சனி 14 2013

அதிகாரி வீட்டு கோழி முட்டை,ஏழை வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும்!!!

ta.wikipedia.org -

tamilvelibkp.blogspot.com
சென்னை திருவானமியூர் பகுதியில் குடியிருப்பவர் முன்னாள் கூடுதல் போலீசு தலைமை இயக்குநர்(ஏ.டி.ஜி.பி) வெங்கடேசன் என்பவர்.இவரது மனைவி ராணி முன்னால் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர். இவர்களின் மகள் பியூலா உயர் போலீசு அதிகாரி, மருமகன் சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர். ராஜேஸ்தாஸ்.- இவர்கள பங்களா வீட்டு முன் இருந்த முருங்கை  மரம் ஒன்று மழையால் ஒடிந்து கீழே விழுந்துள்ளது.

 அதே திருவானமியூலுள்ள சேரிப்பகுதியைச் சேர்ந்த செல்வம் அவரது மனைவி சக்தி. இவர்கள் இருவரும், அந்த முறுங்கை மரத்தில் இருந்த முருங்கை காயையும் கீரையையும் கொஞ்சம் பறித்தற்க்காக.........

மேற்படியான  முன்னாள் போலீசு குடும்பம் கொடுத்த புகரால்..“ பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டி தாக்கி காயப்படுத்தும் பிரிவான 385-ல் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உயர் போலீசினால் அழுத்தம் தரப்பட்டதால், இன்ஸ்பெக்டர்,2 எஸ்ஐ,10 போலீசு கொண்ட படையே  இருவர் மீது நடவடிக்கையில் இறங்கியது.

ஓட்டு கேட்டு வாங்கி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணி வெங்கடேசனோ, “நூறு கோடி திருடினாலும்,முருங்கைக்காய் திருடினாலும் திருட்டு திருட்டுதான் என்று முழங்குகிறார்..........


அதே சென்னையில்.அடகுக்கடைக்காரான நிக்ஷாசந்த் என்பவரிடமிருந்து ,திருட்டு நகைகளை வாங்கியதாக கூறி 203 கிராம் தங்கத்தை பறித்து சென்றார்  போலீசு தலைமைக்காவலர் சம்பத் என்பவர்.

 தங்கத்தை பறித்து சென்ற மயிலாப்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சம்பத் மீது அடகுகடைக்காரர் புகார் செய்தார். பாசக்கார போலீசோ சம்பத் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.

இதனால் அடகுக்கடைக்காரர் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். உயர் நீதி மன்றமோ வழக்கு பதியச்சொல்லி உத்தரவிட்டது.. அந்த உத்தரவை மதிக்கவில்லை அதனால் அடகு கடைக்காரர்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை தொடுத்தார்.

 வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றமோ, தலைமைக்காவலர் ஓய்வு பெறும் வயதை காரணம்காட்டி  அவரை மன்னித்துள்ளது.


சில முருங்கைகாயையும் முருங்கை கிரையையும் பறித்ததற்க்காக இருவருக்கு  இரண்டு வருட வழக்குப்பிரிவில்  சிறை,  203 கிராம் தங்கத்தை பறித்தவரான போலீசுக்கு மன்னிப்பு

இதுதான் சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லுகின்ற ஜனநாயகத்தின் மகிமை..

இதுமாதிரியான ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அதிகாரி வீட்டு கோழி முட்டை ஏழை வீட்டு அம்மிக்கல்லை இப்படித்தான் உடைக்கின்றது.


நன்றி! புதியஜனநாயகம் டிச.2013 இதழ்





2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...