செவ்வாய் 03 2012

சிரிக்கவும்,சிந்திக்கவும் தெரிந்தவர்கள் மனிதர்கள் ! !! !!!


உலகத்தில் இருக்கிற உயிரினங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும்
தெரிந்த ஒரே உயிரினம் மனிதன் என்ற உயிரினம் மட்டும்தான்
இந்த சிரிக்க தெரிந்த மனித உயிரினத்தில் மூன்று வகை உண்டு

ஒன்னு. புரிந்து கொண்டு சிரிப்பது. இரண்டு-சிரிப்பதைப் பாரத்து
சிரிப்பது.மூன்று-ஒப்புக்கு சிரிப்பது.மற்றதுகளான ஆணவச்சிரிப்பு
கொக்கரித்து சிரிப்பு,இம்சை செயய்து சிரிப்பு வேறுவகைப்பட்டது.

இந்த மூன்று வகைச் சிரிப்புகளில் புரிந்து அல்லது செய்கைகளை
கண்டு மனம்விட்டு சிரிக்கும் உயிரினத்துக்குத்தான் சிந்திக்கும்
திறன் அதிகரிக்கும்.

மனித மூளையானது.அதுவும் வலப்பக்கமானது மனம்விட்டு
சிரிப்பதினால் நன்றாக செயல்படுகிறது.“வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டு போகும்” என்ற பழமொழியேமனம்விட்டு சிரிப்பதி
னால் ஏற்ப்பட்டது.

இந்த சிரிப்பினால்.இரத்தத்திலே அதிகப்படியான ஆகஸிஜன்
ஏற்ப்படுகிறது.இதய தசைகள் வரிவடைகிறது. இரத்த அழத்தம்
சீராகி நுரையீரல்கள் நன்றாக இயங்கும். இரத்த ஒட்டம் அதிக
மடைந்து டென்சனும் குறைகிறது. ஒரு உடற்பயிற்சி செய்து
கிடைக்கும் பலனைவிட மனம்விட்டு சிரிப்பதினால் கிடைக்கிறது

ஒருவர்.நீண்ட நாட்களாக வயிற்றுப்புண்களால் அவதிப்பட்டு
 இருந்தவரென்றால் மனம்விட்டு சிரிக்காததினாலும் மன
இறுக்கத்தால் இருப்பதும் ஒரு காரணமாகும்.. இந்த மனம் விட்டு
சிரித்தால் வயிற்றுப்புண் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

மன இறுக்கத்தாலும்.கவலையாலும்,ஓய்வு இல்லா உழைப்பாலும்
உழைப்பே இல்லையென்றாலும் வரும் நோய்நொடிகளை தீர்க்க
மருத்துவ கொள்ளைக்காரர்களிடம் மாட்டுவதை தவிர்க்க
மனம்விட்டு சிரிப்பதே சிறந்த முறையாகும்.

சார்லி சாபளினைப் பாருங்கள். அவரைப் பார்த்தாலே சிரிப்பு
வரும் சிரிப்பினாலே சிந்தனையை ஊட்டியவர். கைம்மாறு
கருதாமல் சிரிக்க வைத்தே நோய்நொடிகளை விரட்டியடித்தவர்
 கலைவாணர் என்.எஸ.கே, ஒவ்வொருத்தருடைய சிரிப்பையும்
பலவிதமாக சொன்னவர்.

ஆகவே, நண்பர்களே! தோழர்களே! மனஇறுக்கத்தை தொலைத்து
இம்மை அரசன்-அரசிகளால் வரும் கவலைகளால் வரும் நோய்
நொடிகளை போக்கிட, எதிர்வரும துன்ப துயரங்களை எதிர்க்க
சிந்தனைத்திறனை வளர்த்துக் கொள்ள ...மனம்விட்டு சிரிக்கும்
நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்வோம். டென்சனை
தவிர்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்