பக்கங்கள்

நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 02 2016

எத்தனை பேருக்கு தெரியும்....








நீல் ஆம்ஸ்ட்ராங்க்
 நிலவுக்கு செல்லும்போது
அமெரிக்க அரசின்
கடும் எதிர்ப்பை
மீறி தனது
பாக்கெட்டில் முத்து
ராமலிங்கம் போட்டாவை
வைத்துக் கொண்டு
போனது எத்தனை
பேருக்கு தெரியும்????????????



வியாழன் 16 2015

சட்டம் அனைவருக்கும் சமமுன்னு நம்ம ஞானப்பிரகாசம் சொல்லிட்டாண்டி...

படம்-dailyceylon.com




மாப்ள.....

கோடி கோடியாய்  நீ
டாஸ்மாக்கில கொட்டிய
வள்ளலாக இருந்தாலும்ம்..
போதையில டூ வீலர்
ஓட்டினா... ஹெல்மெட்டு
மாட்டிதாண்டி நீ வண்டி
ஓட்டனும்மாண்டி ..  ஒனக்கு
 எந்த சலுகைளும் காட்ட
முடியாதாம்ண்டி சட்டம்
அனைவருக்கும்  சமமுன்னு
நம்ம ஞானப்பிரகாசம் சொல்லிட்டாண்டி...

புதன் 11 2012

படையை சிதறி ஓட விட்டதால்.பிடிக்க மாவட்ட முதண்மை நீதிபதி உத்திரவு....



மாவட்ட கோர்ட்டு வாயிலில் பாதுகாப்புக்கு நின்று இருந்த காவல் படை மீது மரக்கிளையிலிருந்த இரண்டு பாம்புகள் சீறியபடி பொத்தென்று விழுந்ததால் காவலுக்கு நின்ற படை சிதறி ஓட்டம் பிடித்தது.

போலீஸ் படை சிதறி ஓடியதைக் கண்ட இரண்டும் “நீங்கள் மற்றவர்க்கு எமனாக இருந்தாலும் என்னை எதிர்த்தால் உங்களுக்கு நான் எமன்” அதை மனதிற்க் கொண்டு ஓடினீர்களே ! அந்த பயம் எப்போதும் இருக்க வேண்டும் என்று மப்பில் மெல்ல ஊர்ந்து சென்று அருகிலுள்ள புதரில் ஒளிந்து கொண்டன.





இரு பாம்பகளின் மப்பை பொருக்காத வக்கீல்களில் சிலர் மாவட்ட அமர்வு நீதிபதியிடம் புகார் கொடுக்க. மாவட்ட நீதீ..பதியோ விசாரனைக்கு அய்ந்து வருடமோ,பத்து வருடமோ, அதற்கு மேலோ காலஅவகாசம் எடுக்காமல்



உடனே காவல் படைக்கு பயமேற்படுத்தி,படையை சிதறி ஓடவிட்ட குற்றத்திற்காகவும், கைது செய்ய(பிடிக்க)வனத்துறைக்கு உத்திரவிட்டார்.

மேலும்.தப்பி ஓடியஇரண்டுக்கும் பாதுகாப்பு கொடுத்த குற்றத்திற்க்காக புதர்களை தீ வைத்து கொளுத்தவும் “தீ” அணைப்பு துறைக்கும் உத்திரவிட்டார்.

வெள்ளி 16 2011

ஆத்தாவின் புத்தி.....பின்புத்தியா?...முன் புத்தியா?....




ஆத்தா.......ஆத்....தா.... எனக்கு
 ஒருஉண்மை புரிஞ்சு ஆகனும்

மூவரை துாக்கில் ஏற்றக்கூடாது
இதே சட்டசபையில் தீர்மானம்
போட்டீயே...........ஆத்தா.................
பின்புத்தியிலா?.....முன் புத்தியிலா...?

மூவர்க்கு துாக்கு விவகாரம்
நீதி மன்ற விசாரனைக்கு
வந்தபோது அடித்தீரே...ஆத்தா
அந்தர் பல்டி குந்தர் பல்டி.......!!!
பல்டியடித்தது பின் புத்தியிலா...?
இல்ல.  முன்புத்தியிலா...?

பரமக்குடி துப்பாக்கி சூட்டில்
பலியானவர்களுக்கு..நிவரணத்
தொகை கூடுதலாக கேட்டு
போராடியபோது.........ஆத்தா..
இருமாந்துவிட்டு.....ஞானம்
பெற்றவராக நிவராணத்தொகை
கூடுதலாகக் கொடுத்தது......பின்
புத்தியிலா....?   முன் புத்தியிலா...?

ஆத்தா......எனக்கு ஒரு
உண்மை புரிஞ்சாகனும்...

சேட்டன்கள் மட்டும் 2006-ன்
தீர்ப்பை எதிர்த்து தீர்மானம்
போட்டு இன்றுவரை............
மறாமல் புளுகி திரிகிறார்களே..!!
முன் புத்தியிலா...? பின் புத்தியிலா...?

முல்லைப் பெரியாற்றின் தமிழகத்து
உரிமையை ஒரு பொதும் விட்டுக்
கொடுக்க மாட்டோம் தீர்மானமும்
மலம் துடைக்கும் பேப்பராக.............
மாறப்போவது.. .................................
பின்தேதியிட்ட புத்தியிலா????????
முன் தேதியிட்ட புத்தியிலா??????


ஆத்தா.......ஆத்..........தா.....எனக்கு
உண்மை தெரிஞ்சாகனும்.....

திங்கள் 28 2011

உண்மையில்லை! வதந்தியை நம்பாதீர்கள்!!!

ஓட்டு போட்டு ஓய்ந்து போனவர்களுக்கும்
ஓட்டு போட ஓயாமல் இருப்பவர்களுக்கும்
ஒட்டு போட காத்து இருப்பவர்களுக்கும்
ஓர் அறிவிப்பு!!!.............................................

இந்திய நாட்டிற்கு பொதுவுடமை
அப்பத்தை குறைந்த விலையில்
பாதிப்பு இல்லாமல் வாங்கித்
தருவதாக வேஷம் போட்டு
இதுநாள் வாங்கித் தராமல்
காலம் கடத்தி வந்த சாயம்
வெளுத்த இடது.வலது
பட்டாதாரர்களில் ஒருவரான
பீமன் போஸ்-என்பார்

மக்கு அவையில் இடது பட்டா
தாரர்கள் எண்ணிக்கை குறைவாக
இருந்ததால் “சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீட்டை அனுமதிக்கும்”
துணிச்சலான முடிவை மத்திய அரசு
மேற்க் கொண்டதாகவும்.......

