வியாழன் 29 2018

நினைவலைகள்-27.





கதை கேளு..கதைகேளு..நாட்டு நடப்பு கதைகேளு....





ஜனநாயகம் க்கான பட முடிவு







உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிக்கு சென்றபோது.. இடைவேளைக்கு பின்புதான் வழக்கு விசாரனைக்கு வரும் என்று வக்கீல் அய்யா சொன்னதைக்கேட்டு... உட்காருவதற்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார் அவர்.

அவரக்கு அருகில் வந்தமர்ந்த இருவர் . இருவரில் ஒருவர் பேசுவதை மற்றவர் ஆர்வமுடன்  கேட்டுக் கொண்டு  இருந்தார்..  அவர்கள் இருவரையும் பார்வையால் ஒரு முறை பார்த்துவிட்டு..தன் பையில் கொண்டுவந்திருந்த ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியவர்.

சிறிது நேரத்தில் வாசிப்பில் மனம் செல்லாமல்  அருகில் அமர்ந்திருந்தவர் சொல்லிய கதையில் கவனம் சென்றது.. அவர்களை பார்த்தும் பார்க்காததுமாக..இடையில். கதையை கேட்கத் தொடங்கினார்..

2014-ல் ஒரு ஏழைத்தாயின் மகன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது அன்று அரங்கேற்றிய நாடகங்களை இப்போது சற்று நினைவு படுத்தி பாருங்கள் என்றவர் தொடர்ந்து அவரே கதையைத் தொடர்ந்தார்.

“ஊழற்றவர்”  “ உறுதியானவர்” விரைந்து முடிவெடுப்பவர், மந்திரிகளையும் அதிகாரிகளையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டக்கூடியவர், ஒவ்வொரு நாளும் அவர்கள் என்ன உண்கிறார்கள். என்ன உடுத்துகிறார்கள். என்பது வரை கண்காணித்து இயக்கக் கூடியவர்.” என்றெல்லாம்  அனைத்து முதலாளிகளின்  ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்ட ஏழைத்தாயின் மகனான மோடியின் பிம்பம் காற்று போன பலூனாக மாறி வருகிறது என்று விட்டு அதன் காரணங்களை வரிசையாக பட்டியலிட்டார்.

சி.பி.ஐ.இயக்குநர் அலோக் வர்மா, “பிரதமர் அலுவலகம் சட்டவிரோதமாகவும் உள் நோக்கத்தடனும் தன்னை பதவியிலிருந்து அகற்றியிருப்பதாக” ஏழைத்தாயின் மகன் அரசின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

“ ரிசர்வ் வங்கி யின் சுதந்திரத்தில் அரசு தலையிட்டால் அர்ஜென்டினாவைப் போல் பொருளாதார- அரசியல் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் ” என்று ஏழைத்தாயின் மகன் அரசை எச்சரிக்கிறார். ரிசர்வ் வங்கியின் தணை ஆளுநர் விரால் ஆச்சார்யா,

“வராக் கடன் என்று பல்லாயிரம் கோடி நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலைக் கொடுக்குமாறு” ரிசர்வ் வங்கி ஆளுநர்க்கும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகத்துக்கும் நோட்டீசு அனுப்புகிறார் தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யா..... இது போன்ற ஜனநாயகத்தால் தேசத்துக்கு ஆபத்து என்றபோது

 கேட்டுக் கொண்டே வந்தபோது.. கோடாங்கி ஆடிய அவருடைய  தலை ஒரு கனம் ஆட்டத்தை நிறுத்தியது  அடுத்து கதையின் தொடர்ச்சியை  கேட்க ஆவலாக இருந்த போது இடைவேளைக்கு பின் விசாரணை தொடர்வதற்க்கு அறிவிப்பாக மணி ஒலித்தது....

கதை சொன்னவரும் கதை கேட்டவர்களும் பாரபரப்பாக அவ்விடத்தை விட்டு எழுந்தனர்.....



4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...