படம்-சித்திரவீதிகாரன் |
படம்- |
ஒரு தகவலுக்காக
மெயின்ரோட்டில்
நின்று நண்பரின்
பெயரைச் சொல்லி
முகவரி கேட்டேன்.
நண்பர் இருப்பது
அம்பேத்கர் நகர்
என்றார்கள்........
அம்பேத்கா் நகர்
சென்று பார்த்தபோது
நண்பர் நண்பருக்கு
நண்பர் உடன்
பெரியார் நகரில்
இருப்பதாக தகவல்
சொன்னார்கள்....
கூடவே வழி
காட்டலுக்கு ஒரு
சிறுவரை உடன்
அனுப்பி வைத்தார்கள்.
அங்கு சென்று
நண்பரைக் கண்டதும்
நான் திகைத்துப்
போனேன்........
காரணம் நண்பர்கள்
இருவரும் ஒரு
மாத யோக்கியவான்
சீருடையில் காட்சி
அளித்தார்கள்.......
தேடி வந்த
விபரத்தை சொல்லி
விட்டு நண்பரிடம்
சீருடையை காட்டி
முருகனுக்கா? ஐயப்பனுக்கா?
என்று கேட்டுத்
தொலைத்தேன.
பெரியார் நகரில்
இருப்பவர்கள் முருகனுக்கும்
அம்பேத்நகரில் வசிப்பவர்கள்
ஐயப்பனுக்கும் செல்வதாக
சீருடை வேறுபாட்டை
சுட்டிக் காட்டி
சொன்னார்..............
அப்போதுதான் எனக்கு
புரிந்தது தெருப்
பெயர்களுக்கும் தெரு
வாசிகளுக்கும் சம்பந்தம்
இல்லையென்று............
ஒருமாத யோக்கியர்கள் பற்றி.......மார்கழி மாத யோக்கியர்கள் வருகிறார்கள்...........!!!........& 11மாத அயோக்கியர்களும் 1மாத யோக்கியர்களும்
பதிலளிநீக்குநொள்ளைக்கண்ணுக்காரன் பேரு கண்ணாயிரமாம்
தமிழ் மணம் 1
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.....
பதிலளிநீக்குஅவரவர் மனதிற்கு...
பதிலளிநீக்கு???
சித்திரம் வரையத் தெரிந்தவன்தான் சித்திரை வீதியில் இருக்கணும் என்றால் நடக்குமா ?
பதிலளிநீக்குஒரு மாச யோக்கியர்கள் என்று நீங்கள் சொன்னால் போதுமா ?டாஸ்மாக்கில் அவர்களுக்கு தனி கிளாஸ் எல்லாம் உண்டே !
பெரியாரையும், அம்பேத்கரையும்
பதிலளிநீக்குஅடையாள அரசியலாக்கி
கொள்கைகளை கைவிட்டதன் பயன்.
அவரவர் மனசு என்றாலும் பொருள் ஒன்றுதானே. திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!
பதிலளிநீக்குடாஸ்மாக்கில் அவர்களுக்கு தனி கிளாஸ் வேறு உண்டா.... ?? ஒரு மாத யோக்கியர்கள் என்று கூட சொல்ல முடியாதே!!..திரு. பகவான்ஜி அவர்களே!!!
பதிலளிநீக்குபெரியாரையும், அம்பேத்கரையும்
பதிலளிநீக்குஅடையாள அரசியலாக்கி விட்டதால் வந்த கொடுமையா....இது??? திரு.... அவர்களே!!!
அனைத்திலும் அரசியல் என்ற நிலையாகிவிட்டதால் இவ்வளவு பிரச்சனைகள். தங்களது பதிவு யதார்த்தத்தை அருமையாக முன்வைத்தது. நன்றி.
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்துரைக்கு நன்றி! ஐயா....
பதிலளிநீக்கு