குறைவான பட்டாதாரர்களைக் கொண்டு
மத்திய அரசின் துணிச்சலை கட்டுப்
படுத்த முடியவில்லையெனவும்
இருந்தாலும் “உள்ளேயும்-வெளியேயும்”
எதிர்ப்போம் என்றும்....................................

இடது,வலது பட்டாதாரர்களின்
ஆதரவு இல்லாமல் மத்திய அரசு
ஆளுவதால்.......... இந்நிலையாம்

இந்த அண்டப்புளுகு மற்றும் ஆகாயப்
புளுகை நம்பி ஏமாற வேண்டாம்
இது உண்மையில்லை!!! வதந்தியை
நம்பாதீர்கள்!!! நம்பி ஏமாறதீர்கள்!!1

வெள்ளி 11 2011

காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு !

   
பெயர்.  பி.எம்.எல.கல்யாணசுந்தரம்
பதவி.    புதுச்சேரி மாநிலத்தின் கல்வி
.                அமைச்சர்
தகுதி.    பத்தாம் வகுப்பில் தேர்வு எழுத
                 பேனாவில் மை இல்லாததால்
                  வேறு நபரை எழுத வைத்து பெயி
                  லானவர்
இவரைப்பற்றி தகவல் அறிந்தால் அருகி
லுள்ள புதுச்சேரி தலைமை செயலகத்திலோ
அல்லது இவரை தேடி ரீல் விட்டு கானாமல்
போகாமல் தேடி அலைஞ்சு ஓய்வு எடுக்கும்
மூன்று தனித்தனி படையிடமோ தகவல்
தெரிவிக்குமாறு ஓட்டு போட்ட குடிமக்களிடம்
கேட்டுக்கொல்லப் படுவார்கள்.                 

வியாழன் 10 2011

ஏலேய்........ய்......ய்..........மக்கா?








ஏலேய்....ஏத்தின பெட்ரோல் விலய
 குறைக்க முடியாது.பெட்ரோல விலைய
 ஏத்தாமல் இருக்க முடியாது. பெட்ரோல்
விலையை ஏத்தவதற்கு யாரிடமும் கலந்து
ரைக்க முடியாதுலே! ஓட்டு போட்டியாலே!
ஓவ் வேலமுடிஞ்சு போச்சுலே! அடுத்த ஓட்டா?
அத்த அப்போபாப்போம்லே! போராட்டம்,
கீராட்டமுனு வந்தியாலேசுட்டு பொசுக்கி
புடுவேன்.படாவா,உன்னால ஏந் தொப்பிக்
குள்ள இருக்கிற மயிரக்கூட பாக்கமுடியாதுலே!
ராஸ்கல்

பேசாம ஒஞ் சோலிய பாரு!
சொலி இல்லீயா,பேசாம,
டாஸ்மாக் குடிமகனா இருக்கப்பாருலே!

ஏலேய்........ய்......ய்..........மக்கா! என்னலே!
நாஞ்சொல்றது புரியுதாலே!..........

திங்கள் 17 2011

உள்ளாட்சியில் ஒரு அ(க)டி

ஒருவர்...அந்த வேட்பாளர் ஏன்? தன்
பொண்டாட்டிய அடிக்கிறாரு?

மற்றவர்.....ஒரு ஓட்டு இருக்காம்,
இன்னொரு ஓட்டு
எங்கடின்னு கேட்கிறாரு.
அதுதான் இதுன்னு
சொல்லுச்சாம்.



வாக்காளர்---அந்த புத்துல ஓட்டு போடப்
போறவங்கள போலீசு..ஏன்? அடித்து
விரட்டுது!!!

வாக்காளர்2.--அவுங்க ஆளுங்கட்சி போலீசாம்
அவுங்களே மொத்த ஓட்டையும்
போட்டுறாங்களாம்????



தேர்தல்அதிகாரி.--உங்க பேரு லிஸ்டுல இல்லாததால்
உங்களுக்கு ஓட்டு இல்லை.

தொண்டர்.--..........என்னது ஓட்டு இல்லையா? அம்மாவின்
தொண்டனுக்கு ஓட்டு இல்லையென்றால்
இந்த புத்தையே அழித்திடுவோம்.



நண்பர்.்் என்னங்க தோழர் ஓட்டு போடப்போகலையா?

தோழர்ஃஃ ஓட்டெல்லாம் போடுவதில்லை .போலி
தேர்தலுக்கு வேட்டுதான் வைக்கனும்.



ஆளுங்கட்சிகாரர்...சார், எங்க வார்டுல ஓட்டு போடாத
வங்க நிறைய பேர் இருக்காங்க
முன்னனெல்லாம் சிரமமில்லாம
அவுங்க ஓட்ட போட்டோம். நீங்க
மனசு வச்சா, உங்களுக்கு பதவி
உயர்வு.மற்றும் இத்யாதி நாங்க
கவனிச்சுக்கிறோம்.

தேர்தல் அதிகாரி...- உங்களுக்கு சிரமமே வேண்டாம்
எல்லாத்தையும் நானே பாத்துக்
கிறேன்.

சனி 10 2011

சமூக விரோதிகள் தாலிய அறுக்கக்கூடாதுன்னுதான்.....அரசாங்கமே தாலிய .......!!!!

மதுவிலக்கை முழுவதுமாக அமுல் படுத்தினால்
அரசுக்கு வரும் பதிணைந்துகோடி வருமானமும்
சமூக விரோதிகளுக்கும் தனியாருக்கும் சென்று
விடும்

கள்ள சாராயத்தை ஒழித்ததன் மூலமே குடிபான
விற்பனை உயர்ந்துள்ளது

கள்ளச் சாராய விற்பனைக்காகவே மதுவிலக்கை
சிலர் வற்புறுத்தி வருகிறார்கள்

சமூக விரோதிகளின் கஜனாவுக்க சென்று கொண்டு
யிருந்த நிதியை முதல்வர்ஜெய் லலிதா அம்மா
அவர்கள் முயற்சினால் அரசு கஜனாவுக்கு திருப்பி
விட்டுயிருக்கிறாரகள்.இப்படியாக மதுவிலக்கு
அமைச்சர் புள்ளி விபரங்களை கொடுத்துள்ளார்.

