சனி 08 2017

புரிந்து போனது.....................

!!!!!!!!!!!!!!!!!!

பழைய பாக்கியை வாங்க
நான் சென்ற வேளை
பதற்றத்துடன் எழுந்து என்னை
பார்த்து ஒரு விரலை
காட்டிய படி கட்டிய
வேட்டியை வாரி சுருட்டி
வேகமாக ஓடினார் அவர்

அப்போதே என் மர
மண்டைக்கு புரிந்து போனது
ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை
அடக்க முடியாது என்று

8 கருத்துகள்:

  1. அவர் தனது அவசரத்தை முடித்தபின்பு திரும்பி வந்து, தனது பழைய பாக்கியை உங்களுக்கு திரும்பி கொடுத்திருந்தால் ஒகே.அல்லது அவர் ஒரு தமிழக அரசியல்வாதி போன்றவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொன்னது மாதிரியே அவர் தமிழக அரசியல்வாதி போல் ஆகிவிட்டார்.

      நீக்கு
  2. அமிர்த யோக சுப வேளையில் சென்று இருக்கிறீர்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சுப வேளையில் சென்றும் பழைய பாக்கிக்கு மீண்டும் வாய்தா சொல்லி விட்டாரே....

      நீக்கு
  3. வாக்கு விழுது ,என் வாக்கு தெரிய மாட்டேங்குதே ,ஏன் தோழரே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்தல் பாதை..திருடர் பாதை என்று சொல்லாமல் சொல்கிறதோ என்னவோ.....எனக்கும் அப்படித்தான் பலமுறை முயன்றும் வட்டம் சுத்துது....சுத்திகிட்டே இருக்கிறது... நான் பெறுமைசாலின்னு பெயர் வாங்கி இருப்பாதால் நானும் பெறுமையாக இடத்தை விட்டு சென்று விடுகிறேன்...மன்னிக்கவும்..நான் ஓட்டு போடவில்லை என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்..

      நீக்கு
  4. புரிதல் - பல
    வெற்றிக்கு வழிகாட்டுமே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...