*அனுப்புநர்*
*குசும்புகாரன்*
*தருமபுரி மாவட்டம்*
*தமிழ்நாடு*
*பெறுநர்*
*மாண்புமிகு மோடி அவர்களுக்கு,
இந்தியப் பிரதமர்
புதுதில்லி.
நாள் - 21.6.2017
ஐயா வணக்கம்,
*பொருள் -* தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000 பணத்தை உடனடியாக
எனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்:-
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் பிரதமராகப் போட்டியிட்டுப் பெருமைக்குரிய வெற்றியை ஈட்டினீர்கள்..மூன்று முறை சென்னையில் அப்போது பரப்புரை செய்தீர்கள்.
அந்த மூன்று கூட்டத்திலும் , "நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடிக் கறுப்புப் பணத்தை மீட்பேன் !*
மீட்டவுடன் *ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கில் ரூபாய் பதினைந்து லட்சம் செலுத்துவேன்* என்றீர்கள் !அதையும் *நூறே நாளில் தருவதாக*ப் பொது மேடையில் வாக்குறுதி அளித்தீர்கள் !
உங்களைத் தொடர்ந்து பேசியவர்களும் அதை ஆமோதித்தார்கள் ! இந்தியா முழுவதும் இதைச்சொல்லியே பரப்புரை செய்தீர்கள் ! பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி செய்கிறீர்கள் !
நீங்கள் *வாக்குத்தவறாத பிரம்மச்சாரி* என்று எங்கள் ஊர் எச்.ராஜா அவர்களும் பலமுறை கூறியுள்ளார். ஐயா ,
நீங்கள் பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கிய அடுத்த நொடி ,உங்கள் வாக்குறுதியை நம்பி *பதினைந்து இலட்சம் கடனாகப் பெற்றுவிட்டேன் !*
வட்டி கொடுத்து என்னால் சமாளிக்க முடியவில்லை. நூறுநாளில் தருவதாக,தங்கள் வாக்குறுதியை நம்பிக் கடன் வாங்கி விட்டேன்.
100 நாள் இப்போது 1000நாளாகி விட்டது !
ஐயா நீங்கள் மானஸ்தன் !
பலமுறை உங்களைத் தொடர்பு கொண்டேன். நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள் !
*நீங்கள் கறுப்புப் பண மீட்பில் இருந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் !*
எனக்குக் கடன் தந்தவர்களும் அதை நம்பினார்கள் !
ஆனால்,ஐயா
கடந்த சில மாதங்களாகக் கறுப்புப் பண விவகாரம் குறித்துப் பேச மறுக்கிறீர்கள். உங்கள்
*மன் கீ பாத்திலும் பதினைந்து லட்சம் பற்றிப் பேச மறுக்கிறீர்கள்!* உங்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் , எனக்குப் பணம் கொடுத்தவர்களைச் சமாளிக்க இயலவில்லை . அதில் பல வங்கிகளும் அடக்கம். உங்கள் *அருண்ஜெட்லி , வாராக் கடன் வசூல்களை வேறு தீவிரப்படுத்தி உள்ளார் !*
ஜி.....விஜயமல்லய்யாவைப் போல் நான் ஓடி ஒளிபவன் அல்ல !
என் நேர்மையை வங்கிகள் சந்தேகிப்பதில் எனக்குக் கவலை இல்லை !
அதன் மூலம் உங்கள் *நேர்மையையும் அவர்கள் சந்தேகிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை !*
எங்கள் வீட்டில் மொத்தம் 4 பேர். நாங்கள் அனைவரும் உங்களுக்கே வாக்களித்தோம்.
மொத்தம் *நீங்கள் எமக்குத் தரவேண்டிய தொகை 60 லட்சம் !* வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கே வாக்களிப்போம். இது உறுதி ! உடனடியாகக் கீழ்க்காணும்
எனது *வங்கிக் கணக்கில் ரூபாய் அறுபது லட்சத்தை சேர்க்கவும் !*
இது அவசர வேண்டுகோள் ஐயா ! *நல்லவேளை நான் விவசாயி இல்லை..*
இந்நேரம் கடனுக்காக என் *கை காலை முறித்திருப்பான் வங்கி அடியாள் !* ஜி
ஐயா..
ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியர்களும் பணத்தைக் கேட்டால் என்ன செய்வீர்கள் ?
தயவுசெய்து *உடனே பணத்தைப் பட்டுவாடா செய்யுங்கள் !*
வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நீங்கள் சென்னை வரும்போது *நமக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இருக்கக்கூடாது !*
ஜெய்ஹிந்த்..
ஸ்வச் பாரத்...
ஆப் கி மோடி சர்கார்
நமஸ்கார்...
*இணைப்பு -*
தலைக்குப் பதினைந்து இலட்சத்தை 100 நாளில் தாங்கள் தருவதாக உறுதி அளிக்கும் காணொலி.
*குறிப்பு -*
ஜி ...
இதுகுறித்துப் பலமுறை உங்கள் முகநூல் இன்பாக்சில் தகவல் அனுப்பியுள்ளேன்.
*முக்கியக் குறிப்பு -*
ஐயா இக்கடிதத்தைப் பகிரும் *என் நண்பர்கள் வங்கிக் கணக்கிலும்* 15,00,000 செலுத்தவும் .
நன்றி. !
forgot to provide your account number in the mail.chances are lean.....
பதிலளிநீக்குநியாயம் தானே! த ம 2
பதிலளிநீக்குவித் ராஜின்னு என் பெயரையும் சேர்த்துக்கோங்க சகோ
பதிலளிநீக்கு