--உண்மைதானுங்கோ அமச்சரே! பெண்களின்
தாலிய அறுத்த பெருமையெல்லாம்முதல்வர்
ஜெய் லலிதா அம்மாவுக்கே உரியதுங்கோ!
புன்னாக்கு கதையெழுதும்முன்னால் முதல்வர்
கருனாநிதிக்கு இல்லீங்கோ! இன்றைக்கு நாட்டு
மக்கள்நாட்டு சரக்கை குடிக்காமல் பாரின்
சரக்கையும் ஜ.எஸ.ஜ முத்திரையிட்ட சரக்கை
யும் குடித்து சுபிட்சமாக இருக்கிறார்கள் என்றால்
அதற்கு காரணமே முதல்வர் அம்மாதானுங்கோ
அமச்சரே!

வாழ்க அம்மாவின் தொண்டு! வளர்க
அம்மாவின் புகழ்!! இப்படி புள்ளி விவரத்தை
கொடுத்த அமச்சருக்கு இந்த குடிக்காத மகனின்
தாங்ஸ



நல்ல சரக்கை குடிக்கிறதுக்குதானே,கடையை
திறந்து வச்சுருக்கோம், மற்றவர்கள்குடிக்காமல்
போனா எப்படி? முன்னேல்லாம் குடிச்சு இருந்தா
உள்ளே போடுவாங்க,இப்போ குடிக்காம இருப்பவர்
களையும் புடிச்சு உள்ள போட்டால் குடி பான
விற்பனை கின்னஸ்க்கு போகுமில்ல அமச்சரே,

தினமணியிலசுட தங்களுக்கு ஆதரவா
“மக்கள் கருத்து ”க்கு அதிக ஓட்டுவிழுந்திருக்கு
அமச்சரே...........எப்பாடு பட்டாவுது தமிழகம்
முன்னுக்கு வந்துடனும் அமச்சரே............

வினவு தளம்தான் “பனை மரத்துல வவ்வாளு
டாஸ்மாக் இல்லேன்னா திவாலு” ன்னு பொய்யா
சொல்லுது அமச்சரே!!

வெள்ளி 09 2011

டும்...டும்....டும்...டும்..குடிமக்களுக்கோர் நற்செய்தி!!!

தினமும் ஓய்வு இல்லாமல் குடித்துவிட்டு கும்மாளம் போடும்அல்லது
அவதிப்படும் குடிமக்களுக்கோர் நற்செய்தி!

நம் தமிழ்நாட்டு மதுவிலக்கு அமைச்சர் அறிவிப்பு
என்னவென்றால்

சில்லரை விற்பனை கடைகளிலும் உணவக கூடங்களிலும்
திருவள்ளுவர்தினம்,காந்தி ஜெயந்தி,நபிகள்பிறந்ததினம்
மகாவீர் ஜெயந்தி வள்ளலார் தினம் மற்றும் முதல்வர்
ஜெய்லலிதாவின் உத்தரவுப்படி மேலும் சுதந்திரதினம்
மேதினம்,குடியரசு தினம் ஆகிய எட்டு நாட்களுக்கு குடி
பானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்றார்.

எனவே,இந்த எட்டு நாட்களில் குடிமக்கள் நல்ல ஓய்வு
எடுத்துக் கொண்டு நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொல்லு
மாறு குடிமக்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
டும்....டும்.....டும்.......டும்.....டும்,.....டும்,,,,,.........................

சனி 06 2011

ஆகா,ஆகா,இவரல்லவோ பறக்கும் அரசியார்!!

சென்னை  சமுத்திரத்தில் குப்பைகளும் கூளங்களும்
துாசிகளும் கிடக்குது..அதை சுத்தம் செய்யக்கூடிய
வழிகளை  ஆராய அரசியார் கிளம்பிட்டாங்கய்யா!
கிளம்பிlட்டாங்க!!

முன்னால் அரசர் ஆட்சியில் மூத்தவர் இருக்க
,இளையவர் பட்டத்து இளவரசர்சென்னை மா
சமுத்திரத்தை அழகுபடுத்துவதற்காக  நான்கு கால
குதிரைகளானஏ.சி டாடா சுமொவிலும்,குவாலிக்ஸிலும்
ஏரியா,ஏரியாகவாக வலம் வந்து குதிரை செல்லமுடியாத
இடஙகளில் வீர நடை போட்டும் பார்வையிட்டு அழகு
படுத்த ஆய்வு செய்தார்.

மகா சமுத்தரத்தின் பேரலையால் அரசரின் செங்கோல்
கீழே விழ..பட்டத்து இளவரசர்  பதவியிழந்தார்.

இதற்காகவே,காத்திருந்த முன்னால் அரசியும் அவர்தம்
தோழியும்புசைகள்என்ன,பரிகாரங்கள்என்ன,அத்தனையும்
சலிக்காமல்பலசெய்து.உள்ளமெல்லாம் பேரானாந்தம் பொங்க
மிக்க களிப்புடன் ஆட்சி கட்டிலேறினார்.

அரசரின் ஆட்சியில் அரசர் கட்டிய அரன்மனையை
புறந்தள்ளியது போன்று பலவற்றை மாற்றிய அரசியார்


பட்டத்து இளவரசர் சென்னை சமுத்திரத்தை அழகாக
மாற்றுவதை மாற்றாமல்குப்பையும் கூழமும் நிறைந்து
கிடக்கும் சென்னை சமுத்திரத்தை துாய்மையாக்க

அம்மாம்,பெரிய பட்டத்து இளவரசரைப்போன்று
நாலுகால் குதிரையில் செல்வது, குப்பையின்
வாசனையை நுகர்வது அரசியார்க்கு பிடிக்காத ஒன்று.
.வீறு நடைபோட்டால் அரசியாரின் பாதம் என்னாவது..
சுனாமி வந்து மக்கள் பிணக்காடனா போதே அரசியார்
நடந்தா போனார்..

அப்பேர்பட்ட அரசியிரின் பாதமும்,நாலுகால் குதிரைகளால்
உடலும் நோகலாமா? சே! சே! சே!

யாரெங்கே? கொண்டு வாருங்கள் வான்வெளி ஓடத்தை
,சூரியனின்பகல்ஒளியில் சர்ரென பறந்து வானிலிருந்து
அழுக்குகள் நிறைந்த சென்னைசமுத்திரத்தை கீழே பார்த்து
ஆய்வு செய்யப்போகிறார்.

