இது ஒரு
வண்ண ஓவியம்
இது என்ன
செய்துவிடும் மனிதர்களுக்கு
ஏழைகளின் துயரத்தை
போக்கி விடுமா..?
இழி பிறவிகளின்
இழிவுகளைத்தான் துடைத்திடுமா..
இந்த ஓவியத்தை
வீட்டுச் சுவற்றில்
மாட்டி தெய்வமென
வழிபடும் கூட்டத்தின்
இல்லாமையைத்தான் நீக்கிடுமா..???
அநியாயம் செய்யும்
துப்பு கெட்ட
ஆட்சியாளர்களையும்
அதன் படைகளையும்
ஆட்சியாளர்களையும்
அதன் படைகளையும்
தண்டித்து விடுமா..???
ஒரு உயிர்
என்றால் தின்பதும்
கழிப்பதும“ உழைப்பதும்
இயற்கையில் நடப்பது
நியதி அந்த
ஒவியத்தில் உள்ள
ஒவியத்தில் உள்ள
கடவுளார்களுக்கு இயற்கை
நியதிதான் உண்டா...??
நியதிதான் உண்டா...??
கடவுள் பக்தன்
படைத்துள்ள படையலைத்தான்
உண்ண முடியுமா..?????
பக்தனுக்கு எதுவும்
செய்ய வேண்டாம்
அவன் வீட்டில்
அவன் வீட்டில்
வீசும் காற்றில்
பட படக்காமல்
இருக்கத்தான் முடியுமா...?????
கடவுள் என்று
வண்ணங்களால் படைத்து
விட்டான் ஒருவன்
அவனுக்கு இந்தக்
கடவுள் என்ன
செய்திட முடியும்..??
இதனை கடவுள்
என்று நம்புகிற
முட்டாள் மனிதர்கள்
சமூகத்தில் இருக்கும்
வரை மனிதர்களிடையே
சமத்துவத்தை படைக்க
முடியாது ஆகையால்
கடவுள் என்று
பொய்யுரைக்கும் அந்தப்
படத்தை தூக்கி
எறியுங்கள் தூரமாய்.........
நீங்களே பயபக்தியோடு அந்த படத்தை வச்சு இருக்கீங்களே நண்பரே...
பதிலளிநீக்குஎன்ன கிரீம் வாங்கி பூசினால் இம்புட்டு சிகப்பு வரும்னு தெரியலே !கருப்பு சாமி காணாமே :)
பதிலளிநீக்குஒன்றே ஒன்று...
பதிலளிநீக்குகோபம் சரி ஆனால் செயல் ஏற்க இயலா
பதிலளிநீக்குஇந்து மத கடவுளை பற்றி இந்த பதிவு போலவே, மேற்கு வங்கத்திலும் ஒரு உண்மையான பகுத்தறிவாளர் ஒருவர் இஸ்லாம் மதத்தை பற்றிய பதிவு ஒன்றை எழுதிவிட்டார். அவ்வளவு தான், பயங்கரமான கலவரம் செய்தார்கள் இஸ்லாமியர்கள், வீடுகளை எரித்தனர். மேடம் மம்தா மத்திய அரசிடமே உதவி கேட்கும் நிலைக்கு சென்றார். வலிப்போக்கர் இந்துக்கள் சீர்திருத்தம் அடைந்தவர்கள்,ஜனநாயக தன்மை கொண்டவர்கள்,சகிப்பு தன்மை கொண்டவர்கள் என்பதை எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.
பதிலளிநீக்கு