செவ்வாய், மே 03, 2011

ஏன்? எதற்கு? எப்படி?

ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதம் அந்த ஒவ்வொருத்தரும்
ஒவ்வொரு விதமா யோசிப்பாங்க, இதுல“யோசிப்போர் சங்கம்”
வேறு.அந்த சங்கத்துல சத்தியமா என்னய சேர்க்க மாட்டாங்க
சிபாரிசு கடிதம் கொண்டு போனாலும் யோசிப்பாங்கன்னா?
பாத்துகிங்க. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கயில்ல.எங்க வாத்தி
அதாங்க வாத்தியாரு, “நீயெல்லாம் எதுக்குடா படிக்க வர்..ரென்னு
திட்டுவாருங்க. அவரு திட்டினதுக்கு காரணம். இப்பத்தாங்க புரியுது
எரும மாடு மேய்க்கிறதுக்குகூட யோசிக்கனும்முனு,

யோசிக்காமல் செய்யும் காரியங்களால் கஷ்டங்கள்,நஷ்டங்கள்
என்வீட்டு வாசலில் காத்து கிடக்குமுன்னு. எந்த பரதேசி சொல்
லுச்சுன்னு தெரியல. யோசிக்காம திடிரென்று வந்ததுதாங்க
ஏன்? எதற்கு? எப்படி?ங்கிறது.“அதெப்படி” என்றெல்லாம்
கேட்கக்கூடாது. பிள்ளையாரு பால் குடிச்சப்போ, மாரியாத்தா
கண்ணிலிருந்து இரத்தம் வடிஞ்சப்போவெல்லாம்“அதெப்படி”
என்றா கேட்டிங்க, . எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்.
உங்களுக்கு பதில் சொல்ல தெரியலைனா, நீங்கள் என்
லிஸ்ட்ங்கோ!

“பல நாயி வாலோட திரியுது
சில நாயி வாலில்லாம அலையுது”
........................................ஏன்?

“ஊமை ஊரெகெடுக்குமாம்
பெருச்சாளி வீட்டை கெடுக்குமாம்”
.......................................எதற்கு?

“பூனைக்கு, தன் கண்களை மூடினதுமே
உலகமே இருண்டு போயிடுமாம்”
...............................................எப்படி?

நிணைவில்கொள்க.
“எப்பொருள் யார் யார் பதிவில் படித்தாலும்
அப்பொருள் உணர்ந்து பதிலிடுதல் நன்று.”

2 கருத்துகள்:

  1. உங்க பேருல தப்பு ஒன்னுமில்லையே? வலிபோக்கன் தானே? அதாவது வலியை போக்குபவன்? வழிப்போக்கன்னு ஏற்கனவே ஒருத்தர் இருக்காரு..(fyi)

    பதிலளிநீக்கு