு
முறை வார்டு உறுப்பினர்
முதல் பிரதமர் வரை
தேர்ந்தெடுக்க மட்டுமே
உள்ள உரிமைச்சீட்டு-அது
வாக்காளர் அடையாள அட்டை

தங்கநகர அதிவிரைவு
சாலைகளிலும குண்டும்
குழியுமான நகரத்து
வீதிகளிலும் முதலாளிகளுக்கும்
அவரின் பரிவாரங்களுக்கும்
அதிகாரிகளுக்கும் கார் ஓட்டவும்
ஜனங்களுக்கு பஸ் ஓட்டவும்
உங்களுடைய இரு சக்கர
வாகனத்தை ஓட்டுவதற்கு
அனுமதி சீட்டுதான்
ஓட்டுனர் உரிமம்.......

வெளிநாடு சுற்று லா
செல்வதற்கும் வேலை
செய்வதற்கு போவதற்கும்
வருவதற்கும் தங்குவதற்கும்
அனுமதி அளிக்கும் ஒப்புகை
சீட்டுதான் பாஸ்போர்ட்.

பெருகியதை பாதுகாப்பதற்கும்
வருவதை சேமிப்பதற்கும்
பயன்படும் பாதுகாப்பு சீட்டு
வங்கி கணக்கு புத்தகம்.

தொழில் அதிபதிகளும்
அதிகாரிளும் வேலை
செய்து மாத ஊதியம்
பெறுபவர்கள் அரசுக்கு
வரிகட்ட பயன்படும்
துறுப்பு சீட்டு...வருமான
நிரந்தர கணக்கு எண்.

வசதியள்ளவரையும்
வசதியில்லாதவரையும்
அறிந்து கொள்ள,தெரிந்து
கொள்ள.புரிந்து கொள்ள
ஆதாரமாக இம்புட்டு இருக்க..

தேவையற்ற ஆதார் அட்டைக்கு
கருவிழி,கைரேகை போட்டோ
எடுத்தால்தான். குடும்ப அட்டை
புதுப்பிக்கப்படும்,புதிய குடும்ப
அட்டை வழங்கப்படும்-என்பது
ஆளும் அதிகார வர்கத்தின்
இன்னுமோரு மிரட்டல்!!!!!

.

2 comments :

  1. நீங்கள் சொல்வது போல் இவ்வளவு இருக்க, இது தேவையில்லாத வேலை...

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com