ஞாயிறு 25 2018

நினைவலைகள்-25.

என்னை செத்துப்போ என்றவன்.........!!!!!!!!!!


ஆள் நடமாட்டம் க்கான பட முடிவு




வாரத்தில் மூன்று
நாள் அல்லது
நான்கு நாள்
அந்த வழியே
சென்று வந்தேன்.

எந்த பிரச்சினையும்
இல்லை இன்று
அவ் வழியே
சென்ற போது
நாலு ஐந்துபேர்
வழி மறித்தார்கள்
ஆட்கள் நடமாடிக்
 கொண்ட போது
கடைகள் திறந்து
இருந்த போதும்...

பேண்ட் பையில
பணம் இல்லை
செல்லை தவிர
மறித்தவர்கள் ஒரு
புன்னகையுடன் கை
நீட்டி பின்னால்
 பார்க்கச் சொன்னார்கள்

இரு சக்கர
வாகனத்தின் சைடு
ஸ்டாண்டை போட்டு
நிதனமாக திரும்பி
பார்த்தேன் ஒரு
தடியான ஆள்
கையை ஆட்டி
தன்னருகில் வருமாறு
சைகை செய்தார்

அவர் அருகில்
சென்று நின்றேன்
என் பெயர்
 சொல்லி நல்லா
இருக்கிறாயா என
நலம் விசாரித்தார்

இவர் யாரென்று
தெரியவில்லை ஒரே
குழப்பம்  என்னை
மேலும் கீழும்
பார்த்துவிட்டு ஊதாம
வத்தாம அப்படியே
இ்ருக்கே.. எத்தன
பிள்ள இருக்கு

பிள்ள இல்ல
என்றதும் கல்யாணம்
ஆகி எத்தன
வருசம் ஆச்சு
என்னது கலியாணம்
ஆகலியா  டேய்
என்னவிட மூத்தவன்டா
நிய்யி.... கலியாணம்
முடிக்காம இத்தன
வருசம் என்னடா
செய்து கிட்டு
இருந்த அடப்பாவி.

சின்ன வீடு
பெரிய வீடு
குடி கூத்தி
அதுவும் இல்லயா....
எதுக்குடா இருக்க
செத்துப் போடா

சரி என்ன
யாருன்னு தெரியுதா..
தெரியலையா..நாசமா
போச்சு...நல்லா
என்னப் பாத்து
சொல்லு  யோசன
பன்னி சொல்லுடா..

சுற்றி நின்றவர்கள்
ஹா ஹா வென்று
சிரித்து விட்டு
என்னையே பார்த்தார்கள்
எனக்கு ஒரு
க்ளுவும் கிடைக்கவில்லை





9 கருத்துகள்:

  1. தங்களை அறிந்தவராகத்தான் இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரின் பள்ளி நண்பன் நான் என்று பின்புதான் தெரிந்தது நண்பரே...!!

      நீக்கு
  2. க்ளு இன்னும் கிடைக்கவில்லையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசிவரைக்கும் கிடைக்கவில்லை..நண்பரே..பின் அவரேதான் என்மீது இரக்கப்பட்டு நான் அவரின் பள்ளி நண்பன் என்று சொன்னார்..

      நீக்கு
  3. சின்ன வீடு
    பெரிய வீடு
    குடி கூத்தி
    அதுவும் இல்லயா....
    எதுக்குடா இருக்க
    செத்துப் போடா இப்படியாக சிந்திக்கும் இந்த ஜென்மத்தில் மனித உருவில் நடமாடும் இந்த நபரை பற்றி க்ளு கிடைக்காததே உங்க அதிஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா்ட்டு நடப்பை கண்டுதான் அப்படி கேட்டு இருக்கிறார்.. நண்பரே.... கடைசி வரைக்கும் அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை...அவராகத்தான் தன்னைப்பற்றி சொன்னார்.

      நீக்கு
    2. நண்பரே,
      தமிழர்களின் நாட்டு நடப்பு என்பது உனக்கு சின்ன வீடு இருக்கா? உனக்கு பெரிய வீடு இருக்கா?
      உனக்கு குடி கூத்தி அதுவும் இல்லயா?
      இவை இல்லாவிட்டால் .......எதுக்குடா இருக்க செத்துப் போடா...
      என்ன ஒரு ஆரோக்கியமான சமுதாயம்?

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. பல சமயங்களில் இத்தகைய தர்மசங்கடமான நிலை ஏற்படுவதுண்டு... கடைசியில் ஒரு வழியாக அவர்களே தான் யாரென்று சொல்லி விடுவார்கள். அதுவரை அடிவயிறு ஏதோ செய்தபடியே இருக்கும்.. அவர் கேட்ட கேள்விகள் தான் சமூகத்தை தோலுரித்து தொங்கவிட்டு விட்டது..

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...