திங்கள் 19 2018

நினைவலைகள்-22.

உலகம்... உருண்டை............


உலகம் உருண்டை க்கான பட முடிவு


உலகம் உருண்டை என்று பள்ளியில் படிக்கும்போது அறிவியல் வாத்தியார் . ஒரு படத்தை காட்டி சொன்னபோது..உலகம் இப்படித்தான் இருக்கும் என்று அப்போது தெரிந்து கொண்டது... பின்  அந்த அவ்ளோ உலக உருண்டையானது. இணையத்தால்   ஒரு கிராமமாக ஆனது என்று சொன்னார்கள்..வல்லுநார்கள்

அப்பேர்ப்பட்ட உலகம்  கிராமமாக  மாறின ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண்களை காலை எட்டு மணிமுதல்  மாலை ஆறு மணிவரை நைட்டி என்ற உடை உடுத்தக் கூடாது என்று தடை  விதிக்கப்பட்டது. அந்தத் தடையை அமுல் படுத்தும் விதமாக  மாலை ஆறு மணி முதல் காலை எட்டு மணி வரை பெண்கள் நைட்டி அணிந்து கொள்ளலாம் என்று விதி முறை சற்று தளர்த்தப்பட்டது. ஆனால் தளர்த்தப்பட்ட விதியிலும் ஒரு விதி அமுல்படுத்தப்பட்டது.

அதாவது மாலை ஆறுமணி முதல் காலை எட்டு மணிவரை நைட்டி  அணிந்திருக்கும் பெண்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அப்படி மீறி வந்தால் இரண்டாயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்படும்..சட்டத்தை மதிக்கமால் தடை செய்யப்பட்ட நேரத்திலும் நைட்டி அணிந்தாலும் ரூபாய் இரண்டாயிரம் அபதாரம் விதிக்கப்படும்.

விதிமீறி நைட்டியுடன் வெளியே வரும் பெண்களைப் பற்றி தகவல் கொடுத்தால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும். 

இப்படிபட்ட சட்ட விதிமுறைகளை விதித்தது யாரென்று  பார்த்தால்  உலக உருண்டைக்குள் உள்ள அந்தக் கிராமத்தின் மகளிர் சுய உதவிக் குழு என்று தெரிந்தது.

 இதே உலக உருண்டைக்குள் இருக்கும்  அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடையில்லை என்ற ஒரு தீர்ப்பை மதித்து செல்லும் பெண்களை..அங்குள்ள காட்டுமிராண்டிகள் வழிவிட மறித்து  நிற்கிறார்கள்...

எப்படி எப்படியெல்லாம்  ஒரு கூட்டம் அடக்குது ஒடுக்குது..

குழந்தைகளின் உற்பத்தி பீடமான பெண்கள் காட்சிப் பொருளாகவும், கட்டிலறைப் போகப் பொருளாகவும்.. சமையல்காரிகளாகவும் இருக்குவரை இப்படியான அடக்குமுறையும் ஒடுக்குமுறையும்  உலக உருண்டைக்குள் வந்து கொண்டே இருக்கும்.....


6 கருத்துகள்:

  1. உலகம் உருண்டை என்பதுபோல் சட்டங்களும் உருண்டுதான் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உருண்டை ரெம்பவும் அதிகமாக உருண்டு வருது நண்பரே.......

      நீக்கு
  2. கண்ணிருந்தும் குருடனாய்... காதிருந்தும் செவிடனாய்... வாயிருந்தும் ஊமையாய் வாழத் தெரிந்தால் மட்டும் இந்த உருண்டையில் உருண்டையாக உருண்டு உருண்டு பெருமையாக வாழலாம். நாளை ஒரு சிறுகதையை வெளியிடுகிறேன். வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக படித்து கருத்துரையை பகிர்ந்து கொள்கிறேன் நண்பரே............

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...