ஆகா,ஆகா,இவரல்லவா மதிநுட்பம் நிறைந்த அரசியார்.
டிஸ்கவரி சேனலில்வான்வெளி ஓடத்திலிருந்து ஓடும்
மானையும் முயலையும் பார்ப்பது போல்அரசியாரும்.
ஓடத்திலிருந்து பறக்கும் குப்பைகளையும் பரவும்
துாசிகளையும்அல்லவா?பார்த்து ஆய்வு செய்ய போகிறார்.
எப்பேர்பட்ட ஒளி ஊடுறுவும் பார்வை. இப்படிபட்ட
பார்வைக்கு கொடுத்து வச்சிருக்கனும்மைய்யா!

முன்னால்அரசரையும் பாரு எப்பப்பார்த்தாலும் கருப்பு
கண்ணாடி போட்டுகிட்டு.

மதிநுட்பம் கெட்ட இளவரசரு, எப்பப்பார்த்தாலும்
குதிரையிலும் வீரநடையிலும் படைசூழ சென்று
அல்லாரையும் வெயிலில் அலைக்களித்தாரு்

ஏ.......ஏ.............சென்னை சமுத்திரத்தின் துாய்மையை
கெடுக்கும் குப்பைகளே!கூளங்களே!துாசிகளே!
அரசியார் வான்வளிஓடத்தில் தவழ்ந்து வரும்போது
எல்லாரும் ஓடி மறைந்து கொள்ளுங்கள்.
அரசியார் களைப்படையாமல்
ஆய்வு செய்யட்டும்.

ஞாயிறு 17 2011

தமிழ் நாட்டின் ஆத்தாவுக்கே! சம்மனா?

பிள்ளையில்லா எனக்கு
சொத்தெதற்கு? நான்
நடித்தே சம்பாதித்த
சொத்தெ போதாதா!

முன்னோரு காலத்தில்
தமிழ்நாட்டின் பொன்
மனச் செம்மல்.
புரட்சித்தலைவர்
மக்களின் திலகம்
டாக்டர் எம்ஜியார்
எனக்கு ஒரு
சத்தியம் செய்தார்

தமிழ் நாட்டில் ஒண்ட
வந்த நீ....... ஒட்டாமல்
போய் விடக்கூடாது.
எனக்குப் பின் இந்த
தமிழ்நாடடை நீதான்
காக்க வேணும்.என்
பெயரைச் சொல்லி
ஆளவேணும்

அவரின் ஆன்மா சாந்திக்காக
சத்தியத்தை மனதிலேற்றி
இன்று வரை கொடா நாட்டில்
தங்கி என்னுடம்பை பாராமல்
நாட்டு மக்களுக்கு நான்
என்னவெல்லாம் செய்தேன்

முதல்முறையாக ஆட்சிக்
கட்டிலில் மக்கள் அமர்த்திய
போது,அமரர் ராஜீவை
கொன்றதால் தஞ்சம் மென
வந்தவர்களை விரட்டி
அடித்தேன்.முரண்டு
பிடித்தவர்களை உள்ளே
தள்ளி கம்பி எண்ண
வைத்தேன். தமிழினத்துக்கே
தான்தான் தலைவன் என
இருமாந்து இருந்த
அவர்களை வாயிருந்தும்
ஊமையாக்கினேன்.

ஒண்ட வந்த பிடாரியே!
ஈழத்தமிழரை விரட்டாதே!
என்று என்னை  பழித்தி யும்
எழுதியும் பேசியும் தெரு
வெங்கும்போஸ்டர் ஒட்டிய
தமிழகத்து தீவிர வாதிகளை
செவுளில் அறைந்து உள்ளே
தள்ளி னேன்.

பிள்ளை யில்லா எனக்கு
சுதாகரன் பிள்ளையாக
வந்தான். பிள்ளையில்லா
எனக்கு சொத்து எதற்கு?
ஒரு தாய்  தன்  மகனுக்கு
செய்யும் கடமையாக


உலகமே போற்றும் திருமணமாக
எளிமையாக,சீரோடும் சிறப்போடும்
நடத்தினேன்.அந்தத் திருமணத்திலே
நானும் தோழியும் எவ்வளவுக்கு
எவ்வளவு ஆடம்பரமில்லாமல்,
குண்டுமணி நகை சூடாமல்
எளிமையாக இருந்தோம் என்று
தமிழக்கத்து ரத்தத்தின் ரத்தங்களை

தமிழகத்தில் சந்து பொந்துகளில்
புகழ் பரப்பிய “ஒரு கல்யாண கதை
கேளு” ஒலிசித்திரத்தை கேளுங்கள்
உங்களுக்கே உண்மை புரியும்

என் இரண்டாவது பொற்கால
ஆட்சியில் ,என் பணிக்காக
ஒரு ரூபாய் ஊதியம் பெற்று
பக்தையை துவம்சம் செய்த
சங்கர மடத்து புாசாரியை
அவனின் நெட்டிய பிடித்து
உள்ளேதள்ளினேன. நாத்தீகம்
பேசி மஞ்சள் துண்டு அணியும்
கருனாநிதியே ! செய்யத்
துணியாத செயற்கறிய செயலை
செய்தேன்.அதற்காக,என் சாதி
தினமணியேன்ன,தினமலமென்ன
அவாளின் சங்கங்ளின் பாராட்டு
வசவுகளைவாங்கிக் கொண்டேன்.
எதற்காக?

பிள்ளையில்லா எனக்கு
சொத்திற்காகவா? இல்லை,
இல்லவேயில்லை.

என்னை சீண்டிப் பார்த்து
உள்ளே போட்ட கருனாநிதியை
பதிலுக்கு பதிலாக,“அய்யோ
என்னைக் கொல்லுறாங்களே!
எனகதறவிட்டு என்மீது பயம்
கொள்ளச்செய்தேன். எதற்க்காக?

பிள்ளையில்லா எனக்கு
சொத்து சேர்க்கவா? இல்லை
இல்லவேயில்லை..

ஆடி அசைந்து வேலை செய்து
கொளுத்த சம்பளத்தை ஊதியமாக
பெற்று,தன் பணியை கையுட்டு
பெறாமல் செவ்வனே,செய்து
முடிக்கும்  நன்றி கெட்ட அரசாங்க
ஊழியர்களை சூழற்றி சூழற்றி
விரட்டி யடித்து என் நிர்வாகத்
திறமையை காட்டினேனே!
என்னை புகழாத ஏடுகளும்
வாய்களும் உண்டா?

