சனி 17 2018

நினைவலைகள்-21.

ஏன்? தமிழ் மீது கோபப்பட்டார்  பெரியார்...




தமிழ்மொழியை சாடிய பெரியார் க்கான பட முடிவு








பார்ப்பனிய சமஸ்கிருத  ஆதிக்கத்தின்  கீழ் தமிழ்மொழி அடிபணிந்து தாழ்ந்து கிடந்த நிலையில்  சமஸ்கிருத பண்டிதர்கள் தமிழை நீச பாசை என்று திட்டினார்கள்.இதைக் கேட்டுக் கொண்டு  இருந்ததோடு இல்லாமல்.. கோயில் கருவரைக்குள் சமஸ்கிருதம் இருக்க... வாசல் ஓரத்தில்  “ இங்கே செருப்புகளை விடவும்” என்ற கேவலமான நிலையில்  புலவன் என்றும்  வித்து துவான் என்றும் பெயர் சூட்டிக் கொண்ட தமிழ் அறிஞர்கள்  சும்மா இருந்த காரணத்ததால்தான் ் தமிழ் மொழி சாதி காக்கும் மொழி, காட்டுமிராண்டிகளின் மொழி  என்று சாடினார் பெரியார்---

  சில விழுதுகள்.. பெரியார் அன்று சொன்னதை..இன்று அதைப்பிடித்துக் கொண்டு  தொங்கோ தொங்கு என்று தொங்குகின்றனர்..

தாய் மொழியில் பற்று இல்லாமல் இருக்கும்வரை..தமிழர்களின் தமிழ்மொழி முன்னேற்றமடையாது..


9 கருத்துகள்:

  1. பெரியார் திருக்குறளை உயர்த்திப் பிடித்தவர்
    தமிழ் மொழியில் உள்ள பகுத்தறிவற்றக் கருத்துக்களை மட்டுமே எதிர்த்தவர்

    பதிலளிநீக்கு
  2. தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது
    தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில் லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்ப தை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனு பவப் புலவர் பாடியுள்ளார்.–தந்தை பெரியார் விடுதலை (27.11.43) யில்..


    தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .
    ..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர் வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால் தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்ற வள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?
    இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரிய த்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும் படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின் றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.
    இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப்பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க் கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைப வர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப் பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்

    வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?
    தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழி யை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலி ருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கு ம் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால்பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்ப தால், பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லா மல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.- தந்தை பெரியார்

    தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக் கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...இப்படியோரு கட்டுக்கதை வரலாறுகிறதா...!!!!பேஷ்்பேஷ்்.............

      நீக்கு
    2. உமக்கு சுய புத்தியும் கிடையாது
      சொல் புத்தியும் கிடையாது
      கொஞ்சமாவது வாசிப்பு அனுபவம் இருந்திருக்க வேணும் ஆனால் வாழ்நாள் முழுவதும் உழைச்சு ஓய்ஞ்ச உம்மிடம் அதை எதிர்பார்க்க முடியாது.
      .
      ”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
      (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

      நீக்கு
  3. ”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”

    ”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”

    ”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?”
    நூல்:- தமிழும் தமிழரும்

    இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான்.
    (விடுதலை 03.03.1965)

    ”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”
    (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)

    ”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”

    ”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”
    (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

    ”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”

    ”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
    (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)


    .
    .
    எனது கருத்துக்கு ஆதாரம் தந்திருக்கின்றேன்
    உமக்கு அதை புரிந்து கொள்ளும் அறிவு , வாசிப்பு இல்லை
    இங்கே வரும் வாசிப்பு அனுபவம் உள்ள பதிவர் வேக நரி போன்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்

    பதிலளிநீக்கு
  4. ‘‘திருவள்ளுவர் திருக்குறளில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் எழுதியிருக்கிறார். பகுத்தறிவை பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். தனது மத உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார்’’ என்று விமர்சனம் செய்த அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர், இதற்கு முரண்பட்ட வகையிலும் பேசியிருக்கிறார். முரண்பட்ட வகையில் பேசுவது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயக்கரேதான். அப்படி என்ன முரண்பாடு ஏற்படும் வகையில் பேசினார் தெரியுமா? இதோ!

    14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை’’ என்றும்

    ‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

    23, 24-10-1948 அன்று ஈ. வே. ராமசாமி நாயக்கர்,

    ‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

    முதலில், திருக்குறள் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் நூல் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் ஆரிய தர்மத்தை கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் என்று பல்டி அடித்தார்.

    இரண்டாவது, திருக்குறள் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் எழுதப்பட்டது என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் பகுத்தறிவுக்கு புறம்பான கருத்துக்களுக்கு அதில் இடமில்லை என்று கூறி பல்டி அடித்தார்.

    மூன்றாவது, தனது மத உணர்ச்சியோடு எழுதினார் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக குறள் இந்து மதக் கண்டன நூல் என்று கூறி பல்டி அடித்தார்.

    20.01.1929 குடியரசு இதழில் ஈ. வே. ராமசாமி நாயக்கர், ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்’’ என்று கூறுகிறார்.

    இவ்வாறு கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று முரண்படக் கூறுகிறார்.

    முரண்பாட்டின் மொத்த உருவம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...