பக்கங்கள்

Friday, October 05, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-100


என் இனிய தமிழ் வலைப் பூ பதிவர்களுக்கு..


Image result for இரு கை கூப்பி

 என் வீட்டு தெருவில் வசிக்கும் மாமனிதர்கள்  மட்டும்தான் தொடர்ந்து இம்சைகள் கொடு்க்கிறார்கள் என்றால் இயற்கையும் அதன் பங்குக்கு இம்சை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே. தென்மேற்கு பருவ மழையினால் ஆற்றில் உடைப்பு எடுப்பது மாதிரி இந்தக் கண்மாய் உடைப்பு எடுத்து ஓடாது.. இத்தனைக்கும் தண்ணீர் தேங்கி நிற்பது எனது இடமாக இருந்தாலும். அதை மேடாக்கவோ, தேங்கிய தண்ணீரை வேறுபக்கம் திருப்பி விடலாம் என்று நான் நிணைத்தால் தெரு ஆண் நாட்டாமை  பூசாரிக்கும் அவனின்  வைப்பு, செட்டப்பு, சின்னவீடு, திண்டது பேண்டது எல்லாம் இறக்கை  முளைத்த மறுகணம் என்னுடன் மல்லு கட்ட வந்துவிடும்.

எப்ப திண்ண காலியாகும்.. என்ற கதையாக நான் எப்ப  சாவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையுதுகள் அந்தக் கூட்டம். அந்தக் கூட்டம் தரும் இம்சைகள் பத்தாது என்று மாநகராட்சிக் காரன்  அவன் பங்குக்கு தெரு பாதையில்  பாதாள சாக்கடை தொட்டி கட்டாமல் பூசாரிக்கு சாதகமாக எனது இடத்தில்தான் தொட்டி கட்டுவேன் என்கிறான். இப்படி இந்த மாமனிதர்களின் இம்சையைத் தொடர்ந்து  வெப்பசலனம், மேல் அடுக்கு சுழலற்சி, வடகிழக்கு. ரெட் அலார்ட்  என இன்னும் என்னென்ன நிற அலார்ட்  எல்லாம் சேர்ந்து என்னை ஒருவழி பன்னாமல் விடப்போவதில்லை என்று தெரிகிறது..

நானும் , மீண்டும் தொடரும் இம்சைகளை எதிர் கொள்வது போலவே  மீண்டும் தொடரும் இயற்கையின்  இம்சைகளை  எதிர் கொள்ள தயாராகவே இருக்கிறேன்.

“ ஆனா...இந்த மடம்.., ஆகாட்டி அந்த மடம்”   

இந்த..இத்தகைய இம்சைகள்  வழி வழியாக தொடர்ந்து கொண்டே இருப்பதால்..  ..இத்துடன்  

“ சமூகத்தில் மீண்டும் தொடரும்  இம்சைகள்” தலைப்பு 100வது பதிவுடன் முற்றுப்  பெறுகிறது..

7 comments :

 1. இம்சைகளும் 100-ஐ தொட்டு விட்டதே...

  ReplyDelete
  Replies
  1. இம்சைகள் 100 மட்டுல்ல.அது எண்ணிக்கையில் அடங்காது நண்பரே...

   Delete
 2. Replies
  1. வாழ்வே போராட்டம்தான். ஆனால் சக மனிதர்கள்,தரும் இம்சைகள் இருக்கிறதே! சொல்லி மாளாது எழுதி மாளாது..அதனால்தான் இந்த இம்சைகளை நூறோடு நிறுத்திவிட்டேன் நண்பரே...

   Delete
 3. மீண்டும் தொடரும் இம்சைகள்-100 பதிவை கிளிக் செய்தவுடன்
  என் இனிய தமிழ் வலைப் பூ பதிவர்களுக்கு
  என்று கைகூப்பிய அதே படத்தை பார்த்தவுடன் இயேசுவிடம் சரணடைந்து விடு மகனே என்று எனக்கு வரும் ஈமெயில் மாதிரி என்று முதலில் நினைத்து வலிப்போக்கரிடமும் இருந்தா அப்படி என்று பயந்திட்டேன்.
  இப்போது மகிழ்ச்சி:)

  ReplyDelete
  Replies
  1. நான் இறந்த பிறகு எனக்கு எந்தவித மதச் சடங்ககையும் செய்து விடக்கூடாது என்பதற்க்காகத்தான் அதற்கு முன்னோட்டமாக என் தாயார் இறந்தபிறகு எவ்வித மதச்சடங்கு. மூடச்சடங்கு. குடும்பச் சடங்கு எதுவும் இல்லாமல் அடக்கம் செய்துள்ளேன். என் தாயாரை எப்படி அடக்கம் செய்தேனோ..அது போல் என்னையும் அடக்கம் செய்யவேண்டும் என்று கண்டிப்பாக என் மருமகன் ,மருமகளிடம் வலியுறுத்தியுள்ளேன். அவர்கள் மீறினால் என் நண்பர்கள், தோழர்களிடம் அவர்களை தடுத்து என் விருப்பப்படி அடக்கம் செய்யவும் தெரிவித்துள்ளேன் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை எந்தக் கடவுளிமும் வேண்டியதுமில்லை. வணங்கியதும். குடும்ப பாரம் சுமையாக இருந்த போதிலும். இயேசுவிடமும். அல்லாவிடமும்சரி, எண்ணிக்கையில் அடங்காத ஹிந்து கடவுள்களிடம் சரி. இளைப்பார சென்றதில்லை.. நண்பரே..

   Delete
  2. நீங்க செய்தவைகள் மற்றவர்களுக்கெல்லாம் முன்மாதியானவை. மிகவும் மகிழ்ச்சி.

   Delete

.........