ஞாயிறு 18 2015

இந்துவை எதிர்க்கும் இந்து மக்கள் கட்சி ...........

Sn Sikkandar
மனு தர்மத்தை எதிர்த்து போராடாதது ஏன்?
***************************************************
எழுத்தாளர் மதிமாறன் :- இந்த புத்தகத்தை இவ்வளவு கடுமையாக எதிர்க்கும் அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு ஒரு கேள்வியாக கூட இல்லாமல் வேண்டுதலாக ஒரு விஷயத்தை வைக்கிறேன்,
ஹிந்துவான அர்ஜுன் சம்பத் ஆகிய உங்களையும் ஹிந்துவான என்னையும் ஹிந்துவான குமரேஷன் அய்யாவையும் மற்றும் அனைத்து சூத்திரர்களையும் "வேசியின்" மக்கள் என்று சொல்லும் " மனு தர்மத்தை எதிர்த்து போராடாதது ஏன்?
காஞ்சி சங்கராச்சரியருடன் சுப்ரமணியன் சுவாமி சரிசமமாக உக்காருகிறார், அதே ஹிந்துவான மத்திய அமைச்சர் " பொன் ராதாகிருஷ்ணன்" மண்டியிட்டு தரையில் உக்காரவைக்க படுகிறார், இந்த அவலங்களை எல்லாம் எதிர்த்து போராடாத நீங்கள் உண்மையான ஹிந்துவாக இருக்க வாய்ப்பில்லை, அதனால் நான் ஹிந்து மத காவலன் என்று சொல்வதை நிறுத்திகொள்ளுங்கள்
அர்ஜுன் சம்பத்:- அய்யா அய்யா மனுதர்மத்தை நான் படிக்கிறதில்லை, நானா ஏன் அதை படிக்கணும், நான் படிக்கிறதெல்லாம் " தேவாரம், திருவாசகம்" அதனால் மனு தர்மத்தில் என்ன சொல்லி இருக்கு என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.
எழுத்தாளர் மதிமாறன் :- ஆறுமுக சாமி சிதம்பரம் கோயில்ல "தேவாரம் திருவாசகம்" தானே பாடினார், அவரை கடுமையாக தாக்கி சட்டையை கிழித்து கோயிலுக்கு வெளியே தள்ளிய தீட்சிதர்களை எதிர்த்து போராடாதது ஏன்?
அர்ஜுன் சம்பத்: - ப ப ப க ப க ப , அவர்கள் சோழ மன்னரால் போற்றப்பட்ட தீட்சிதர்கள் அவர்களை நான் எப்படி எதிர்த்துபோராட முடியும்
எழுத்தாளர் மதிமாறன் :- வள்ளலார் சிதம்பரம் கோயில்ல "தேவாரம் திருவாசகம் பாடினப்போ, அவரும் கடுமையாக தாக்கப்பட்டு வெளியேற்றபட்டார்.
அர்ஜுன் சம்பத்: - ப ப ப க ப க ப , அய்யா அய்யா நீங்க இப்படி விவாதத்துக்கு சம்பந்தமில்லாத கேள்விகேட்ட.... நா நா நா ......... சரி இவ்ளோ பேசுறிங்களே மனு தர்மத்தை பற்றி கருணாநிதியே மனு நீதி சோழன், மனு நீதி என்று சொல்லுவாரே, அதுகென்ன சொல்றிங்க.
எழுத்தாளர் மதிமாறன் :- அது மனு(petition)நீதி , மனு தர்மம் கிடையாது, நீதி தவறாத சோழ மன்னனுக்கு மனு நீதி சோழன் என்று பெயர்,
இந்த அடிப்படை விஷயங்கள் கூட தெரியாத அர்ஜுன் சம்பத் அவர்கள் ஹிந்து மதகாவலன் என்று காட்டிகொள்வது , அவரை குறைந்த பட்சம் ஹிந்துவாக கூட என்னால் ஏற்றுகொள்ள முடியாது, அர்ஜுன் சம்பத அவர்களே நீங்கள் ஹிந்துவே இல்லை என்று பகிரங்கமாக சொல்கிறேன் நான்.
நீங்கள் உங்கள் பிழைப்புக்காக மதத்தை கையில் எடுத்திருக்கும் ஒரு அரசியல்வாதிதான் நீங்கள்.//
சர்ச்சைக்குரிய மாதொருபாகன் புத்தகம் தொடர்பான விவாதமேடை நிகழ்ச்சி, நாள் : 13/01/2015
நன்றி:ஜாபர்




www.youtube.com/watch?v=zDfBhQiD-NY

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....