ஞாயிறு 30 2017

பெரியாரிய வாதிகள் பார்ப்பானை எதிர்ப்பது ஏன்?



இந்து மதத்தை எதிர்ப்பது போல..இசுலாமிய..கிறிஸ்துவ மதத்தை பெரியாரியவாதிகள் எதிர்ப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எல்லோருக்கும் உள்ளது.. பெரியாரிய வாதிகளைப் பற்றி மேலோட்டமாக பார்த்தால்..அவை உண்மை என்றே தோன்றும்..ஆனால் அது உண்மையில்லை. அது கானல் நீரைப் போன்ற பார்வை அது.

பெரியாரிய வாதிகளின் முதல் எதிரி சாதி மற்றும் பெண்னடிமைத்தனம் தான்

இசுலாமிய-கிறிஸ்துவ மதத்தையும் கூட.அவர்கள் விமர்சிப்பது உண்டு..ஆனால், பிற்ப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்கும் கடவுள்களை பற்றி அவர்கள் விமர்சிப்பது இல்லை.. அதோடு அந்த மக்களின் 
நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டு முறையையும் விமர்சிப்பது இல்லை.

காரணம் இதுதான் அந்த மக்கள் தங்கள் வழிபடும் கடவுள்களை தொட்டு கும்பிடுவார்கள்...தங்கள் குடும்பத்தாரையும் உறவினர்களையும் கடவுளை தொட்டு வழிபடச் சொல்வார்கள்.

ஆனால், பார்ப்பனர்கள் பூசாரிகளாக இருக்கும் கோயில்களில் உள்ள கடவுளை தொட்டு வழிபட முடியாது. ஏன் ?என்றால்... பார்ப்பானை பொருத்த அளவில் தாழ்த்தப்பட்ட ,பிற்ப்படுத்தபட்ட மக்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்கள். 

கடவுள் முன் அனைவரும் சமம் என்னும் நிலையை மாற்றி அனைவரும் சமம் அல்ல... “நான் பிராமணன், நானே உயர்ந்தவன்.மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள். நீங்கள் கடவுளை தொடக்கூடாது. தொட்டால் தீட்டு ஆகும். என்று  பார்ப்பானன் சொல்வதைகேட்டு.. வெட்கம்,மானம்,சூடு சொரனை எல்லாம் துறந்து தன் சுயமரியாதை இழந்து பார்ப்பானுக்கு யாசகம் கொடுத்து கடவுளை வழிபாடு செய்வதைத்தான் பெரியாரிய வாதிகள் அதிகம் எதிர்க்கிறார்கள்


7 கருத்துகள்:

  1. ஆளுக்கொரு நீதியா ,அநியாயம் :)

    பதிலளிநீக்கு
  2. சரி தான் ஜி...

    மனிதனை மனிதனாக மதிக்காதவர்கள் யாரும் மனிதர்களே இல்லை...

    பதிலளிநீக்கு
  3. பெரியாரியவாதியான கோவை பாருக் இஸ்லாம் மதத்தை விமர்சித்ததால் படுகொலை செய்யபட்டார். பெரியாரியவாதிகளில் இப்படியான உண்மையான பகுத்தறிவாளர்களும் இருக்கிறார்கள்.இப்படியான மதிப்புக்குரிய உண்மையான பகுத்தறிவாளர்களை விடுத்து மற்ற பெரியாரியவாதிகளை பார்ப்போம்.
    பலர் தங்களது பாதுகாப்பிற்காக இஸ்லாம் மதத்தை விமர்சிப்பதில்லை. வெளியியே இருந்தும் ஏகே 56 ரக இயந்திர துப்பாக்கியுடன் isis காரர்கள்,இஸ்லாமிய அமைப்புக்கள் வேறு வந்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். இவர்களுடைய பகுத்தறிவு என்பதெல்லாம் கோக்க கோலா உடல் நலத்திற்கு தீமையானது, ஆனால் காளி மார்க் சோடா குடித்தால் உடல் நலம் பெறும் என்பது போன்றவை. இந்து மதத்தை மட்டும் தாக்கினால் அது தான் அவர்களின் மதசார்பின்மை. பார்ப்பான் ஜாதி என்று மனிதர்களிடையே ஜாதி வெறுப்பு கொள்ளும் சிந்தனை கொண்ட இவர்கள் ஜாதி வெறுப்பை வளர்த்து ஜாதி அமைப்பு முறையை மேலும் பாதுகாக்கிறார்கள்.
    பெரியார்தாசன், மதிமாறன் போன்றவர்கள் நிலை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    பதிலளிநீக்கு
  4. மூலஸ்தானத்தில் அவன் சிலையை மட்டுமா தாெடுகிறான்....?

    பதிலளிநீக்கு
  5. மூலஸ்தானத்தில் அவன் சிலையை மட்டுமா தாெடுகிறான் ....?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...