ஞாயிறு 17 2012

வசூல்ராஜாக்களால் 13 வருடமாக கோமாவில் இருக்கும் பெண்...


குமரி மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சோமன்,
போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர். தன்னுடைய இரண்டு
பெண்களில் மூத்தப்பெண்ணான ஷோபாவை எலக்ட்ரிசியன்
வேலை பார்க்கும் ரமேஷ் என்பவர்க்கு மணமுடித்துக்கொடு
த்தார். வழக்கப்படி

ஒரு வருட்ம் கழித்து 2000ம் ஆண்டில் பிரசவத்திற்க்காக குல
சேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்
வசூல் ராஜாக்கள் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி
னார்கள்.

பரிசோதனைக்கூடம்,ஆம்புலன்ஸ்வசதி,உயிர்காக்கும் வசதி
கள் போன்றவைகள் உள்ள ஆஸ்பத்திரியின் வசூல் ராஜாக்கள்
டண்டணக்கா ஆடும்போது, எந்தவசதியுமே இல்லாத அந்த
ஆஸ்பத்திரியில் ஆப்ரேஷன் நடந்தது. போலீசில் குப்பை கொட்
டிய சோமன் ஏமாந்தார். முடிவில்....

ஆப்ரேஷன் சக்சஸ்..பெண் குழந்தை பிறந்தது.ஏட்டு சோமனின்
மகள் ஷோபாவின் நிலைமை கவலைக்கிடமானது. ஆப்ரேஷனு
க்காக கொடுத்த மயக்க மருந்தால், பிறந்த பெண் குழந்தையான
ஆதர்ஷாவுக்கு 13வயது ஆகி இதுவரையிலும் மயக்கம் தெளிய
வில்லை.

ஷோபாவை,நாகர்கோவில்,திருவனந்தபுரம்,போன்ற இடங்களில்
உள்ள புகழ்பெற்ற வசூல் ராஜாக்களின் மருத்துவமனையிலும்,
நெய்யாற்றில் உள்ள அரசாங்க மருத்துவமனையிலும் மாறி மாறி
வைத்தியம் பார்த்தும். வசூல் ராஜாக்களினால் எந்த பலனுமில்லை

ஷோபாவின் கணவர் ரமேஷ் வசூல் ராஜாக்கள் இழைத்த கொடுமை
களை எதிர்க்க முடியாமல் விதவைக்கு மறுவாழ்வு கொடுத்து ஒதுங்கி
கொண்டார்.

இதனால், மனம் வெறுத்துபோன ஏட்டுசோமன் மாரடைப்பால் போய்
சேர்ந்தார்.13 ஆணண்டுகளாக கோமாவில் இருக்கும் ஷோபாவை,தா
யும்,பாட்டியுமே நிம்மதியின்றி,தூக்கமின்றி, அவதியுடன் பராமரித்து
வருகின்றனர்.

தவறு செய்த வசூல் ராஜாக்களோ,எவ்வித மனஉறுத்தலோ,கடவுள்
தணடிப்பார் என்ற பயமின்றி,வசூல்சேவை ஆற்றி வருகிறார்கள்.தனி
யார் மயத்தை உச்சிமோந்து ஆதாரிக்கும் மெஞ்ஞானிகளோ,அடுத்த
அஜேண்டாவுக்கு பறந்து கொண்டு இருக்கிறார்கள்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...