சனி, செப்டம்பர் 30, 2017

அறிவியலை அவமானப்படுத்தும் இஸ்ரோ மடச்சாம்பிராணிகள்..

பெரியாரின் ”கடவுள் மறுப்புக்” கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா ? 

அதற்கு மிக எளிதான வழி ஒன்று இருக்கிறது. 

உங்கள் குழந்தையிடம் பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம் பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள். 

சமயம் கிடைக்கும் போதெல்லாம் அது பற்றிய அறிவியல் தகவலை சொல்லிக் கொண்டே இருங்கள். 

ரொம்ப அறிவியலாக உள்ளே போய் கூட சொல்ல வேண்டாம். மேலோட்டமாக கொஞ்சம் யோசிக்க வைத்தாலே போதும். 

“இதப் பாரு. நீ ரெண்டு பேரும் இந்த இடத்துல இப்படி இருக்கோம் சரியா? 

எப்படி இங்க இப்படி இருக்கோம்னு பாரு. 500 கோடி வருசத்துக்கு முன்னாடி சூரியன்ல இருந்து ஒரு துண்டு பிஞ்சி விழுந்து சுத்தி சுத்தி சூரியன விட்டு தள்ளிப் போச்சு. 

அது குளுந்தாச்சி. கட்டியாச்சி. அதுதான் நம்ம பூமி. 

அப்புறம் பூமியோட தோற்றம் 450 கோடி வருசம் முன்னாடி தொடங்குது. 

So பூமி தோன்றும் போது அங்க எல்லாமே Non living things தான். கல்லு மண்ணு உலோகம் தண்ணி இப்படித்தான் இருந்திச்சி. இந்த Non living things ல இருந்து Living things எப்படி வந்திச்சி. 

யோசிச்சி பாரு இப்ப நீ உயிருள்ளதுக்கும் உயிர் இல்லாததுக்கும் எவ்ளோ வித்தியாசம் பாக்குற. உயிர் உள்ளது வளருது சாப்பிடுது  ஆனா உயிர் இல்லாதது வளராது சாப்பிடாது அசையாது. 

இந்த உயிர் இல்லாததுல இருந்து உயிர் உள்ளது வந்தது முக்கியமான Turning point ஆகும். 

அப்போ மக்கள் கிட்ட இது எப்படி நடந்தின்னு குழப்பம் இருக்கு. இதுக்கு ஒரு தீர்வ Urey miller சோதனை சொல்லுது. 

அதன்படி 300 கோடி வருசம் முன்னாடி இருக்கிற பூமியோட தன்மையை அதாவது மின்னல் எல்லாம் அதிக பலத்தோட இருக்கும், அந்த செட் அப் எல்லாம் செய்து சின்னதா ஒரு மாடல் சோதனை சாலைல உருவாக்கினாங்க. 

அதுல சில அமினோ ஆசிட்கள் கிடைச்சதாம். அமினோ ஆசிட் ஒரு உயிர் பொருளுக்கான அடிப்படை. அமினோ ஆசிட் வெச்சிதான் உயிர் செல் உருவாகும். 

அப்போ முதல்ல மின்னல் வெட்றதால நிறைய அமினோ ஆசிட் உருவாகுது, அதுல இருந்து ஒரு செல் உருவாகுது. அந்த ஒரு செல் பல கோடி வருசம் கழிச்சி அதுவே அதை உற்பத்தி பண்ணுது. 

அப்படி பல செல் உயிர்கள். பல வடிவமான உயிர்கள் வளருது. 

அப்புறம் டைனோசர் அட்டகாசம் பண்ணுது. அப்ப நாம பாலூட்டிகள் எல்லம் ஜுஜூப்பி. பிறகு விண்கல் மோதுனதால டைனோசர் அழியுது. அதுக்கப்புறம்தான் நாம Mammals பூமிய டாமினேட் செய்றோம். 

அதுல மனுசனுக்கு கொஞ்சம் அறிவு அதிகமா இருக்கு. 

ஆனா அவனுக்கு இயற்கை கொடுக்கிற பயம் அதிகம் இருக்கு, திடீருன்னு வெள்ளம் வருது, சுனாமி வருது, சூரியன் சாயங்காலம் மறைஞ்சிருது, எரிமலை வெடிக்குது. உடனே இதையெல்லாம் வணங்குறான். தயவு செய்து எங்கள எதுவும் செய்திராதீங்கன்னு கெஞ்சுறான். 

அடுத்து சில மனுசங்கள பாம்பு கொத்தி வெச்சிட்டு போயிருந்து. பாம்ப எப்படி டீல் பண்றதுன்னு அவனுக்கு தெரியல. உடனே பாம்பை ஒரு தெய்வமா வணங்குறான். 

இப்படித்தான் முதல் முதல்ல சாமி வர்றார். 

அப்போ நல்லா கவனி பூமி உருவாக தொடங்கி 500 கோடி வருசம் ஆகுதுன்னா அதுல கடவுள் எப்போ வர்றார். இப்போ 5000 வருசமாத்தான் வர்றார். 

இப்போ நீ ஒரு சினிமா பாக்குற சரியா. அதுல லாஸ்ட் சீன்லதான் கடவுள் வர்றார். அது மாதிரி அர்த்தம். 

இப்போ மனுசனுக்கு இன்னும் அறிவு ஜாஸ்தி ஆகுது. அவன் இயற்கைல இருந்து அவன ஒரளவுக்கு காப்பாத்திக்கிறான். இயற்கையை கடவுளா கும்பிடுற பழக்கம் கொஞ்சம் குறையுது. அதே சமயம் மனுசன் குரூப் குரூப்பா வாழ்றான். 

அப்போ ஒவ்வொரு குரூப்லையும் உள்ளுக்குள்ள சண்ட வருது. அந்த சண்டய எல்லாம் தீத்து வைக்கிறது அந்த குரூப்ல உள்ள வயசானாவங்கள தலைவனா வைக்கிறான். 

அது அப்படி கொஞ்சம் கொஞ்சமா வளந்து ஒரு குரூப்புக்கு தலைவன் கட்டாயம் வேணும்கிற கான்செப்ட் வருது. 

இப்போ என்னவாகுது தலைவனுக்கு கர்வம் வருது. 

தான் சொல்றத மத்தவங்க கேக்குறது அவனுக்கு பிடிச்சிருக்கு. உடனே என்ன செய்றான் நான் தான் கடவுள் அப்படின்னு சொல்றான். 

தலைவனுக்கு ஜால்ரா போடுறவங்க எல்லாம் ஆமா நீதான் கடவுள்ன்னு சொல்றாங்க. இப்ப இயற்கைல இருந்து கடவுள் மனுசன் வடிவமாகிப் போறாரு. 

முதல்ல செத்துப் போன தலைவர்கள சாமியா கும்பிட ஆரம்பிக்கிறாங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா மனுசன் சாமியை வெச்சி மத்தவங்கள அடக்க ஆரம்பிக்கிறான். 

நீ இப்ப கிளாஸ் லீடரா இருக்க. நீ எப்படி கிளாஸ்ல கண்டிரோல் பண்ணுவ. “நீ பேசினா மிஸ் திட்டுவாங்க “ அப்படித்தான மிரட்டுவ. 

அப்படித்தான் அந்த காலத்துல மன்னர்கள் மக்கள மிரட்டுனாங்க. “நீ இப்படி செய்தா அது சாமிக்கு பிடிக்காது. நாந்தான் சாமி வழி வந்தவன்” இப்படி சொன்னாங்க. 

இதுக்கப்புறம் அந்த மன்னனும் மன்னனுக்கு ஜால்ரா போடுற குரூப்பும் என்ன செய்யுது ”சாமி புக் “ ஒண்ண எழுதி வைக்குது. 

மனுசங்க எல்லாம் இந்த ”சாமிபுக்” சொல்ற்படிதான் கேக்கனும் அப்படின்னு திரும்ப திரும்ப சொல்லி மக்கள ஏமாத்துறாங்க. அந்த “சாமிபுக்ல” இருக்கிறது எல்லாமே பொய். அடுத்தவங்கள எப்படி அடக்கலாம். 

ஒடுக்கலாம்னுதன் அதுல இருக்கும். இப்படித்தான் கடவுள் நம்ம கூட வர்றார். சரியா இப்படி ஒரு கடவுள நம்ம மேல திணிக்கிறாங்க. 

சரி இப்படி திணிக்கிற கடவுள் எப்படி வேகமா ஹிட் ஆகுறாருன்னு பாரு. அதுதான் நீ கவனமா புரிஞ்சிக்கனும். 

இப்ப ஒரு குரங்கு இருக்கு. அதுக்கு ரொம்ப பசிக்குது. அப்போ அதோட மூளைக்கு சாப்பிட எதாவது கிடைக்காதான்னு இருக்கும். அதுக்கு மேல அதுக்கு எதுவும் தோணாது.

ஆனா மனுசன எடுத்துக்க அவனுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கலன்னு வெச்சிக்க “சாப்பிட எதுவும் கிடைக்காதாங்கிற” அந்த தவிப்பு ஃபீல் இருக்கில்ல, அத கடவுளா மாத்திப்பான். 

கடவுளே எனக்கு சாப்பிட எதாவது கொடு அப்படின்னு சொல்லிப்பான். அவனுக்கு அதச் சொல்லிக் கொடுத்தது அவனோட அம்மா அப்பா. அவன் கடவுளேன்னு சொல்லிகிட்டே போகும் போது சாப்பிட எதாவது கிடைச்சா உடனே கடவுள்தான் அதக் கொடுத்தாருன்னு நினைச்சிக்கிறான். 

அப்போ மனுசனோட சொந்த Emotions இருக்கு பாரு.  

அதுக்கெல்லாம் கடவுள் வடிவம் கொடுக்கிறான். நீ ஹோம்வொர்க் செய்யாம போவ உடனே நீ வேண்டுவ “கடவுளே இன்னைக்கு மிஸ் ஸ்கூலுக்கு வரக் கூடாது”. 
கிரிக்கட் பாக்குறோம் “கடவுளே இந்தியா ஜெயிக்கனும்”
 
நல்லா கவனிச்சா இது எல்லாம் மனுஷனோட ஆசைகள்.

