திங்கள் 27 2017

இயக்கம்..மாறுதல் இரண்டும் ஒன்றா....???

தூங்கிக் கொண்டே படித்ததால் வந்த குழப்பம் என்று  தூக்கம் கலைந்த பின்னர்தான்  எனக்கு தெரிந்தது.

படிக்க வேண்டிய காலத்தில்  காலமும் நேரமும் என்னை படிக்க விடாமல் துரத்தியது .....அப்போது விட்டதை இப்போது படிக்கலாம் என்று புத்தகத்தை விரித்து படிக்க ஆரம்பித்தால்    விட்ட குறை தொட்ட குறையாக வாசித்த சிறிது நேரத்தில்  கண்கள் சொறுக..தலை கோடாங்கி அடிக்க... தொடங்கிவிடுகிறது..  சே  .. இதென்ன  விடாது துரத்தும் கொடுமை என்று நிணைத்து தூங்கிவிட்டு பிறகு படிக்கலாம் என்று படுத்தால்.... அங்கேயும் கொடுமை துரத்துகிறது... படுத்த சிறிது வினாடிகளில்  பல்வேறு  மன குழப்பத்தால் தூக்கம் வர மறுக்கிறது.. 

சே..... என்ன  கொடுமை இது... இந்தக் கொடுமை எனக்கு மட்டும்தானா என்று நிணைத்து வீட்டை அன்னாந்து பாரத்தால் எந்த ஒரு அசீரிரியும் ஒலிக்க வில்லை...

திரும்ப எழுந்து தூக்க கலக்கத்தில் படித்ததை நிணைத்து பார்த்தேன். அடடே“ ன்னு எனக்குள் ஒரு மகழ்ச்சி...ஆகா படித்தது எல்லாம் நிணைவுக்கு வருகிறதே  என்று.....

மறைந்த..மறைந்திருந்தவை எல்லாம் நிணைவுக்கு வந்தால்........ ரெம்பவும்  நன்றாக இருக்கும் என்று நிணைவு வேறு பக்கம் திரும்பிது... இப்படியே  போய் கொண்டிருந்த நிணைவை திரும்ப இழுத்து பிடித்து படித்ததில் கொண்டு நிறுத்துவதற்கு சற்று கடினமாக இருந்தது.

இயக்கம்..மாறுதல் இரண்டும் ஒன்றா..? இல்லை ஒரே அர்த்தத்தை ஒரே செயலை குறிக்கிறதா? இல்லை  தனித்தனியான சொற்களை குறிக்கிறதா..? என்று சந்தேகம்..


ஊடே....பார்ரா அறவியல பத்தி சிந்திக்கிறாண்டா..?ஃ என்று எனக்கு வந்த கிண்டலுக்கு ..ஏயோவ்  பிளஸ் டூவில  இரண்டாவது குருப்பில இயற்பில் படித்தவன்...அந்த பரிட்சையில்... பாஸ் மார்க்கு 69 மார்க்எடுத்தவன்... கேடு கெட்ட இயற்பியல் வாத்தியான்  செய்முறை பயிற்சியில் ஒரு மார்க் போட்டு இருந்தால் நான் பாஸாகி இருப்பேன்.. அந்த வாத்தியான் ஒரு மார்க்  போடாததற்கு காரணம்.... அண்ணா நகரில் வாத்தியான் கட்டும் வீட்டு வேலைக்கு எல்லா மாணவர்களும் சென்றபோது  அதில் நான் மட்டும் மிஸ்ஸிங்..அந்த கோபத்தில்..மார்க் போடாமல் பழிவாங்கி விட்டான்....பாசாகி இருந்தாலும் மேல கிழிச்சிருப்ப...அன்றைக்கு வழியும் வாய்ப்பும் இருந்திருக்காது...மனசு வேறு வழியில ஓடிப் போயிறுச்சு....

இங்குட்டும் அங்குட்டும் மனசு போய்கிட்டும் வந்துகிட்டும் இருந்துச்சு..மறுபடியும் இழுத்து கொண்டு வந்து  இயக்கம்... மாறுதலை பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. சந்தேகம் தீர்க்க புத்தகத்தை திறக்கலாமா?? என்று யோசித்த போது.....

“ஆத்தாடி... வேணாம்.....தலை  கோடாங்கி அடித்துவிடும்... எதுக்கு வம்பு... இப்பத்தான் மொத..மொதறைய  படித்தது நிணைவுக்கு வந்திருக்கு ...இதப்போயி கெடுத்துகிட்டு.............அப்பாடி......

இயக்கம் என்ற சொல்லுக்கு அகராதியின் படி பார்த்தால் இடம் மாற்றம் என்று பொருள் வருகிறது....ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு நகர்தல், போவது என்பதை குறிக்கிறது...சரி.........அப்ப....மாறுதல் எதைக் குறிக்கிறது..???

உதாரணத்துக்கு.. ஒரு பஸ். பெரியார் நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணிக்கு செல்கிறது என்பதை எடுத்துக் கொள்வோம்.

..யோவ்...அது இப்ப மாட்டுத்தாவணி இல்ல...எம்ஜியார் நிலையம்
தெரியுமில்ல..... ்இருக்கட்டும் எனக்கு மாட்டுத்தாவணிதான்னுதான் மனசுல வருது...


மாறுதல்......... மாறுதல்........ம்ம்....மாறுதல் என்பதற்கு இப்படி அர்த்தம் கொள்ளலாம்.... ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு மாறிக் கொள்வதை மாறிக் கொள்வதை மாறுதல் என்று  சொல்லலாம்...

ஆகா.......ஆகா....உதாரணத்துக்கு.... நெல் .அரிசியாக மாறுவது.....இதையும் கூட சொல்லிக் கொள்ளலாமா...??? புழுவாக  தோன்றி   டெங்கு கொசுவாக மாறுவதையும்  எடுத்து்கொள்ளலாமே....... ஓ..யெஸ.......

இப்ப நல்லா புரிஞ்சு போச்சு......... என்னது   புரிஞ்சு  போச்சா.....இல்லையில்லை புரிந்து இருக்கிறது.

ஆக....இயக்கம்்  என்பது இடமாற்றத்தை குறிக்கிறது....மாற்றம் என்பது வடிவத்தின் நிலையின் மாற்றத்தை.....குறிக்கிறது... ஆகா..... ஆகா எனக்கு
நன்றாக புரிந்தது......  அன்று முழுவதும் மனது சந்தோசமாக இருந்தது...

படித்தது தொடர்ந்து  நிணைவுக்கு வரவேண்டுமே..என்ற ஏக்கமும் தொடர்ந்து வந்தது....

பெரியார் நிலையம் க்கான பட முடிவு

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்