வாயில்லா ஜீவன்களை பலிகடா
ஆக்கும் மாக்களின் மடமையை
போக்கிட ஆடு மாடு கோழி வதை
தடைச் சட்டம் கொண்டு வந்தேன்

காசுக்காக கடவுளை மாற்றும்
இழிநிலையை போக்கிட மதம்
மாற்றத் தடை சட்டம்  இவ்வளவும்
எதற்க்காக? எதற்க்காக?ஃ

பிள்ளையில்லா  எனக்கு
சொத்தெதற்கு? இருக்கிற
சொத்தே போதாதா?

கருனாநிதியின்  குடும்பத்தின்
அளவில்லா சொத்து குவிப்பின்
கொடுமை தாங்க முடியாமல்
கொடா நாட்டில் சிந்தித்து
கொண்டு யிருந்த என்னை
சிந்தித்தது போதும் என்று
தமிழகத்து ரெங்கநாயகியாக
அன்னலெட்சுமியாக பெரு
வாரியாக என்னை ஆடசிக
கட்டிலில் அமர த்தி யுள்ளார்கள்.

மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
அதனால்தான.சபையை ஜார்ஜ்
கோட்டைக்கே மாற்றினேன்
கேனையனும் கோனையனும்
சேர்ந்து கல்வி வள்ளல்களை
வழிபண்ணிடகூடாது என்பதற்காக
கல்வியை சமச்சீ.........ர் சீராக்கினேன்

மக்களின் தீர்ப்பு கருனாநிதி
குடும்பதிற்கு திரும்பி விட
கூடாது தற்காகவாஅரிசி,குக்கர்
மிகஸி.போன்றவை இலவசமாக
தருகிறேன்இல்லை.இல்லவே
யில்லை.பிள்ளையில்லா எனக்கு
சொத்தெதற்கு?

தமிழகத்தை முன்மாதியாக்கத்தான்
டாஸ்மாக் உள்பட எல்லா விலை
யையும் உயர்த்தினேன். சொத்து
சேர்ப்பதற்கல்ல.படித்தவர்களுக்கு
புரியும்.படிக்கதாவர்களுக்கு புரியாது

நான் கொடா நாட்டில் ஓய்வெடுத்த
போது என்க்காக உழைத்த
பேச்சு புலிகளுக்காக,
செயல் சிங்கங்களுக்காக
தன்மானத் தலைவர்களுக்காக
தொப்புள்கொடி உறவுகளுக்காக
ராஜபட்ஜே மீது சட்டசபை தீர்
மானம் கொண்டு வந்தேன்
எதற்க்காக? எதற்காகஃ

கருனாநிதி குடும்ப ஆட்சியில்
மதுரையிலே  ராஜபட்சேவின
கொடும்பாவி எரி்த்த மதுரை
விரர்களுக்கு சம்மன் அனுப்பி
வழக்கை ரத்துசெய்யாமல்
இருக்கிறேனே.எதற்காக?
நான் ஈழத்தாயாக இப்பதால்தான்

பிள்ளையில்லா  எனக்கு
சொததெமற்கு ?என்மீது சொத்து
குவிப்பு வழக்கு சம்மனா?

தமிழகத்து ரெங்கநாயகி நான்
தமிழகத்து அன்னலெட்சுமி நான்
புரட்சி தலைவரின் புரட்சி தலைவி நான்
தமிழகத்து செல்வி நான்
தமிழகத்து ஆத்தாவே நான்தான்.
தமிழகத்து ஆத்தாவுக்கே!சம்மனா?


குறிப்பு. ஒரு கல்யாண கதை கேளு-
 மகஇக வெளியிட்ட ஒலிப்பேழை

மதுரையில் 2009 ல் ராஜபட்சே கொடும்பாவி
எரித்த விரர்கள .மகஇக.புமஇமு.விவிமு.
அமைப்பு தோழர்கள்






வியாழன் 07 2011

ஊரு நாட்டாமைய இல்ல.,உலக நாட்டாமைய...........

குற்றவாளிகளின் எண்ணிக்கை அமெரிக்காவில்  பத்து இலடசமாம்.


பின்னே,இருக்காதா! இதுவே கம்மியா இருக்குது.
இந்தியாவுல தெரு நாட்டாமையே மப்புல இருக்கும்
போது.ஊர்நாட்டாம,வட்டநாட்டாம,மாவட்டநாட்டாம
மாநிலநாட்டம,எல்லாம் கடந்து உலக நாட்டாமயா
இருக்கிறதுன்னா.சும்மாவா? உலக வாயை மூட புறப்பட்ட
உலக நாட்டாமை உள்ளுர் வாயை மூட முடியாம
அல்லாடுது.

அட ,மைக்கேலு, அதாங்க உலக நாட்டாமையின்
உலக டான்சர்......மைக்கேல் ஜாக்சனின் சட்டை
எட்டு கோடிக்கு ஏலம் போனதாம்.

அம்மாடியோவ்,சட்டயே.....எட்டுகோடிக்கு போனா
மைக்கேலுவின் ஜட்டி(உள்ளாடை) எத்தன கோடிக்கு
போகும்.  ஊர அடிச்சு உலயில  போடுறவன் நாட்டுல
இதுமட்டுமா? நடக்கும். பணக்கார நாடுன்னு மப்ப
காட்டவேணாமா? இந்தியாவுல  அடுத்தவன் கோவணத்த
உருவிட்டு மப்ப காட்டயிலே..பண்க்கார நாடு சும்மா
இருக்கலாமா?. காட்டுங்கப்பா! உங்க மப்ப காட்டுங்கப்பா!!!!!

ஞாயிறு 03 2011

சுத்த......கர்....ர்...நாடக..மாகவுல்ல இருக்குது.

முன்னால் முதல்வர் குமாரசாமி,

ஓ......ஓ....மஞ்சு....நாதா.....என் வாயை அடைக்க எடியுர்
ரப்பா ஒரு ஆளை அனுப்பினார். பேரம் கம்மியா......
இருந்துச்சு, அதனால ,நா...ன் ஒத்துக்கல!!. பேரம்
அதிகமாயிருந்சுச்சுன்னா,என் வாயை  நானே
அடைச்சுடுறேன்.பேரத்தில்ல  உன் கமிஷனையும்
முழுங்காம தந்துடுறேன்.இது சத்தியம் சத்தியம்

மஞ்சுநாதர் என்று பெயர் கொண்ட சிலை.
.......................................................................................................
.......................................................................................................
.....................................................................................................

