ஞாயிறு 19 2011

எனக்கு அப்பாவும் இல்லை,நான் அப்பாவும் இல்லை

நான் எப்படி தந்தையின்
நாளை கொண்டாட முடியும்

நான் பிறந்த சில நாளில்
என் தந்தை மறைந்தார்
விபரம் தெரிந்த நாள்முதல்
தந்தை முகம் காண அறியவில்லை
புகைப்படமும் எடுக்கவில்லை

தாயின் அரவனைப்பில்
கடந்து விட்டேன் அய்ம்பது
ஆண்டுகள் இன்று தந்தையின்
நாளாம் நான் எப்படி கொண்டாட
முடியும் எனக்கு தந்தையில்லை

நானும் தந்தையாகவும் இல்லை
நான் எப்படி கொண்டாடமுடியும்

அம்மாவுக்காக,கண் தெரியாத
சகோதிரிக்காக,சகோதிரியின்
மக்களுக்காக,நான் தந்தையாவதை
மறந்துவிட்டேன்

நினைத்த போது காதலும் வரவில்லை
காதலியும் கிடைக்கவில்லை மனைவியாக
அதனால் நான் தந்தையாகவும் இல்லை

நான் எப்படி தந்தையின் நாளை
கொண்டாட முடியும்

தந்தையின் நாளை நிணைவு கூற
ஒரு மார்க்கமும் இல்லை,என்னைக்
கொண்டாட நான் தந்தையாகவும் இல்லை

இதற்கு வழி சொல்லுங்கள்
தந்தையாக பாக்கியம் பெற்றவர்களே!!!!

2 கருத்துகள்:

  1. மனசார உன்னை அப்பான்னு கூப்பிடுறேன் நண்பா. அப்பா, தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு