சனி 11 2023

ஊடகங்களின் சாதிவெறி....



இடைநிலை சாதியை சேர்ந்த பெண்களோ..மற்றும் உயர்வகை சாதியை சேர்ந்த பெண்களோ?? மனித மிருகங்களின் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கபட்டு கொல்லப்பட்டால்... ஊடகங்கள் சாதிப்பற்றுடன் உடனே அந்த நிகழ்வை  வெளிச்சத்திற்க கொண்டு வந்து ஒட்டு மொத்த சமூகத்தை போராட வைக்கும்

இதற்கு உதாரணமாக செல்வதென்றால் நிர்பயா சம்பவத்தை சொல்லலாம்.

ஆனால். ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கபட்டு கொல்லப்பட்டால் இந்த ஊடகங்கள் கண்டு கொள்வதேயில்லை...

 2012-ல் டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்த அதே ஆண்டில் 1574 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்கள். 651 தலித் மக்கள் கொல்லப்பட்டார்கள். இதை எந்த உடகங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரவில்லை..


தலித் மக்கள் மக்கள் மீது நடந்து வரும் இத்தகைய வன்கொடுமைகள் யாவும் பார்ப்பனர் அல்லாத சூத்திர சாதியினர்களால்தான் நடத்தப்படுகின்றன. ஊடகங்கள் மூச்சே விடுவதில்லை..


நடப்பு  நிகழ்வைக்கூட  பாருங்கள்.. ஊடகங்களின் யோக்கியத்தை.. புரியும்


வெளிநாட்டு ஊடகம் துப்பறிந்து வெளியிட்ட ஆவணபடத்தை வெளியிடாமல்  இந்திய ஊடகங்கள் கள்ள மௌனம் காக்குகின்றன்... பொதுவான நேர்மையான அனைத்து மக்களுக்குமான  செய்திகளை  தருவதாக இன்னும் நம்பி கொண்டு இருப்பதுதான் முட்டாள்தனமாகும்...


 

1 கருத்து:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...