என் தமக்கையின் மகள்வழி பேத்தி என்னிடம் கேட்டார் தாத்தா மதர்டே வருகிறது. அதை முன்னிட்டு என் அம்மாவுக்கு நான் எதாவது செய்ய வேண்டும் அதற்கு நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்றார்
நான் என்ன செய்ய வேண்டும்..என்று கேட்டபோது, என்ன கேட்பது என்று தெரியாமல் விழித்தார் பிறகு நான் சொன்னேன். சினிமாவில் தொலைக்காட்சியில் வருவது மாதிரி பரிசு பொருள்கள் எதுவும் கொடுக்க வேண்டாம் அதனால் எந்த பயனுமில்லை அதெல்லாம் காசு உள்ளவர்கள் செய்யும் வெட்டி பந்தா... அன்னையர் தினத்தை கொண்டாடுவதாக இருந்தால்
உன் அன்னை சொல்லும் வேலைகளை மனம் கோணாமல் எரிந்து விழாமல் உனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நான் என் அன்னையிடம் எப்படி நடந்து கொண்டேனோ அதுபோல் நடந்து கொண்டாலே போதும்.
எனக்கு எதிரியாக இருந்த என்தாய்- தந்தைவழி உறவுக்காரர்களின் பேச்சைக் கேட்டு உன் தந்தை உன் தாய்க்கு கொடுத்தசித்தர வதைகளாலும் உன் தாயின் எதிர்த்து நின்று பட பட வென்று பேசும் குணத்தாலும் நீ பிறந்த ஒரு வருடத்தில் உன் தந்தையிடமிருந்து உன் தாய் பிரிந்துவிட்டபோதிலும் உன் தாய் என் தாயைப்போல் தந்தையின் ஸ்தானத்திலும் என்னை வளர்த்து ஆளாக்கியது போல் உன் தாயும் உன்னை வளர்த்து பத்தாவது படிக்கும் வரை வளர்த்துவிட்டார்..அதனை நன்றிக் கடனாக நிணைக்காமல் பெற்றக் கடனாக நிணைத்து உன் தாயை திட்டாதே உன் தாய் உனக்கு பிடிக்காத வேலையைச் செய்தாலும் கோபப்படாதே....பள்ளிக்கு செல்வதற்கு நேரமாகி விட்ட நேரத்தில்தலை சீவி சடை போட்டுக் கொள்வதில் நீயும் உன் தாயும் சத்தமிட்டுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள். விடுமுறை நாட்களில் உன் தலையை சீவி சிக்கெடுத்து பேன் பார்க்கும் நேரங்களில் உன் தாயுடன் முரண்பட்டு மருமகளும் பேத்தியாளு்ம் வாய்ச் சண்டை போட்டுக் கொள்வதை தீர்க்க திண்டாடும் நிலையை எனக்கு ஏற்ப்படுத்தாதே ...
உன்னைப் போல்தான் நானும் சிறு வயதில் என் தாய்அதாவது உன் பாட்டி என் தலையில் பேன் பார்த்து, சீப்பால் இழுத்துவிடுவதற்கு பல முறை முயன்று தோற்று போய் இருப்பார். அவர் இறப்பதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் தனது தள்ளாத வயதிலும் என் தலையில் பேன் பார்த்து சீப்பால் பேன் இழுத்த போது அவர் மடியிலே தூங்கி விட்டதை பார்த்திருப்பாயே....
தலையில் பேன் பார்க்கும்போது அக்கு பஞ்சர் மாதிரி ஒரு சுகம் கிடைக்கிறது என்பது எனக்கு பின் நாட்களில்தான் தெரிந்து...என் தாய் என்னை விட்டு போன பிறகு என் தலையில் பேன் பார்த்து மஜாஜ் செய்துவிட என்தாய் இல்லை. என் தாயின் அன்பு கட்டளையில்தானே நான் உன்தாயையும் உன் சித்தி மற்றும் உன் மாமன்மார்களை பெற்றெடுக்காத பிள்ளைகளாக வளர்த்து வருகிறேன்..உன்னையும் பேத்தியாக வளர்த்து வருகிறேன். என்னைப்போல் இருக்க முடியாவிட்டாலும் உன்னிடம் உள்ள சிறு சிறு குறைகளை களைந்து தாய் அன்பை மதிக்கத் தெரிந்த பெண்ணாக, இந்த அன்னையர் தினத்தில் மாறிக் கொள்..
உனக்கு எல்லா பணிவிடைகளையும் செய்ய உன் தாய் இருக்கிறார்..அந்தத் தாய் அன்பை ஊதாசினப்படுத்தாதே தெரியாமல் கோபத்தில் உன் அன்னை பேசிவிட்டாலும் அதனை மனதில் வைத்துக் கொள்ளாதே ,. இந்த அன்னையர் தினத்திலிருந்தாவது அன்னையை திட்டுவது,எதிர்த்து பேசுவது.. உன் மாமன்கள் உன் அன்னையையோ உன்னையையோ திட்டும்போது.. மாமன்களை திட்டாமல் சண்டை போடாமல் சமதானமாக பேசக் கற்றுக் கொள்,....இதுவே அன்னையர்தினத்தில் என் அன்னையை பற்றி என் நிணைவில் இருந்த சில துளிகள்தான் இவை..
நான் பேசி முடித்துவிட்டு பேத்தியின் பதிலை கேட்பதற்கு முன்“ என் அம்மா கூப்பிடுது தாத்தா என்றபடி எழுந்து ஓடிவிட்டார்”..... நான் பேசியது எனது பேத்திக்கு அறுவையாக இருந்திருக்கும் போல நான் படுக்கும் வரை என் பக்கம் வரவே இல்லை...
மனதை பிசைந்து விட்டது நண்பரே நினைவுகள்.
பதிலளிநீக்குஅன்னையர் தினவாழ்த்துகள்
அருமையான அறிவுரை.
பதிலளிநீக்கு//சினிமாவில் தொலைக்காட்சியில் வருவது மாதிரி பரிசு பொருள்கள் எதுவும் கொடுக்க வேண்டாம் அதனால் எந்த பயனுமில்லை அதெல்லாம் காசு உள்ளவர்கள் செய்யும் வெட்டி பந்தா//
முற்றிலும் உண்மை.
தங்கள் தமிழ்த் தொண்டை (நிணைவுகளை) பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குஅய்யா தங்களின் தளத்திற்கு வர வழி தெரியவில்லை.வழியைச் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்..
நீக்குஅருமை
பதிலளிநீக்குபேத்தி உணரும் காலம் வரும் :)
பதிலளிநீக்கு