சனி, ஏப்ரல் 16, 2011

இவங்கள்ல புத்திசாலி யாருங்க ?


கேள்வி நம்பர்-ஒன்,
கடந்த சட்டமன்றத்தில் தி.மு.க கருனாநிதியை அடிக்க 
பாய்ந்த அ.தி.மு.கவைச் சேர்ந்த சேகர்பாபு இப்போது
தி.மு.க வில் இணைந்து. தி.மு.க வேட்பாளராக நின்று
தேர்தல் முடிவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்

கேள்வி நம்பர்-டூ.
கற்பு பற்றி பேசியதால் தமிழ்நாட்டில் துள்ளி குதித்து 
சாமியாட்டம் ஆடிய அய்யா ராமதாஸ்சும் அண்ணன்
திருமாவும். அந்த குஷ்புவையே  தங்களது தேர்தல்
பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர்.

கேள்வி நம்பர்-த்ரீ.
அண்ணியா இருந்து அன்னையான இதயதெய்வம்
அம்மா அவர்கள்  காத்திருந்த புரட்..சீ புயலை 
கழட்டிவிட்டு ,நீதான் ஊத்திக் கொடுத்தாயா?
என்று கேட்ட ,நேற்று வந்த சீமை சாராயகேப்டன்
கருப்புவை சேர்த்து கொண்டார். இவுங்கள்ல புத்திசாலி
யாருன்னு விடை தெரிஞசு  சொல்லாம போனா உங்க
தல வெடிக்காது.விடை தெரிஞ்சு சொன்னிங்கன்னா
இவர்களை பின்பற்றி வரிசையா நிக்கிறவங்களுக்கு 
அடுத்த தேர்தலுக்கு பயன்படுமேன்னுதான்.
சட்டுபுட்டுன்னு அவசரமா சொல்லாம நன்றாக
தேர்தல் ஆனையம்மாதிரி தீவிரமாக கண்கனித்து
சொல்லுங்கா. அவுக தொழில் இரகசியம் என்று
சொல்லாம போயிடாதிங்கோ.  அப்புறம்.....நன்றிங்க!!!!

1 கருத்து:

  1. அவங்க எல்லாருமே புத்திசாலிதான்... அவங்கள நம்பி ஏமாறும் மக்கள்தான் ஏமாளிகள்...

    பதிலளிநீக்கு