பக்கங்கள்

Sunday, March 08, 2015

அய்யா.... அவன் ஒரு...........

படம்-tamil.oneindia.com2

அவன் எனக்கு வணக்கம்
சொல்வதும் இடக்கைதான்
 மற்றவர்களுடன் கை
குலுக்குவதும் இடக்கைதான்.
கூட்டத்தைக் கண்டு
கை ஆட்டுவதும் இடக்கைதான்.
அமர்திருக்கும்போது கன்னத்தை
 தடவுவதும் இடக்கைதான்
பொருள்களை கொடுப்பதும்
வாங்குவதும் இடக்கைதான்
 மலம் கழித்த இடத்தை
கழுவதும் இடக்கைதான்
எல்லாச் செயல்களுக்கும்
அவன் பயன் படுத்துவது
 இடக்கை என்பதால்
அவனை நாங்கள்
லெப்ட்டன் என்று அழைக்கிறோம்

ஏனோ.. தாங்கள் சொல்வது
போல் உண்ணுவதற்கு  இடக்
கையை பயன் படுத்தாமல்
இருந்தாலும் அவன்
இடக்கைதான்..ஆகையால்
அய்யா  .....அவன் ஒரு
லெப்ட்டதான்.......................

14 comments :

 1. ஸூப்பர் நண்பா வாழ்த்துகள் தொடருங்கள்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துகளுக்கு நண்பரே!!

   Delete
 2. அவர்கள் கூடுதல் திறமைசாலியாக இருப்பதை பார்த்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. கூடுதல் திறமைசாலிகள்தான் நணபரே..சேட்டைகள் செய்வதிலும் கூடத்தான்.

   Delete
 3. நன்றாக இருக்கிறது அண்ணா . தங்களின் பதிவுகள் இலைமறைக்காயாகவே இருப்பது ஏனோ ???

  ReplyDelete
  Replies
  1. மண்பானைகளை சில்வர் -சருவப்பானைகளை போல் சட்டுபுட்டுன்னு பயன்படுத்தினால் மண் பானை உடைந்து விடுமல்லவா..அதற்க்காகத்தான் நண்பரே.. இலைமறை காயாக....

   Delete
 4. கையில் என்ன தலைவா பேதம், மனம் சரியாக இருந்தால் சரி, தாங்கள் லெப்ட்டன் என்று சொன்னதும் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்ததது, என் அடுத்த பதிவாக,,,,,,,,,,,,, நன்றி.

  ReplyDelete
 5. அடுத்த பதிவுக்கு ஒரு கதை நிணைவுக்கு வந்ததற்கு நன்றி!

  ReplyDelete
 6. இடதுசாரி சிந்தனை யாருக்குத்தான் இல்லை ,அந்த கொள்கைக்காகத்தான் அதிகம் பேரில்லை !
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. ஆகா...இடது..சாரிக்கு போயிட்டிங்களா..!!!!!. எந்தக் கமிசன் என்று முடிவு எடுப்பதற்குள் காணாமல் போன தங்கள் கருத்துரை வந்துவிட்டது ஜி.

   Delete
 7. என் வோட்டு சரியாய் விழுந்திருக்கு ,என் கமெண்ட் எங்கே போச்சு ,ஆராய ஒரு விசாரணைக் கமிஷன் போடுங்க ஜி :)

  ReplyDelete
 8. இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள், சற்று கூடுதலான திறமை உள்ளவர்கள் எனக் கூறக்கேட்டுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு கை அல்லது கால் இல்லாதவர்கள் கூட தங்களுடைய இடைவிடாத பழக்கத்தினால் திறமை உள்ளவர்களாக மாறுகிறார்கள் என்கிறார்கள் அய்யா.

   Delete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!