இன்னால்முதல்வர் எடியுர்ரப்பா.
சாமி, அந்த கூமட்ட சாமி,என்னய இந்த ஆட்டு
ஆட்டுது. உனக்கு கொடுக்கிறத அந்த ஆசாமிக்கு
கொடுக்கலாம்முன்னு நெனெச்சேன்.தப்பு நாதா!
தப்பு உனக்கு நாமம் சாத்த நெனச்ச என்னய
மன்னிக்கனும் சாமி நாதா, நான்  அனைத்து
துறையிலும் கல்லா கட்ட அருள் புரிவாய்
மஞ்சுநாதா !

மஞ்சுநாதர் சிலை.
..............................................................................................
...............................................................................................
.............................................................................................
குறிப்பு-மஞ்சு நாதாரி . ரெண்டு பேருக்கும் என்ன
சொல்லியிருக்கும். ஒட்டு கேட்டவுக  சொல்லுங்களேன்.

சனி 25 2011

சமையல் வாயு,டீசல் விலை உயர்வு உடனடி அமல்.

முடியாது!முடியாது! முடியாது!!!
மதிப்பு கூட்டு வரியை குறைக்க
முடியாது,
நீ ஏன்? குறைக்கவில்லை
என்னை குறைக்கச் சொல்ல
உனக்கு யோக்கியதை இல்லை
விலை உயர்வை உடனடியாக 
திரும்பப் பெறவேண்டும்
ஆமாம் சொல்லிபுட்டேன்.


துணிவிருக்கா? உங்களுக்கு?
எங்கே! துணிவிருந்தால்
கூட்டணியில இருந்து
வெளியில வாங்க பார்ப்போம்
உண்மையிலே, .........
நாங்கதான் துணிவுள்ளவங்க!!
விலை உயர்வு மனிதா
பிமானற்றச்செயல்
மனிதாபிமானமுள்ள
அகண்டஇந்துஸ்தானின்
துணிவுள்ள கருத்து இது.


மூளை இருக்கா!
மூளை இல்லையா?
மூளை இருப்பவர்களைவிட
மூளை இருப்பவர்கள் 
பலமுறை நன்றாக
சிந்திக்க வேண்டும் 
விலை உயர்வு
மிகுந்த சிரமத்தை
உண்டாக்கும் ஆகவே,
சிந்திக்க வேண்டும்
என்னா?
நான் சொல்றது?


மாட்டோம்! மாட்டோம்! 
மாட்டோம்!! ஏற்றுக்
கொள்ளமாட்டோம்
என்ன?
கண்ணாமூச்சி விளை
யாடுறீங்களா? நாடு முழுவதும்
லெப்ட்-ரைட் நடத்துவோம்
நீங்களும்  வந்து கலந்துகுங்க!
ரெடியா??


அய்யோ, இன்னும்
கொஞ்ச நேரத்துல
கரண்ட கட்ஆகப்
போவுது சீக்கிரம்
பதிவேற்ற
முடியுமான்னு பாரு!-
எம்மனசு

சனி 18 2011

முதலில் அம்மாவுக்கு,ரெண்டாவது அய்யாவுக்கு.

அலோ......அலோ..........அலோ............

வணக்கம் மேடம்
நல்லாயிக்கேன் மேடம்
................................................
.................................................
ஊசி போட்டாங்க,
மருந்து மாத்திரை கொடுத்தாங்க
இப்போ உடம்பு பரவாயில்லீங்க மேடம்

மேடம் ,போன தேர்தல்ல நீங்க வந்தா
தமிழகத்த ஆண்டவனாலகூட
காப்பாத்த முடியாதுன்னு சொன்னத
மனசுல வச்சுகிடாதிங்க மேடம்
அப்போ,அந்த சீன்ல அப்படித்தான்
டயலாக் பேசவேண்டியிருந்ததது.
இப்போ,இந்த சீன்ல நீங்க வெற்றி
பெற்றதின் மூலம் தமிழகம்
காப்பாற்றப்பட்டது.மேடம்
வாழ்த்துக்கள் மேடம்.


அல்லோ......அல்லோ........அல்லோ.....
வணக்கம் அய்யா!
உங்க அன்பு...........பேசுறேன் அய்யா!1
இப்போ, ஒன்னுக்கு,ரெண்டுக்கு
நல்லா போகுதுங்கய்யா!
சீக்கிரமா வந்துடுறேன். அய்யா!

அய்யா,பல ஏற்றத்தாழ்வுகள
சந்தித்தவர் நீங்கள் வயசான காலத்தில்
தோல்வியில் துவண்டு விடாமல்
தங்கள் உடல்நலத்தைப் பேணுங்கய்யா!

அடேங்கப்பா, நடிகர் தொலைபேசியில் பேசிட்டாரு
நான் ஊமையில்ல, நான் ஊமையில்ல
நான் நல்லா இருக்கேன் என்று நிருபிச்சிட்டாருல..........

செவ்வாய் கிரகத்திலும் இருப்பார், டாஸ்மாக் கல்லாவிலும் இருப்பார்

காந்தியை பார்த்திருக்கியா?

ஓ......பார்த்துஇருக்கிறேனே!. அவரோட பேசியிருக்கனே!


டேய் ,எந்தக்காந்திடா?

சிபிஎம்ல இருக்கிற காந்திதானே?

அந்தக்காந்திய கேக்கலடா?  பிர்லா மாளிகையில
தங்கியிருந்து, ஆட்டு பால குடிச்சுகிட்டு, தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு ”அரிஜன்” ன்னு பேரு வச்சு, இந்தியாவுக்ககே
சுதந்திரம்  வாங்கி கொடுத்தாருலட,. அந்தக்காந்திடா?

படிச்சிருக்கேன், நேருல பார்த்தில்லயே!

போடா, முந்தாநாளு பிறந்த குழந்தகூட
பார்த்துருக்கு,நீ பாக்கலேன்னு சொல்ற?

திரும்ப திரும்ப பொய் சொல்லாதடா?
மொட்டைத்தல,பெரியகாது,அடர்நத மீசை
பொக்கவாய் . அச்சு அசலாய்.இருக்கிற
காந்திய எங்கயோ,இருக்கிற.இத்தாலி
நாட்டச்சேர்ந்த வானிலை ஆர்வலர்
மாட்யு லேனியோ என்பவர்.செவ்வா
கிரகத்திலே பார்த்துயிருக்காரு!
நீ என்னடான்னா,இந்தியாவுல
பிறநதுட்டு காந்திய பாத்ததேயில்லன்னு
அண்டபுளுகு விடுறியேடா?

