செவ்வாய் 20 2016

மகனை மறந்து மறைந்த தாய்க்கு... முதலாவது நிணைவு தினம்..

என் தாய்
பிறந்த சில
வருடங்கள் கழித்து
என் தாயின்
தந்தை இறந்தார்.

என் தாய்
என் தந்தையை
மனம் புரிந்த
சில மாதங்களில்
என் தாயின்
தாய் மறைந்தார்

என் தாய்
என்னை இரண்டாவதாக
பெற்று எடுத்த
சில நாட்களில்
என் தந்தையை
அகால மரணத்துக்கு
பறி கொடுத்தார்.

இரண்டு குழந்தைகளுடன்
தன் கனவனை
பறி கொடுத்து
நிற்க கதியாய்
நின்றவரை பெண்டாள
சுற்றி சுற்றி
வந்தான் என்
தந்தையின் உடன்
பிறந்தான் ஒருவன்.

அழகும் அறிவும்
அற்ற என்
தாய் தான்
பெற்ற குழந்தையான
என்னைப் பார்த்தே
தைரியம் கொண்டு
பெண்டாள நிணைத்தவனை
 எதிர்த்து நின்றார்.

வெறி கொண்ட
அந்த காமுகனோ
தாயின் மடியில்
பால் குடித்துக்
கொண்டு இருந்த
என்னை இடைஞ்சலாக
கருதி காலால்
 மிதித்த  போது
குணிந்து கொண்டு
அவன் மிதித்த
மிதியை தன்
இடுப்பில் வாங்கி
என்னை காப்பாற்றியதால்
என் தாய்
வயதான காலத்தில்
குறுக்கு ஒடிந்து
கூனியாய் போனார்.

என் சின்னஞ்
சிறு வயதில்
காலையில் நான்
கண் முழிக்கும்
முன்பே என்னை
என் சகோதரியின்
பாதுகாப்பில கவனிப்பில்
விட்டு விட்டு
வேலைக்கு சென்று
விடும் தாய்

வேலை முடிந்து
இரவு வீடு
வந்து சேரும்
போது தூங்கி
விடும் என்னை
எழுப்பி மறுநாள்
தாயைக காணாமல்
வரும்  என்
அழுகைக்கு பரி
காரமாய் தான்
வாங்கி வந்த
தின் பண்டங்களை
தின்ன விட்டு
சாப்பிடாமல் படுத்து
விட்டதால சிறிது
உணவையும் உண்ண
விட்டு தொட்டிலில்
நான் தூங்கும்
வரை ஆட்டி
விட்டு பின்
தூங்கி எழுவார்
என்னை வளர்த்து
ஒரு ஆளாக
ஆக்கிய தாய்.க்கு

நான் பிறந்து
வளர்ந்து  எனது
ஐம்பது அய்ந்து
வயதுவரைக்கும்
என் தாய்க்கு
பாது காவலானாக
பாது காப்பாய்
என் தாய்
சொல்லுக்கு மறு
பேச்சு பேசாதாவனாய்
என் கடமையை
செய்து வந்தேன்.

 அப்படி பட்ட
என்னை முதுமை
அடைந்த என் தாய்
தன் பழைய
நிகழ்ச்சி நிரலின்
படியே தன்
மகளிடமும் மகளின்
மகள் மகன்களான
பேத்தி பேரன்களின்
கவனிப்பில பாதுகாப்பாய்
அவர்களுக்கு பாது
காவலாய் இருக்க
விட்டு விட்டு
தன் மகனை
மறந்து  திரும்ப
முடியாத நிலையில்
மறைந்து விட்டார்.
என்தாய்.

மகனை மறந்து
மறைந்த என்
தாய்க்கு இன்று
முதல் ஆண்டு
நிணைவு நாள்...


குறிப்பு- . என் தாய் என்னை மறந்து மறைந்த நாள் 20.09.2015.


IMG-20160825-WA0005.jpg ஐக் காண்பிக்கிறது
என் தாய்க்கு மகள்வழி பேத்திகள் தங்கள் நகைளை போட்டு அழகு பார்த்தபோது எடுத்த படம்




6 கருத்துகள்:

  1. தியாகத் திருஉருவம் தாயின் மறைவு வேதனை தரக் கூடியதே !
    மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் நண்பரே !

    பதிலளிநீக்கு
  2. போற்றுதலுக்குரிய சிறந்த தாய் அவர்.தலை வணங்குகிறேன்.
    சுற்றி சுற்றி
    வந்தான் என்
    தந்தையின் உடன்
    பிறந்தான் ஒருவன்?
    என்ன கொடுமையிது பெரிதாக வெறும் பெருமை பேச்சு பேசும் உதவாக்கரை தமிழகத்தில்?

    பதிலளிநீக்கு
  3. நெகிழ்ச்சி வலிபோக்கன். அம்மா மேலேயிருந்து உங்களுக்கு நன்மை செய்துகொண்டேயிருப்பார்.

    பதிலளிநீக்கு
  4. வழக்கம் போல தாய்மையைப் போற்றும் ஒரு பதிவு என எண்ணிப் படிக்கத் தொடங்கினேன். கடைசியில், உங்கள் தாயை இழந்த வேதனையில் நீங்கள் வடித்தது என்றறிந்து திகைக்கிறேன். உங்கள் தியாகத் தாயின் நினைவுகள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  5. கார்த்தி என் மகனே என்றாலும் என் தாய் , என் அம்மா அவன்தான். 23 வயதில் அவன் என்னை விட்டு பிரிந்து மேல் உலகம் சென்று விட்டான்.உங்கள் தாயை பிரிந்து நீங்கள் படும் வேதனையை நான் 12 வருடங்களாக பட்டுக் கொண்டிருக்கிறேன்.
    karthik amma
    kalakarthik

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....