அறிவுதான் வளர மறுக்கிறது என்றால்..தலையில் வளரும் முடியும் வளர மறுக்கிறது. ரெண்டுகெட்டான் நிலையில் பாதியோடு நின்றுவிடுகிறது.
பார்ப்பவர்களெல்லாம் தலை முடியைப் பார்த்து என்ன..கோயிலுக்காக...?? என்கிறார்கள். வழுக்கையாக இருந்தால் அறிவு வளர்ந்ததால் இப்படி வழுக்கையாகிவிட்டது என்று பெருமையாக வழுக்கைக்கு ஒரு காரணத்தை சொல்லிக் கொள்ளலாம். அந்த நிலைமையும் ஏற்பட வழியுமில்லை.
என் தாயார், என்னுடைய சிறு வயதில்,தந்தை இல்லாத என்னை நோய் நொடி எதுவும் தாக்கக்கூடாது என்று கோயிலுக்கு வேண்டிக் கொண்டு மாதத்தில் ஒரு தடவையாவது மொட்டை போட்டுவிடுவார்.
எனக்கு விபரம் தெரிந்து நான் கடவுள் மறுப்பு கொள்கையாளனாக ஆகும் வரைக்கும் மொட்டை போட்டதால் தலை முடி ஒவ்வொன்றும் தட்டையாகவும் தடிமனாகவும் மாறிவிட்டது. அதனால் முடி வணங்காமுடியாக கொஞ்சமாக இருந்தாலும் நெஞ்சை தூக்கி நிமிர்த்தி நிற்கிறது.
இப்படியான வணங்கா முடியை குறைப்பதற்க்காக மருத்துவர் சங்க செயலாளர் பாண்டி நிலையத்துக்கு செனறேன். கலகக்கார சாதிவெறி மருத்துவர் கொய்யாபழம் சொன்னமாதிரி..அவுக அவுக சொந்தத்திலே முடிய வெட்டிக் கொள்ளுங்கடா.. என்பதை மருத்துவர் பாண்டியும் ஏற்றுக் கொண்டு இருந்தால்.. பாண்டி பாடு திண்டாட்டமாக போயிருக்கும். என்னை மாதிரியான வணங்கா முடிகாரர்களுக்கும் ஒரே அவஸ்தையாக இருந்திருக்கும்.
மருத்துவர் பாண்டி, சாதிவெறி மரத்துவர் கொய்யப்பழம் சொன்னதை..“ அவிங்கெடக்கிறான் பீத்தப்பய” ன்னு ,சொல்லி,அந்தாளு சொன்னத நா...கேட்டா எனக்கு வேலை தருவது யாரு ? வீட்டுவாடகை, கடை வாடகை அந்தாளா தருவரு என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லாததால் தன் கிளினிக்கை அனைவருக்கமான கிளினிக்காக நடத்தி வருகிறார்.
பாண்டி கிளினிக்கு நான் போன சமயம், கிளினுக்குள்ளே ஒரே சிரிப்பும் பேச்சு சத்தமுமாய் இருந்தது. சிவ பூஜையில் கரடி நுழைந்த கதையாக இருக்கக்கூடாது என்று நிணைத்து மெதுவாக கடையின் வாசலில் போய் நின்றேன்.
பேசிக் கொண்டு சிரித்தவர்கள் என்னைக் கண்டவுடன்.அங்கு அப்படி ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்பது மாதிரி ,அப்படியே சப்த நாடியும் அடங்கியவர்களாக அமைதியானார்கள்.
மருத்துவர் பாண்டி தன் தொழிலின் சாதனமான கத்தரிக் கோலால் கஜக்..கஜக.கஜக் என்று சேரில் அமர்திருந்தவரின் தலை முடியை குறைத்துக் கொண்டு இருந்த சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டு இருந்தது.
என்னாடா.. இது..... என்னைக் கண்டவுடன் எல்லோரும் இப்படி மவுனமாகிவிட்டார்கள் என்று. ஆச்சரியப்பட்டு அதன் காரணம் அறிய ஒவ்வொரு முகத்தையும் ஒரு வித எள்ளலோடு கவனித்தேன்.
நான் அப்படிப் பார்ப்பதைக் கண்ட ஒருவர் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சத்தத்துடன் சிரித்துவிட்டார். எல்லோரும் அவரை முறைத்தார்கள்.
அந்த முறைத்தலை..திசை திருப்புவதற்க்காக நான் இப்படிக்கேட்டேன.
என்னங்கப்பா...... ஒரே சிரிப்பும் பேச்சுமாய் இருந்தவர்கள். என்னைக் கண்டதும் அப்படியே பேச்சு மூச்சும் இல்லாமல் அமைதியாகிவிட்டீர்கள். நான் இடையூறு எதுவும் செய்து விட்டேனா..... வேனா..நான் போயிட்டு..அப்புறமா..வரவா... என்றுவிட்டு மருத்துவர் பாண்டியின் ஒப்புதலுக்காக பாண்டியைப் பார்த்தேன்.
அப்படியெல்லாம் ஒன்னுமில்லண்ணே...... வேறு ஒரு சம்பவத்தை பத்தி சொல்லி சிரிச்சு கிட்டு இருந்தாங்க..... நீங்க வந்தவுடன் மரியாதைக்கு அமைதியாகிட்டாங்கண்ணே என்றார்.
பெரிய நகைச்சுவை சம்பவமாக இருக்கும்போல...... அந்தச் சம்பவத்த பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா????? நானும் சிரிச்சு அதிக நாளாச்சு என்றும், உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் சொல்ல வேண்டாம் என்றேன்.
“இது வேறண்ணே“ என்றார். சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தவர்.
பாண்டியிடம் மெதுவாக பேசினேன். கைப்பேசியில் அந்தப்படம் பார்த்து அதில் வந்த காட்சியைப் பற்றி சிரித்தீர்களோ..அதனால்....இழுத்தேன்.
மருத்துவர் பாண்டி.. அது இல்லேண்ணே , இது வேறுண்ணே என்றுவிட்டு மற்றவர்களை பார்த்து கண்சாடையாக சொல்வதற்கு அனுமதி கேட்டார்.
மற்றவர்கள் சிறிது நேரத்துக்குப்பின் எனக்கு எச்சரிக்கையுடன் .ஒரு நிபந்தனை விதித்து நடந்த சம்பவத்தை அதாவது சிரித்து பேசிக் கொண்டு இருந்த நிகழ்ச்சியை பாண்டி சொல்ல அனுமதித்தனர்.
சம்பவத்தை தெரிந்த நானும் அட, அப்படியா...!!! நிஜமாகவா...!! என்று ஆச்சரியம் அடைந்தேன.
நான் ஆச்சரியம் அடைந்த, அந்த சம்பவத்தை அடுத்த பதிவில் கதையாகச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஆஹா நீங்களும் தொடரும் போடப்பழகிட்டீங்களா அசத்துங்க நண்பா,,,
த.ம. 1
எல்லாம் தாங்கள் காட்டிய வழிதான் நண்பரே!!..
பதிலளிநீக்குஅடுத்த பதிவை தாமதம் இல்லாம போடுங்க ,தோழரே !
பதிலளிநீக்குசட்டமன்றத்திலே MLA க்கள் பார்க்க வேண்டியதை, செல்லிலே அவர்கள் பார்த்து ரசித்து சிரித்து இருப்பார்களோ :)
த ம 2
நானும் அப்படி நிணைச்சுதான் கேட்டேன். அது இல்லேன்னு சொல்லிட்டாங்க.....ஜீ
பதிலளிநீக்கு