காந்தி கல்லாவிலும் இருப்பார்,பேங்கிலும்
இருப்பார்ஏன்? சுவிஸ் வங்கியிலும் இருப்பார்.
அவருஇல்லாத இடமேது?.
டாஸ்மாக்கில அவர கொடுத்துதாண்டா
குடிமகனா ஆகமுடியும்

செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில
அய்ரோப்பிய வின்வெளி ஏஜென்சி அனுப்பிய
ஆர்பிட்டர் விண்கலம் .செவ்வாய் கிரகத்திலிருந்து
எடுத்து அனுப்பிய  படங்களைஆய்வு செய்தபோது

செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதில காந்தியின்
உருவம் போலவே இருநததாக வானிலை
ஆர்வலர் ஒருவர் கூறினாரு

அவர் சொன்ன அடையாளம் அனைத்தும்
காந்தி ரூபா நோட்டில் அச்சு அசலா
இருக்கு..காந்தி பணத்தை பார்த்ததால்
மயக்கத்தில் கூறினாரா என்று தெரியவில்லை.


கொஞ்ச நாள் கழித்து  அகில கிரகங்களிலும்
காந்தி காட்சியளிக்கிறார் என்று ஆய்வுகளும்
ஆர்வலரும் கூறுவார்கள். எதுக்கும் கொஞச
நாட்கள் காத்து இருங்கப்பா.......!!!!!





செவ்வாய் 03 2011

ஏன்? எதற்கு? எப்படி?

ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதம் அந்த ஒவ்வொருத்தரும்
ஒவ்வொரு விதமா யோசிப்பாங்க, இதுல“யோசிப்போர் சங்கம்”
வேறு.அந்த சங்கத்துல சத்தியமா என்னய சேர்க்க மாட்டாங்க
சிபாரிசு கடிதம் கொண்டு போனாலும் யோசிப்பாங்கன்னா?
பாத்துகிங்க. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கயில்ல.எங்க வாத்தி
அதாங்க வாத்தியாரு, “நீயெல்லாம் எதுக்குடா படிக்க வர்..ரென்னு
திட்டுவாருங்க. அவரு திட்டினதுக்கு காரணம். இப்பத்தாங்க புரியுது
எரும மாடு மேய்க்கிறதுக்குகூட யோசிக்கனும்முனு,

யோசிக்காமல் செய்யும் காரியங்களால் கஷ்டங்கள்,நஷ்டங்கள்
என்வீட்டு வாசலில் காத்து கிடக்குமுன்னு. எந்த பரதேசி சொல்
லுச்சுன்னு தெரியல. யோசிக்காம திடிரென்று வந்ததுதாங்க
ஏன்? எதற்கு? எப்படி?ங்கிறது.“அதெப்படி” என்றெல்லாம்
கேட்கக்கூடாது. பிள்ளையாரு பால் குடிச்சப்போ, மாரியாத்தா
கண்ணிலிருந்து இரத்தம் வடிஞ்சப்போவெல்லாம்“அதெப்படி”
என்றா கேட்டிங்க, . எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்.
உங்களுக்கு பதில் சொல்ல தெரியலைனா, நீங்கள் என்
லிஸ்ட்ங்கோ!

“பல நாயி வாலோட திரியுது
சில நாயி வாலில்லாம அலையுது”
........................................ஏன்?

“ஊமை ஊரெகெடுக்குமாம்
பெருச்சாளி வீட்டை கெடுக்குமாம்”
.......................................எதற்கு?

“பூனைக்கு, தன் கண்களை மூடினதுமே
உலகமே இருண்டு போயிடுமாம்”
...............................................எப்படி?

நிணைவில்கொள்க.
“எப்பொருள் யார் யார் பதிவில் படித்தாலும்
அப்பொருள் உணர்ந்து பதிலிடுதல் நன்று.”

திங்கள் 11 2011

வாக்கு ஆள குடி மக்களே!



டாஸ்மாக் தோன்றா காலத்திலிருந்து குடித்துவரும் மூத்தகுடிமகனின்
தேர்தல்-போதை பிரச்சாரம. வாக்கு ஆள குடீ மக்களே! வணக்கம், என் பெயர் ஆண்டி குடித்தே ஆண்டியானவன் இல்லிஙக. என் அப்பா.ஆத்தா வச்சபேரே....ஆண்டிதாங்ககுடிகாரன் உளருரான்னு நினெக்காதீங்க. என்ன மாதிரி ஆண்டியான குடும்பத்திக்கு வருவாய்தான் பெரும்பிரச்சனை. நான் நேர்மையான குடீ மகனுங்க அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் விலைவாசி ஏறுனா?அவுங்களுக்கு பிரச்சனையில்லங்க,விலைவாசிக்கு தக்கமாதிரி சம்பளமும் கிம்பளமும் ஏறுமுங்க. முன்பெல்லாம் தெரியாம குடிச்சா போலீசுகாரங்க புடுச்சு உள்ளே போடுவாங்க. இப்போ காசுஇல்லாம குடிக்காம போனாலும் ஏன்? குடிக்காம போறேன்னு புடுச்சு உள்ளேபோடுறாங்க. கடைய திறந்து வச்சுபுட்டு குடிகுடிய கெடுக்கும். குடி உடல்நலத்தை கெடுக்கும்முன்னு போர்டு வச்சா போதுமா? குடிக்காமயாரு இருக்கா? உலகத்தலே நம்மதான அதிகமாஇருக்கோம். ஏ....மகன்கூடகுடிக்கிறான்.ஏங்......பொண்டாட்டிகூட மேல்வலிக்குன்னு குடீக்கிறா! குடீக்கிறதுலகூட ஆண்கள்தான் மொஸாரிட்டிமற்ற வருவாயவிட நம்மகுடீக்கிறதலாதான் அரசாங்கமே நடக்குது.
      ஆனா, நம்ம குடீமக்கள, எந்த அரசும்சரி,எந்த கட்சியும்சரி கண்டு
கிறவே மாட்டுறாங்க. கருணாநிதி அய்யா.....நா....ன. எம்புட்டு கொடுத்தேன்
இன்னும் மிக்ஸி, கிரைண்டர் தருவேன்னு சொல்லுறாரு. செல்வி ஜெயா
அம்மையாரும் அய்யாவவிட நெறைய தருவதாக சொல்றாங்க.இடது வலதுசெகப்பு காரங்களும்.குல்லா போட்ட வயசு பையன காட்டி விற்பனைக்குஅல்ல ன்னு சொல்லுறானுங்க.கருப்பு அண்ணனோ பாரின் சரக்கா அடிக்கிறாரு    மத்திய  அமைச்சரு ஒருவரோ. உங்களுக்கு
என்னத்த கொடுக்கல.பிள்ளதான் பொடுக்கல.இனி பிள்ளையும் கொடுக்கிறோம் என்று சொல்லுறாரு. வாக்காள குடீ மக்களே! இவுங்க கொடுக்கிறதெல்லாம்வச்சு குடீக்கமுடியுமா? குடீ மக்களே! சிந்தியுங்கள்.நேர்மையை கடை பிடியுங்கள்.  டாஸ்மாக்கில் ஆப்பு,புல்லுஎல்லாம் விலை எகிறிபோச்சு, கலப்படமும்
போலிசரக்கும்பெருகிபோச்சு.அதனாலநிம்மதியாகுடீமக்களலகுடிக்கமுடியுதா. அதக்கேட்க நாதியில்ல. நம்மல குடிக்க பழக்கிவிட்டுபுட்டு, ஓட்டுக“கு கிடைக்கிற காசையும் தடுத்துபுட்டு   சிந்தித்து, நேர்மையாக ஓட்டு
போடுங்கனு சொன்னா ஓட்டு போட்டுவோம்மா. குடிக்க கஞ்சியில்லை
யினாலும். குடீக்காம நாம இருந்திருக்போமா?  ஆகவே, வாக்கு ஆள பெருங்குடீ மக்களே. நாம ஓசியில சரக்க கேட்கல டர்ஸ்மாக் விலை யை குறைத்து குடீமக்களின் நெஞ்சிலும் வயித்திலும் போதையை ஏத்துற வரைக்கும்.நாம் இந்த போதையில்லா தேர்தலை பாய்காடபன்னுவொம்.
சிந்தித்தால் சிரிப்பு வலும்
மனம் நொந்தால் அழுக வலும்
இது நமக்கு தேவையா?------வணக்கம்

