வெள்ளி 23 2018

நினைவலைகள்.24.

பிறன் மனை உறவு குற்றமில்லை...என்ற தீர்ப்பு .......


என்னடா இவிங்க இப்படி தீர்ப்பு சொல்றாங்கே என்று கடுப்பாகினா் செய்தி தாளை படித்தவர்கள்... அவர்களின் நோக்கம் என்ன வென்று எனக்கு தெரியாது ஆனால் நான் குடியிறுக்கும் தெருவின் நாட்டாமையின் மன்மதலீலைகளை சொல்லி மாளாது  எந்தவொரு உறவுமுறையின்றி உறவு கொண்டு தீர்த்தான்.

அவனின் லீலைகளை கண்டு அவனின் மனைவி தற்கொலை செய்து கொண்டது.  அந்த சுதந்திர புருசனுக்கு ரெம்பவும் வசதியாகப் பட்டது. மின்சார வாரியத்தில் வேலை செய்த திமிரும் தெருவின் நாட்டாமை. மற்றும் தெருக்கோயிலின் பூசாரி என்ற கெட்டப்பிலும். தன் லீலைகளை தொடர்ந்து வந்தான். தன் லீலைகளில் பங்கெடுத்த பெண்களை அவன் ஏமாற்றவில்லை காசு பணத்தோடு..நல்ல பல துணிமணிகளை எடுத்துக் கொடுத்து தன் வயப்படுத்தியிருந்தான்....  அதனால் அந்தப் பெண்கள் தன் கணவனைவிட அவன் மேல் நன்கு விசுமாசமாகவும் அவன் இட்ட வேலையையும் செய்யவும் சித்தமாகியிருந்தார்கள்..

அந்த நாட்டாமைக்கும் எனக்கும் இடப் பிரச்சினைபோது....  அவனுக்காக என்னுடன் சண்டைக்கும்  என் மீது பொய்ப்புகார் கொடுக்கவும் செய்தார்கள் இது நான் கண்ட அனுபவம். அந்தப் பெண்களின் புருசமார்களும் தங்கள் மனைவியின் செயல் தவறாக தெரிந்திருந்தாலும் அவர்களுக்காக எனக்கு எதிராக வந்து நின்றார்கள்.

தங்கள் மனைவிமார் அடுத்தவருடன் கள்ளஉறவு கொள்வதையோ.,. தங்கள் புருசமார்கள் அடுத்தவன் மனைவிமார்களுடன் கள்ள ஒறவு கொள்வதையோ..கண்டு கொள்வதுமில்லை.. அது குற்றம் என்று கருதியதுமில்லை....... இது விபச்சாரத்தைவிட பாதுகாப்பாக  ஒளிவு மறைவு இன்றி பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது...

சில படித்த. சொத்துள்ள சில புல்லுருவி புருசமார்கள்தான் தங்களுக்கு மட்டும்தான் கள்ளஉறவு பாத்தியமானது...  தங்களின் மனைவிமார்களுக்கோ...தாங்கள் வைத்துள்ள வைப்பாட்டி மார்களுக்கோ அடுத்தவருடன் கள்ள உறவில் ஈடு பட  அனுமதியில்லை. என்றும் அவர்களால் தங்கள் குடும்பம் சீரழிந்து விடும் என்று கதைவிடுகிறார்கள்.

இந்த நிலையில் நிலவும் சமூகத்தில் கற்பு, கத்திரிக்கா...புடலங்கா எல்லாம் உச்சா மன்ற அறிவித்த  தீா்ப்பினால் கள்ள உறவு குற்றமில்லை என்பது  கள்ள உறவு கொள்வோர்க்கு சிறந்த தீர்ப்பாகவும்... மற்றவர்களுக்கு  மோசமானதாக சமூகத்தை சீரழிப்பதாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்... என்னவோ சமூகம் நல்ல நிலையில் இருப்பதாக இவர்கள் பீத்திக் கொள்கிறார்கள்.

என் வழக்கின் தீர்ப்பே தமிழில் வழங்காமல் ஆங்கிலத்தில் வழங்கியதால் அந்த தீர்ப்பால்  எனக்கு தலையும் தெரியவில்லை .வாலும் புரியவில்லை. இந்த நிலையில்  “ பிறர் மனை கள்ள உறவு குற்றமில்லை” என்ற தீர்ப்பு மற்றும் எனக்கு புரிந்து விடுமா..என்ன? அந்த தீர்ப்பின் சாரம் பற்றி? அந்த தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று அறிய... மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வருகிற ஞாயிற்றுக் கிழமை ஒரு அரங்கக் கூட்டம் நடத்துகிறது. எனக்கும் கள்ள உறவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்ற போதிலும்.... என் தெரு நாட்டாமையின் மன்மதலீலைகளை தெரிந்து கொள்வதற்காகவாது நான் கலந்தாய்வில் கட்டாயம் கலந்து கொள்வேன்.



படம்

6 கருத்துகள்:

  1. நானும் வரலாம்தான் எனக்கு உள்ள உறவே இல்லை இந்த லட்சணத்துல இதை தெரிஞ்சு என்ன ஆகப்போகு'தூ' ?

    பதிலளிநீக்கு
  2. கூட்டத்தில் கலந்துகொண்டு செய்திகளைத் தாருங்கள் நண்பரே
    பிறன்மனை நோக்கா பேராண்மை என்பது வள்ளுவம்

    பதிலளிநீக்கு
  3. பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடுகிறான்
    அது போலத்தான் வாய்ப்பு கிடைத்தால் எவரையும் விடுவதில்லை என்று சில மக்கள் இருக்கின்றார்கள்.
    அவர்களை சொல்லியும் குற்றமில்லை.
    ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா!!

    பதிலளிநீக்கு
  4. //இந்த நிலையில் நிலவும் சமூகத்தில் கற்பு, கத்திரிக்கா...புடலங்கா எல்லாம் உச்சா மன்ற அறிவித்த தீா்ப்பினால் கள்ள உறவு குற்றமில்லை என்பது கள்ள உறவு கொள்வோர்க்கு சிறந்த தீர்ப்பாகவும்... மற்றவர்களுக்கு மோசமானதாக சமூகத்தை சீரழிப்பதாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்... என்னவோ சமூகம் நல்ல நிலையில் இருப்பதாக இவர்கள் பீத்திக் கொள்கிறார்கள்.//
    ஏற்கெனவே சமூகம் புனிதமான நிலையில் உள்ளதாகவும், நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டதால் இனிதான் பலர் கள்ள உறவு கொள்ள போவதாகவும், சமூகம் சீரழிய போவதாகவும் பலர் அலற தொடங்கியுள்ளதை நானும் கண்டேன்.
    இந்தியாவில் புனித முக்காடு போட்டு மூடிக் கொண்டு கள்ள உறவு மோசமான நிலையிலேயே இதுவரை நடை பெற்றே வந்துள்ளது.அவற்றை எல்லாம் வைத்து தங்கள் குடும்பத்தை கூட நம்ப முடியாத சந்தேக பேர்வழிகளே இப்படி எல்லாம் பீத்திக் கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...