இந்த ஆசைகளப் போய் கடவுள் கடவுள்ன்னு சொல்லிட்டு இருப்போம். 

தினமும் நமக்கு எதாவது விசயம் நடக்கனும்னு இருக்கும் அப்படித்தான. அப்போ ஆடோமெட்டிக்காக கடவுளா வேண்ட ஆரம்பிச்சிருவோம். 

இப்படித்தான் கடவுள் ஹிட் ஆகுறாரு. இப்படித்தான் ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் கடவுள் தந்திரமா உள்ளே வந்திருவாரு. 

So இப்படி தனி தனியா ஒவ்வொருத்தருக்குள்ள இருக்கிற கடவுள, அந்த “சாமி புக்” கோஷ்டி இருக்கு பாரு. 

அவனுங்க ஈஸியா இழுத்திருவானுங்க. உன் மனுசல இருக்கிற கடவுள்தான் இந்த சாமிபுக்ல இருக்கு . 

இந்த கடவுளுக்கு இதப் பண்ணினா உனக்கு நல்லது செய்வாரு. 

நீ இதச் செய் அப்படின்னு சொல்லும். 

So கடவுள சரியா புரிஞ்சிகிட்டா ஹட்டோரி மாதிரி, டோரேமான் மாதிரி, ஸ்பைடர் மேன் மாதிரி அவரும் ஒரு சுவாரஸ்மான கேரக்டரா தெரியும். அவர் மேல பயமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. ஏன்னா அப்படி ஒருத்தர்தான் கிடையாதே. Nature தான் உண்மை அப்படித்தானே. ”

இப்படி அறிவியலைச் சொன்னாலே கடவுள் மூடநம்பிக்கையில் இருந்து குழந்தைகளை மீட்கலாம். 

சும்மா கடவுள் கிடையாது. கும்பிடாதே என்றெல்லாம் சொல்வதினால் எப்பலனும் இல்லை. அறிவியலைச் சொல்லி அதைச் செய்ய வேண்டும். 

சமீபத்தில் ஒரு பேட்டரி பல்ப் வேலை செய்யும் வீடியோவை மகள் பேசுவதாக நான் எடுப்பதாக தயாரானேன். 

அதை எடுக்கும் முன் மனைவி மகளுக்கு விபூதி பூசி விட்டு சென்றார் 

நான் ரெடி ஸ்டார்ட் என்று எடுக்கப் போகும் முன் மகள் தடுத்தாள். என்ன என்றேன்.

“அப்பா சொல்லப் போறது சயின்ஸ். விபூதி நல்லா இருக்குமா. நான் அழிச்சிரவா” என்று விபூதியை எடுத்து விட்டு அறிவியல் பேசலாலானாள். 

அச்செயல் கண்டு பூரித்துப் போனேன். 

இஸ்ரோவில் இருந்து கொண்டு எத்தனையோ மடச்சாரம்பிராணி இந்திய விஞ்ஞானிகள் நெற்றியில் பட்டை நாமத்தோடு அறிவியலை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

கேட்டால் ”மதம் ஆன்மாவை செழுமைப்படுத்தும் அறிவியல்” என்று உளறி வைப்பான்கள். 

இவளோ விபூதியோடு அறிவியல் பேசுவதை தவறு என்கிறாள். 

ஏதோ ஒன்றை சரியாக சொல்லிக் கொடுத்திருக்கிறேன்தான் போல என்று மகிழ்ந்து கொண்டேன். 

உங்கள் குழந்தைகளை பெரியார் சொன்ன பகுத்தறிவு வழியில் கொண்டு போவதைப் போல நீங்கள் அவர்களுக்கு  செய்யும் நன்மை எதுவுமில்லை. 
.
 நன்றி!    whasapp seithikalil eduthathu

10 கருத்துகள்:

 1. நண்பரே, மாண்புமிகு அப்துல் கலாம் ஐயா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 2. //பெரியாரின் ”கடவுள் மறுப்புக்” கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா ? //
  கடவுள் மறுப்பு கருத்துக்களை குழைந்தகளுக்கு தாரளமாக சொல்லி கொடுக்கலாம். ஆனால் பெரியாரின் ஜாதி வெறுப்பு கருத்துக்கள் குழந்தைகளுக்கு அவசியம் தணிக்கை செய்யபட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் நண்பரே, நலமா ?

  அருமையான யோசனை... ஆனால் அறிவியல் பூர்வமாய் மனிதநேயம் கற்பிப்பதைவிட ஜாதி மத பாகுபாடுகளை கற்றுகொடுப்பதற்க்கு " விஞ்ஞான பூர்வமான " வழிமுறைகளை தேடுபவர்கள் அல்லவா நம்மவர்கள் ?...

  எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
  https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.


  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. RAAKULJIயின் வால்கா முதல் கங்கை வரை புத்தகம் படிப்பது போல் இருக்குது :)

  பதிலளிநீக்கு