குறிப்பு;   டாஸ்மாக்கின் அருமைபெருமைகளை அறிய
வினவு.வெளியிட்ட.“பனமரத்துல வவ்வாலு, டாஸ்மாக்
இல்லேன்னா திவாலு”-பதிவை மகாஜனங்கள் படித்து
தெரிந்து கொள்லவும்.

திங்கள் 04 2011

அது என்னங்க? சொல்லிபுட்டு போங்க!



பள்ளிப்படிப்பை முடிக்காம சுற்றிதிரிந்த நேரம்.எனக்கு அறிவுரை சொல்ல என் அம்மா ஒரு பெரிசுவிடம் இழுத்து
சென்றார்கள்.அந்த பெருசு என்அம்மா அடிப்பதை தடுத்து
நிறுத்தி என்னை அவரிடம் விட்டுட்டு போகச்சொன்னார்.

பிறகு, என்னைப் பார்த்து, நான் கைகட்டி நிற்பதைப் பார்த்து
கைகளை பிரித்துவிட்டு அருகில் அழைத்துக் கொண்டார்.
  
“டேய்,ய்....எத்தனாப்புடாபடிக்கிற”..                                                        

ஒன்பதாப்புல மூனுவருஷம்”.

வாத்தியார, டீச்சரா,

டீச்சரு,

அதான் மூனு வருஷமா படிக்கிறியா,

இல்ல,அந்த டீச்சரு என்ன சும்மா அடிச்சுகிட்டே இருக்கும்

நீ,நல்லா படிச்சா அந்த டீச்சரு ஏன்னடா அடிக்க போறாங்க,
நல்லா படிச்சாதாண்டா அறிவு வளரும். தெரியுமா?

எனக்கு அறிவெல்லாம் இருக்கு.

“நிஜமா அறிவு இருக்கா”.

.தலையாட்டினேன்.

சரி,ஒ.ஒ அறிவ சொதிக்கட்டுமா? அதுக்கு முன்னடி நமக்குள்
ஒரு பந்தயம். நா.....ன் சொல்ற கதைய சொல்லிட்டினா, நீ
பள்ளிகூடம் போகவேணாம். சொல்லமுடியலைன்னா...!

“நா..பள்ளிகூடம் போறேன்

“சாபஷ், பேச்சு மாறக்கூடாது.எங்க என் கையில சத்தியம்
அடுச்சு சொல்லு”.

“சத்தியம்.-

என்னத்த சொல்லிடப் போறராரு பெருசு”””.- மப்புல இருந்தேன்

கதைய கேட்டபிறகுதான். “ஆகா..நம்மல நைசா பேசி மாட்ட
வச்சுட்டாருன்னு தெரிஞ்சது.
     
ஒரு ஊருல ஒருபுருஷனும் ஒரு பொண்டாட்டியும் இருந்
தாங்க. ஒரு நாளு வெளி வேலைக்கு போயிருந்த வேளையில.அந்த புருஷனத்தேடி ஒருவன்.வந்தான்.வந்தவன்
கடைத்தெருவிலருந்த அந்த பொண்டாட்டியிடம் அவ புருஷ
னைப்பற்றி கேட்டான். அவன் பொண்ட்டாட்டியோ இப்படி
சொன்னாள்.

“அய்யா, எம்புருஷன் சுட்டவனை,சுடப்போயிருக்காரு.

“சரி, ஓம்புருஷன் எப்ப வருவாரு? வந்தவன் கேட்டான்.

அதற்கு அவள், அய்யா.நீர் வந்தால் வரமாட்டர்.நீரு வரா விட்டால் வருவார்.

“உன் வீடு எங்க இருக்கு –என்றான்.

“என் வீடா, என்வீடு பாலுக்கும் பானைக்கும் நடுவுல­என்றாள்

-பல பதில்களைச் சொன்னேன். தப்பு என்றார். என்னை யோசிக்க அவகாசம் கொடுத்தார். சில வழிமுறையும் சொன்
னார். மறுநாள் அவரை பார்க்காமல் பள்ளிகூடம் சென்றேன
                    ----------
படிச்சிடிங்களா?...........
          
“இந்த இடுகையை படிச்சுட்டு போறவங்களே!
    
உங்க எண்ணத்த சொல்லிவிட்டுப் போங்க!
    
உங்க எண்ணத்த சொல்லிவிட்டுப் போங்க!........
    
இந்த மூன்று  கேள்விகளுக்கும் அர்த்தத்தை சொல்லிவிட்டுப் போங்க?.............

x

இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்

 "என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...